அசத்தியம்
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால், புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும், வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும், அடிமைகளின் மீட்புக்காகக் கொடுத்தவரும்; இன்னும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து, இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், பொறுமையுடன் இருந்தவர்களுமாவர்; அத்தகையோர்தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள்.
3:71 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَـقَّ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
3:71. "வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலந்துவிடுகிறீர்கள்? இன்னும், நீங்கள் அறிந்துகொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்?"
8:8 لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَۚ
8:8. மேலும், குற்றவாளிகள் வெறுத்தபோதிலும், சத்தியத்தை நிலைநாட்டிடவும், அசத்தியத்தை அழிப்பதற்காகவும் (இவ்வாறு நாடுகிறான்).
13:17 اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا ؕ وَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَآءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَـقَّ وَالْبَاطِلَ ؕ فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ
13:17. அவன் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக்கொண்டு) ஓடுகின்றன. அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்துசெல்கிறது. (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து அவர்கள் உருக்கும்போதும் அதைப்போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான். எனவே, நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய்விடுகிறது. ஆனால், மனிதர்களுக்குப் பலன் அளிக்கக்கூடியதோ, பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
17:81 وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
17:81. (நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியமானது அழிந்துபோவதேயாகும்" என்று கூறுவீராக!
21:18 بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைக் கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், அது (சத்தியமானது) அதை (அசத்தியத்தை) சிதறடித்து விடுகிறது; பின்னர், (அசத்தியம்) அழிந்தே போய் விடுகிறது; ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்குக் கேடுதான்.
47:3 ذٰ لِكَ بِاَنَّ الَّذِيْنَ كَفَرُوْا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِيْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ
47:3. இது ஏனெனில், நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாக தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்துள்ள) சத்தியத்தையே பின்பற்றுகிறார்கள்; இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களாக (கூறி விள)க்குகிறான்.