அருளாளன் (அர்ரஹ்மான்)
13:30 كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِىْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّـتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَ هُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِؕ قُلْ هُوَ رَبِّىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ
13:30. (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம்மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால், இவர்களோ அளவற்ற அருளாளனை நிராகரிக்கின்றனர்; அவர்களிடம், "அவனே என் இறைவன்; அவனைத்தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை; அவனையே நான் (முழுமையாகச்) சார்ந்துள்ளேன்; அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது" என்று நீர் கூறுவீராக!
17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا
17:110. "நீங்கள் (அவனை) 'அல்லாஹ்' என்று அழையுங்கள்; அல்லது 'அர்ரஹ்மான்' (அளவற்ற அருளாளன்) என்றழையுங்கள்: எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக! இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர்; மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக!
19:18 قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நான் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் காவல் தேடுகிறேன்; நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (நெருங்காதீர்!)" என்று அவர் கூறினார்.
19:26 فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا ۚ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ۚ
19:26. "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்றுநீரைப்) பருகி, கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர், மனிதர்களில் எவரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாக அளவற்ற அருளாளனுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின், இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசவே மாட்டேன்' என்று கூறும்" (என்றும் கூறினார்).
19:44 يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا
19:44. என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவன்.
19:45 يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا
19:45. "என் அருமைத் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்துள்ள வேதனை உங்களைத் தொட்டுவிடுமென்றும், அப்போது நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகிவிடுவீர் என்றும், நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்" (என்றார்).
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக்கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் செலுத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள்; இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அளவற்ற அருளாளனின் வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
19:61 جَنّٰتِ عَدْنٍ اۨلَّتِىْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِيًّا
19:61. நிலையான சொர்க்கங்களில் (அவர்கள் பிரவேசிப்பார்கள்); அது எத்தகையதென்றால், அளவற்ற அருளாளன், தன் அடியார்களுக்கு (அவை) மறைவாக இருக்கும் நிலையில் வாக்களித்துள்ளான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேற்றப்படக்கூடியதாகும்.
19:69 ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا ۚ
19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாகப் பிரித்து விடுவோம்.
19:75 قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَيَـعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا
19:75. யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையைக் காணும் வரை, அளவற்ற அருளாளன் அவர்களுக்குக் கால அவகாசத்தை நீட்டிவிடுகிறான்; அப்பொழுது, இடத்தால் கெட்டவர் யார்? படையால் பலவீனமானவர் யார்? என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே) நீர் கூறுவீராக!
19:78 اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ
19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் தெரிந்து கொண்டானா? அல்லது, அளவற்ற அருளாளனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
19:85 يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا ۙ
19:85. (இறை) அச்சமுடையவர்களை அளவற்ற அருளாளனிடம் (கண்ணியமிக்க விருந்தினர்) குழுவாக நாம் ஒன்று திரட்டும் நாளில் -
19:87 لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ
19:87. அளவற்ற அருளாளனிடம் உடன்படிக்கை செய்துகொண்டோரைத் தவிர, எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
19:88 وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ
19:88. இன்னும், "அளவற்ற அருளாளன் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
19:91 اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا ۚ
19:91. அவர்கள் அளவற்ற அருளாளனுக்கு ஒரு குமாரன் உண்டென்று வாதிடுவதினால் (அவை நிகழக் கூடும்).
19:96 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا
19:96. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அளவற்ற அருளாளன் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
20:5 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
20:5. அளவற்ற அருளாளன் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அரியாசனத்தின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்.
20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ
20:90. (இதற்கு) முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தவரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டிருக்கிறீர்கள்; நிச்சயமாக உங்களுடைய இறைவன் அளவற்ற அருளாளனே ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள்; இன்னும், என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்.
20:108 يَوْمَٮِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗؕ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا
20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும், (அவ்வேளை) அளவற்ற அருளாளனுக்கு (அஞ்சி எல்லாச்) சப்தங்களும் ஒடுங்கிவிடும்; கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
21:36 وَاِذَا رَاٰكَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ يَذْكُرُ اٰلِهَـتَكُمْۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ
21:36. இன்னும், (நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், "உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?" என்று (தங்களுக்குள் பேசிக்கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும், அவர்கள் அளவற்ற அருளாளனுடைய நினைவை நிராகரிப்பவர்களாக இருக்கின்றனர்.
21:42 قُلْ مَنْ يَّكْلَـؤُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ
21:42. "உங்களை இரவிலும், பகலிலும் அளவற்ற அருளாளனின் வேதனையிலிருந்து பாதுகாக்கக் கூடியவர் யார்?" என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
21:112 قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَـقِّؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ
21:112. "என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக!" என்று கூறினார். "எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன்; நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்."
25:26 اَلْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِؕ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்குத்தான்; மேலும், நிராகரிப்பாளர்களுக்கு அது கடுமையான நாளாகவும் இருக்கும்.
25:59 اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا
25:59. அவனே வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்; அவன்தான் அளவற்ற அருளாளன்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப்பற்றிக் கேட்பீராக!
25:60 وَاِذَا قِيْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۩
25:60. இன்னும், "அளவற்ற அருளாளனுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், "அளவற்ற அருளாளன் என்பவன் யார்? நீர் கட்டளையிடக்கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?" என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
25:63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
25:63. இன்னும், அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள் அவர்களுடன் பேச(வா)தாட முற்பட்டால், "சாந்தியுண்டாகட்டும்" என்று சொல்லி (விலகிப் போய்)விடுவார்கள்.
26:5 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ
26:5. இன்னும், அளவற்ற அருளாளனிடமிருந்து புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
27:30 اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
27:30. நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும், நிச்சயமாக இது: 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்' என்று (துவங்கி) இருக்கிறது.
36:11 اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சுகிறாரோ அவரைத்தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான (நற்)கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக!
36:15 قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ
36:15. (அதற்கு அம்மக்கள்) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அளவற்ற அருளாளன் (உங்களுக்கு) எதனையும் இறக்கிவைக்கவில்லை; நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.
36:23 ءَاَ تَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّىْ شَفَاعَتُهُمْ شَيْئًا وَّلَا يُنْقِذُوْنِۚ
36:23. "அவனையன்றி வேறு கடவுள்களை நான் எடுத்துக் கொள்வேனோ? அளவற்ற அருளாளன் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது; இவை என்னை விடுவிக்கவும் முடியாது."
36:52 قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ
36:52. "எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்; "அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
41:2 تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِۚ
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.
43:17 وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ
43:17. அளவற்ற அருளாளனுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையைக்) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கறுத்துப்போய் விடுகிறது; மேலும், அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
43:19 وَجَعَلُوا الْمَلٰٓٮِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْــٴَـــلُوْنَ
43:19. அன்றியும், அளவற்ற அருளாளனின் அடியார்களாகிய வானவர்களை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்களை (நாம்) படைக்கும்போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
43:20 وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَؕ
43:20. மேலும், "அளவற்ற அருளாளன் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்கமாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
43:33 وَلَوْلَاۤ اَنْ يَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَـعَلْنَا لِمَنْ يَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُيُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُوْنَۙ
43:33. (நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு) மனிதர்கள் (நிராகரிக்கும்) ஒரே சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீடுகளுக்குரிய முகடுகளையும், அவற்றுக்கு அவர்கள் ஏறிச்செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
43:36 وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ
43:36. எவனொருவன் அளவற்ற அருளாளனின் நல்லுபதேசத்தைப் புறக்கணித்துவிடுகிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானைச் சாட்டிவிடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகிவிடுகிறான்.
43:45 وَسْــٴَــلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً يُّعْبَدُوْنَ
43:45. நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னர் நாம் அனுப்பியவர்களிடம், அளவற்ற அருளாளனையன்றி வணங்கப்படும் (வேறு) தெய்வங்களை நாம் ஆக்கினோமா? என்று நீர் கேட்பீராக!
43:81 قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ
43:81. (நபியே!) நீர் கூறும்: "அளவற்ற அருளாளனுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால் (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"
50:33 مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ
50:33. எவர் மறைவிலும் அளவற்ற அருளாளனை அஞ்சி (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வந்தாரோ (அவருக்கு இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
55:12 وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُۚ
55:12. தோலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர், புற்பூண்டு ஆகிய) வகைகளும் இருக்கின்றன.
59:22 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
59:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
67:3 الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ ؕ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான்; (மனிதனே!) அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்தக் குறையையும் நீ காணமாட்டாய்; பின்னும், (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஒரு பிளவை நீ காண்கிறாயா?
67:19 اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்குமேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக்கொண்டிருக்கவில்லை; நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
67:20 اَمَّنْ هٰذَا الَّذِىْ هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِىْ غُرُوْرٍۚ
67:20. அன்றியும், அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எவர் உங்களுக்குப் படைத்துணையாக இருந்து, உதவி செய்வார்? நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
67:29 قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
67:29. (நபியே!) நீர் கூறும்: "(எங்களைக் காப்பவன்) அவனே - அளவற்ற அருளாளன்: அவன்மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"
78:37 رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۚ
78:37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ளவற்றிற்கும் இறைவன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவனிடம் பேச அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38 يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا
78:38. (ஜிப்ரீலாகிய) ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள்; அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.