தேடல்


20:45
20:45 قَالَا رَبَّنَاۤ اِنَّـنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَاۤ اَوْ اَنْ يَّطْغٰى‏
قَالَا இருவரும் கூறினர் رَبَّنَاۤ எங்கள் இறைவன் اِنَّـنَا நிச்சயமாக நங்கள் نَخَافُ பயப்படுகிறோம் اَنْ يَّفْرُطَ அவசரப்படுவதை عَلَيْنَاۤ எங்கள் மீது اَوْ அல்லது اَنْ يَّطْغٰى‏ வரம்பு மீறுவதை
20:45. “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
20:70
20:70 فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏
فَاُلْقِىَ ஆக, விழுந்தனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனைக்கொண்டு هٰرُوْنَ ஹாரூன் وَمُوْسٰى‏ இன்னும் மூஸாவுடைய
20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
20:90
20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ‌ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு هٰرُوْنُ ஹாரூன் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் يٰقَوْمِ என் சமுதாயமே اِنَّمَا فُتِنْتُمْ நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள் بِهٖ‌ۚ இதைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக رَبَّكُمُ உங்கள் இறைவன் الرَّحْمٰنُ பேரருளாளன் தான் فَاتَّبِعُوْنِىْ ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள் وَاَطِيْعُوْۤا கீழ்ப்படியுங்கள் اَمْرِىْ‏ என் கட்டளைக்கு
20:90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
20:92
20:92 قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏
قَالَ கூறினார் يٰهٰرُوْنُ ஹாரூனே مَا எது مَنَعَكَ உம்மை தடுத்தது اِذْ رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தபோது ضَلُّوْٓا ۙ‏ அவர்கள் வழிதவறி விட்டார்கள்
20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
20:94
20:94 قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏
قَالَ அவர் கூறினார் يَابْنَؤُمَّ என் தாயின் மகனே لَا تَاْخُذْ பிடிக்காதே بِلِحْيَتِىْ எனது தாடியையும் وَلَا بِرَاْسِىْ‌ۚ என் தலையையும் اِنِّىْ خَشِيْتُ நிச்சயமாக நான் பயந்தேன் اَنْ تَقُوْلَ நீர் கூறிவிடுவதை فَرَّقْتَ பிரித்து விட்டாய் بَيْنَ மத்தியில் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு وَلَمْ تَرْقُبْ நீர் கவனிக்காமல் قَوْلِىْ‏ என் கூற்றை
20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
21:48
21:48 وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسٰى وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِيَآءً وَّذِكْرًا لِّـلْمُتَّقِيْنَۙ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனுக்கு الْفُرْقَانَ பிரித்தறிவிக்கக்கூடிய وَضِيَآءً வெளிச்சத்தை وَّذِكْرًا ஓர் அறிவுரையை لِّـلْمُتَّقِيْنَۙ‏ இறையச்ச முள்ளவர்களுக்குரிய
21:48. இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
23:45
23:45 ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏
ثُمَّ பிறகு اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூஸாவையும் وَاَخَاهُ இன்னும் அவருடையசகோதரர் هٰرُوْنَ ۙ ஹாரூனையும் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளைக் கொண்டும் وَسُلْطٰنٍ இன்னும் ஆதாரத்தைக் கொண்டும் مُّبِيْنٍۙ‏ தெளிவான
23:45. பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
25:35
25:35 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِيْرًا‌ ۖ‌ ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவுக்கு الْكِتٰبَ வேதத்தை وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் مَعَهٗۤ அவருடன் اَخَاهُ அவரது சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை وَزِيْرًا‌ ۖ‌ ۚ‏ உதவியாளராக
25:35. மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
26:13
26:13 وَيَضِيْقُ صَدْرِىْ وَلَا يَنْطَلِقُ لِسَانِىْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ‏
وَيَضِيْقُ இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும் صَدْرِىْ என் நெஞ்சம் وَلَا يَنْطَلِقُ இன்னும் பேசாது لِسَانِىْ என் நாவு فَاَرْسِلْ ஆகவே, நீ அனுப்பு اِلٰى هٰرُوْنَ‏ ஹாரூனுக்கு
26:13. “என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
26:48
26:48 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
رَبِّ இறைவனை مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ‏ இன்னும் ஹாரூனுடைய
26:48. “அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.