1019. وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ أَوْ أَهْلِهِ، فَهُوَ عَاهِرٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ، وَكَذَلِكَ اِبْنُ حِبَّانَ.
1019. ``தன் எஜமானர்கள் அல்லது வீட்டாரிடம் அனுமதி பெறாமல் திருமணம் செய்கிற அடிமை விபச்சாரம் புரிபவனாவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ இதனை `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளனர். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.
1020. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1020. ``ஒரு பெண்ணையும் அவளின் அத்தையையும், ஒரு பெண்ணையும் அவளின் சிற்றன்னையையும் சம காலத்தில் மணமுடிக்க வேண்டாம் (சமகாலத்தில் மனைவியாக வைத்திருக்க வேண்டாம்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1021. وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يُنْكَحُ} رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لَهُ: {وَلَا يَخْطُبُ}. وَزَادَ اِبْنُ حِبَّانَ: {وَلَا يُخْطَبُ عَلَيْهِ}.
1021. ``இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்து கொள்வதும் (பிறருக்கு) திருமணம் செய்து வைப்பதும் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ``(நிக்காஹ்) உரையாற்ற வேண்டாம் என்றும் இப்னு ஹிப்பானில் அவர் தனக்காகவோ, பிறருக்காவோ பெண் பேசவும் கூடாது; அவரிடம் பெண் கேட்கவும் கூடாது'' என்றும் உள்ளது.
1022. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {تَزَوَّجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1022. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா(ரலி) அவர்களை நிக்காஹ் செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1023. وَلِمُسْلِمٍ: عَنْ مَيْمُونَةَ نَفْسِهَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ}.
1023. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டாத (ஹலாலான) நிலையில்தான் என்னை மணந்தார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்கள் என ஓர் அறிவிப்பு முஸ்லிமில் உள்ளது.
குறிப்பு: 1021 ஆம் ஹதீஸிற்கு விளக்கமாகவே 1022 ஆம் ஹதீஸ் உள்ளது; இதுவே சரியானதாகும்.
1024. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ، مَا اِسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1024. ``எதன் வாயிலாக மறைவிடங்களை (உங்களுக்கு) அனுமதிக்கப்பட்டதாக நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களோ அந்த மஹர் தொகைதான் நிபந்தனைகளிலேயே நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி வாய்ந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1025. وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَخَّصَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أَوْطَاسٍ فِي الْمُتْعَةِ، ثَلَاثَةَ أَيَّامٍ، ثُمَّ نَهَى عَنْهَا} رَوَاهُ مُسْلِمٌ.
1025. `அவ்தாஸ்' போரின்போது மூன்று நாள்களுக்கு முத்ஆ (தற்காலிகத் திருமணம்) செய்து கொள்ள இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள். பின்னர், அதைத் தடை செய்தார்கள் என ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1026. وَعَنْ عَلَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُتْعَةِ عَامَ خَيْبَرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1026. இறைத்தூதர்(ஸல்) `முத்ஆ' திருமணத்தை கைபர் போர் நடந்த ஆண்டில் தடைசெய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1027. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ، أنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَآئِ، وَعَنْ أكْلِ الحُمُرِ الأهِلِيَّةِ يَوْمَ خَيْبَرٍ. أخْرَجَهُ السَّبْعَةُ إلاَّ أبَا دَاؤد.
1027. பெண்களை `முத்ஆ' (தற்காலிகமாக) மணப்பதையும், நாட்டுக் கழுதையை உண்பதையும் இறைத்தூதர்(ஸல்) கைபர் போரின்போது தடைசெய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லீம், அஹ்மத் மற்றும் நஸயீ
1028. وَعَنْ رَبِيْعِ ابْنِ سَبْرَةَ، عَنْ أبِيْهِ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنِّيْ كُنْتُ أذِنْتُ لَكُمْ فِي الإِسْتِمْتَاعِ مِنَ النِّسآءِ، وَ إنَّ اللهَ قَدْ حَرَّمَ ذَلِكَ إلَى يَوْمِ الْقِيَامَةِ، فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَيْئٌ فَالْيُخْلِيْ سَبِيْلَهَا، وَلاَ تَأْخُذُوْا مِمَّا آتَيْتُمُوْهُنَّ شَيْئًا). أخْرَجَهُ مُسْلِمٌ وَأبُو دَاؤُدَ وَالنَّسَائِي وَابْنُ مَاجَةَ وَأحْمَدُ وَابْنُ حِبَّانَ.
1028. ``பெண்களை `முத்ஆ' திருமணம் புரிவதை நான் உங்களுக்கு ஆகுமானதாக்கி இருந்தேன். இப்போது மறுமை நாள் வரை `அல்லாஹ அதனைத் தடைசெய்து விட்டான். எனவே, யாரிடமேனும் அப்படி எதுவும் இருந்தால் அவர் அவளின் வழியில் அவளை விட்டுவிடட்டும். அவளுக்குக் கொடுத்ததிலிருந்து எதையும் (திரும்ப) வாங்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ரபீஃ இப்னு ஸப்ரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.
1029. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1029. மூன்று தலாக் நிறைவேறிய பின்பு, அதைத் திரும்பப் பெறுவதற்காக, பெயரளவில் அப்பெண்ணைத் திருமணம் செய்பவரையும், அவளை மீண்டும் மணக்கும் முந்தைய கணவனையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1030. وَفِي الْبَابِ: عَنْ عَلِيٍّ أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ.
1030. அலீ(ரலி) வாயிலாக அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜாவில் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
1031. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَنْكِحُ الزَّانِي الْمَجْلُودُ إِلَّا مِثْلَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
1031. ``கசையடி கொடுக்கப்பட்ட ஆண் விபச்சாரி தன்னைப் போன்றோருடன் அல்லாமல் திருமணம் செய்யமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்.
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1032. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: {طَلَّقَ رَجُلٌ اِمْرَأَتَهُ ثَلَاثًا، فَتَزَوَّجَهَا رَجُلٌ، ثُمَّ طَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، فَأَرَادَ زَوْجُهَا أَنْ يَتَزَوَّجَهَا، فَسُئِلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: "لَا. حَتَّى يَذُوقَ الْآخَرُ مِنْ عُسَيْلَتِهَا مَا ذَاقَ الْأَوَّلُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.بَابُ الْكَفَاءَةِ وَالْخِيَارِ
1032. ஒருவர் தன் மனைவியை மும்முறை தலாக் செய்தார். அவரை மற்றொருவர் மணமுடித்து உடலுறவு, கொள்வதற்கு முன்னரே, தலாக் செய்தார். பின்னர், அப்பெண்ணை முதல் கணவர் (மறுபடியும்) திருமணம் செய்ய விரும்பினார். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``இல்லை. முதலாமவர் அவளிடமிருந்து தேன் சுவைத்தது போன்றே இரண்டாமவர் (தேன்) சுவைக்காதவரை கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1033. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْعَرَبُ بَعْضُهُمْ أَكْفَاءُ بَعْضٍ، وَالْمَوَالِي بَعْضُهُمْ أَكْفَاءُ بَعْضٍ، إِلَّا حَائِكٌ أَوْ حَجَّامٌ} رَوَاهُ الْحَاكِمُ، وَفِي إِسْنَادِهِ رَاوٍ لَمْ يُسَمَّ، وَاسْتَنْكَرَهُ أَبُو حَاتِمٍ.
1033. ``அரபு மக்களில் ஒருவர் மற்றவருக்கு சமமாவார். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் மற்றவருக்குச் சமமாவர்; நெசவாளியை அல்லது இரத்தம் குத்தி எடுப்பவரைத் தவிர'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஹாகிமில், இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரின் பெயரைக் காணவில்லை. அபூ ஹாதம் இதனை `முன்கர்' மறுக்கத் தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஆத் இப்னு ஜபல் வாயிலாக பஸ்ஸாரில் `முன்கதீ' துண்டிக்கப்பட்டது எனும் தரத்தில் உள்ளது.
1034. وَلَهُ شَاهِدٌ عِنْدَ الْبَزَّارِ: عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ بِسَنَدٍ مُنْقَطِعٍ.
1034. மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக பஸ்ஸாரில் முஆத் இப்னு ஜபல்(ரலி) வாயிலாக `முன்கதிஃ' எனும் தரத்தில் ஹதீஸ் உள்ளது.
1035. وَعَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: {اِنْكِحِي أُسَامَةَ} رَوَاهُ مُسْلِمٌ.
1035. ``உஸாமாவை மணந்துகொள்'' என்று என்னை இறைத்தூதர்(ஸல்) பணித்தார்கள் என ஃபாத்திமா பின்த்து கைஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1036. وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {يَا بَنِي بَيَاضَةَ، أَنْكِحُوا أَبَا هِنْدٍ، وَانْكِحُوا إِلَيْهِ" وَكَانَ حَجَّامًا} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالْحَاكِمُ بِسَنَدٍ حَسَنٍ.
1036. ``பனூ பயாளா குலத்தாரே! அபூ ஹிந்திற்கு திருமணம் செய்துவையுங்கள், அவருக்குத் திருமணம் செய்துவையுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அவர் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இது ஹாகிம் மற்றும் அபூ தாவூதில் நல்ல அறிவிப்பாளர் தொடருடன் பதிவிடப்பட்டுள்ளது.
1037. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {خُيِّرَتْ بَرِيرَةُ عَلَى زَوْجِهَا حِينَ عَتَقَتْ}. مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ طَوِيلٍ.وَلِمُسْلِمٍ عَنْهَا: {أَنَّ زَوْجَهَا كَانَ عَبْدًا}. وَفِي رِوَايَةٍ عَنْهَا: {كَانَ حُرًّا}. وَالْأَوَّلُ أَثْبَتُ. وَصَحَّ عَنِ ابْنِ عَبَّاسٍ عِنْدَ الْبُخَارِيِّ ؛ أَنَّهُ كَانَ عَبْدًا.
1037. பரீரா(ரலி) விடுதலை செய்யப்பட்டபோது அவரின் கணவருடன் இருக்கவோ அல்லது பிரிந்துவிடவோ அவருக்கு உரிமை வழங்கப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் அவரின் கணவர் அடிமையாய் இருந்தார் என்றும். மற்றோர் அறிவிப்பில் சுதந்திரமானவராய் இருந்தார் என்றும் உள்ளது. முதல் கூற்றே பலமானது.
இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக புகாரீயில், ``அவர்அடிமையாய் இருந்தார்'' என உள்ளது.
குறிப்பு: இந்த ஹதீஸை முழுமையாக அறிவதற்குக் காண்க புகாரீ 5279
1038. وَعَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزَ الدَّيْلَمِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ ! إِنِّي أَسْلَمْتُ وَتَحْتِي أُخْتَانِ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالدَّارَقُطْنِيُّ، وَالْبَيْهَقِيُّ، وَأَعَلَّهُ الْبُخَارِيُّ.
1038. ``இறைத்தூதர் அவர்களே! நான் இஸ்லாமில் இணைந்துவிட்டேன். இரண்டு சகோதரிகள் என் கீழ் (ஒரே நேரத்தில் மனைவியராக) உள்ளனர்?'' என நான் கூறினேன்.
``அவர்களில் நீ விரும்பியவளை விவாகரத்துச் செய்து விடு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ளஹ்ஹாக் இப்னு ஃபைரூஜ் அத்தய்லமி தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு ஹிப்பான், இமாம் பைஹகீ மற்றும் இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் புகாரீ(ரஹ்) இதனை மஃலூல் எனும் குறைபாடு உடையது எனக் குறிப்பிட்டுள்ளார்.