ஆட்சி
2:102   وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
2:102. மேலும், அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால், ஸுலைமான் நிராகரிக்கவில்லை; ஷைத்தான்கள்தாம் நிராகரித்தனர்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபிலோ(ன் என்னும் ஊரி)னில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு வானவர்களுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால், அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீ நிராகரிப்பவனாகிவிடாதே!" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இந்த சூனியத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவனுக்கும், அவன் மனைவிக்குமிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; எனினும், அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்கமுடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எவ்வித நன்மையும் தராததையுமே கற்றுக்கொண்டார்கள்; இதனை (சூனியத்தை) விலைகொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்; அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக்கொண்டது கெட்டதாகும்; இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
2:247   وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவருக்கு எவ்வாறு ஆட்சியுரிமை ஏற்படும்? ஆட்சிக்கு அவரைவிட நாங்கள்தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும் அறிவிலும், உடலி(ன் வலிமையி)லும் விசாலத்தை அதிகமாக்கியுள்ளான்; அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தையும் வழங்குவான்; இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
2:251   فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
2:251. இவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு (ஜாலூத்தின் படையை) முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் அவருக்கு அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; இன்னும், மனிதர்களை அவர்களில் சிலரைக்கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால் பூமி சீர்கெட்டிருக்கும்; ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்மீது அருளுடையோனாக இருக்கின்றான்.
3:26   قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன; அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்."
4:53   اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًا ۙ‏
4:53. இவர்களுக்கு ஆட்சியில் ஏதேனும் பங்கு இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்கமாட்டார்கள்.
4:54   اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம், நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
12:101   رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
12:101. என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஆட்சியிலிருந்து (ஒரு பங்கைத்) தந்து, கனவுகளின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிரார்த்தித்தார்).
20:120   فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى‏
20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை உண்டாக்கி, "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.
38:20   وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ‏
38:20. மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும், அவருக்கு ஞானத்தையும், தெளிவான விளக்கத்தையும் அளித்தோம்.
38:35   قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
38:35. "என் இறைவனே! என்னை மன்னிப்பாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடையமுடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெரும் கொடையாளியாவாய்" எனக் கூறினார்.
40:29   يٰقَوْمِ لَـكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظٰهِرِيْنَ فِى الْاَرْضِ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِيْكُمْ اِلَّا مَاۤ اَرٰى وَمَاۤ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ‏
40:29. "என்னுடைய சமூகத்தாரே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது: (நீங்கள்தாம் எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும், அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்துவிட்டால், நமக்கு உதவிசெய்பவர் யார்?" (என்றும் கூறினார்:) அதற்கு: "நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்குக் காண்பிக்கவில்லை" என ஃபிர்அவன் கூறினான்.
43:51   وَنَادٰى فِرْعَوْنُ فِىْ قَوْمِهٖ قَالَ يٰقَوْمِ اَلَيْسَ لِىْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِىْ مِنْ تَحْتِىْ‌ۚ اَفَلَا تُبْصِرُوْنَؕ‏
43:51. மேலும், ஃபிர்அவன் தன் சமூகத்தாரிடம் பறைசாற்றினான்: "என்னுடைய சமூகத்தாரே! இந்த எகிப்தின் அரசாங்கம், என்னுடையதல்லவா? என(து மாளிகை)க்குக் கீழே ஓடிக்கொண்டிருக்கும் நதி(யின் இக்கால்வாய்)களும்? (என் ஆட்சிக்கு உட்பட்டவை; இவற்றையெல்லாம்) நீங்கள் பார்க்கவில்லையா?"
76:20   وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا‏
76:20. அன்றியும், அங்கு நீர் பார்த்தீராயின், இன்பபோக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்குக் காண்பீர்.