ஆயிரம்
2:96 وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ ۛۚ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا ۛۚ يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
2:96. அவர்கள் மற்ற மனிதர்களைவிட - இணை வைப்பவர்களையும்விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒருவர் தாம் ஆயிரம் ஆண்டுகள் வயதளிக்கப்பட வேண்டுமே என்று விரும்புவார்; (அவ்வாறு) அவர் வயதளிக்கப்படுவது (நரக) வேதனையை விட்டும் அவரைத் தூரமாக்கி வைக்கக்கூடியதாக இருக்காது; இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாக இருக்கின்றான்.
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
8:65. நபியே! நீர் நம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொள்வார்கள்; இன்னும், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் நிராகரிப்பவர்களிலிருந்து ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்: (இது) நிச்சயமாக அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருக்கின்ற காரணத்தினாலாகும்.
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًاؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து இப்பொழுது அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கிவிட்டான்; எனவே, உங்களில் பொறுமையுடைய நூறுபேர் இருந்தால், அவர்கள் இருநூறுபேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால், அல்லாஹ்வின் உத்தரவுக் கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது அவர்கள் வெற்றி கொள்வார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
22:47 وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ
22:47. "நபியே! (வேதனை) இன்னும் வரவில்லையே!" என்று வேதனையை அவர்கள் உம்மிடம் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்யவே மாட்டான். மேலும், உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
29:14 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَلَبِثَ فِيْهِمْ اَ لْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ
29:14. மேலும், திடமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது ஆண்டுகள் குறைய ஆயிரம் ஆண்டுகள் வசித்தார்; ஆனால், அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக்கொண்டது.
32:5 يُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَى الْاَرْضِ ثُمَّ يَعْرُجُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ
32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே நிர்வகிக்கிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும் - அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
97:3 لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும்.