1062. وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ؛ أَنَّهُ قَالَ: {سَأَلْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمْ كَانَ صَدَاقُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا. قَالَتْ: أَتَدْرِي مَا النَّشُّ ؟ قَالَ: قُلْتُ: لَا. قَالَتْ: نِصْفُ أُوقِيَّةٍ. فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ، فَهَذَا صَدَاقُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَزْوَاجِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
1062. ``இறைத்தூதர்(ஸல்) கொடுத்த மஹர் அளவு என்ன என நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வினவினேன்.
``அவர்களின் மனைவியருக்கு அவர்கள் கொடுத்த மஹர் தொகை பன்னிரெண்டு ஊக்கியா மற்றும் ஒரு `நஷ்' ஆக இருந்தது'' எனக் கூறி, ``நஷ்'' என்றால் என்ன என்பதை அறிவீரா?'' என வினவினார்கள்.
``இல்லை (தெரியாது)'' என நான் கூறினேன்.
``அது அரை ஊக்கியா ஆகும். அது (மொத்தம்) ஐநூறு திர்ஹம் ஆகும். இதுதான் இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியருக்கு (அளித்த) மஹராய் இருந்தது'' என்று கூறினார்கள் என அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1063. وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ فَاطِمَةَ -عَلَيْهِمَا السَّلَامُ-. قَالَ لَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَعْطِهَا شَيْئًا "، قَالَ: مَا عِنْدِي شَيْءٌ. قَالَ:" فَأَيْنَ دِرْعُكَ الحُطَمِيَّةُ ؟} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1063. ஃபாத்திமா(ரலி) அவர்களை அலீ(ரலி) திருமணம் செய்தபோது, ``அவளுக்கு (மஹராக) ஏதேனும் கொடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``என்னிடம் எதுவுமில்லை'' என அலீ கூறினார்.
``ஹுதமிய்யாவால் தயாரிக்கப்பட்ட உன்னுடைய கேடயம் எங்கே?'' என்று இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1064. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا اِمْرَأَةٍ نَكَحَتْ عَلَى صَدَاقٍ، أَوْ حِبَاءٍ، أَوْ عِدَةٍ، قَبْلَ عِصْمَةِ النِّكَاحِ، فَهُوَ لَهَا، وَمَا كَانَ بَعْدَ عِصْمَةِ النِّكَاحِ، فَهُوَ لِمَنْ أُعْطِيَهُ، وَأَحَقُّ مَا أُكْرِمَ الرَّجُلُ عَلَيْهِ اِبْنَتُهُ، أَوْ أُخْتُهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ.
1064. ``திருமணத்திற்கு முன் (நிர்ணயிக்கப்படும்) மஹர் அல்லது (மணப்பெண்ணுக்கோ அல்லது மற்றவருக்கோ வழங்குவதாக கூறப்படும்) அன்பளிப்பு அல்லது வாக்குறுதி ஆகியவை மணப் பெண்ணுக்கே உரியதாகும். திருமணத்திற்குப் பின் (வழங்கப்படும் அன்பளிப்பு மற்றும் வாக்குறுதி) யாருக்கு வழங்கப்படுகிறதோ அது அவரையே சாரும். மேலும், மனிதன் தன் மகள் அல்லது சகோதரி விஷயத்தில் கண்ணியப்படுவதற்கு மிகவும் உரித்தானவன் ஆவான்'', என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
1065. وَعَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ اِمْرَأَةً، وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يَدْخُلْ بِهَا حَتَّى مَاتَ، فَقَالَ اِبْنُ مَسْعُودٍ: لَهَا مِثْلُ صَدَاقِ نِسَائِهَا، لَا وَكْسَ، وَلَا شَطَطَ، وَعَلَيْهَا الْعِدَّةُ، وَلَهَا الْمِيرَاثُ، فَقَامَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ فَقَالَ: قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ - اِمْرَأَةٍ مِنَّا - مِثْلَ مَا قَضَيْتَ، فَفَرِحَ بِهَا اِبْنُ مَسْعُودٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ وَالْجَمَاعَةُ
1065. ஒரு பெண்ணை மணமுடித்து அவளுக்கென மஹர் நிர்ணயம் செய்யாமலேயே இறந்துபோன ஒருவர் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
``மற்ற பெண்களுக்குரியது போன்ற மஹர் அவளுக்கு உண்டு. அது குறைவாகவோ, கூடுதலாகவோ இல்லை. மேலும், அவள் மீது (இத்தா) கடமையாகும். இன்னும் அவளுக்குச் சொத்துரிமையும் உண்டு'' எனக் கூறினார்கள்.
அப்போது மஅகல் இப்னு ஸினான் அல் அஷ்ஜயீ(ரலி) எழுந்து, ``எங்கள் குலத்தைச் சேர்ந்த பர்வஃ பின்த் வாஷிக் எனும் பெண்ணிற்கு இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்து போன்றே தாங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள்'' எனக் கூறினார்.
(இதனைச் செவியுற்ற) இப்னு மஸ்வூத்(ரலி) மகிழ்வுற்றார் என அல் கமா(ரஹ்) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்)(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு குழுவினர் இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
1066. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ - رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ أَعْطَى فِي صَدَاقِ اِمْرَأَةٍسَوِيقًا، أَوْ تَمْرًا، فَقَدْ اِسْتَحَلَّ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَأَشَارَ إِلَى تَرْجِيحِ وَقْفِهِ.
1066. ``மஹர் எனும் திருமணக் கொடையாக மாவு அல்லது பேரீச்சம் பழத்தை ஒருவர் கொடுத்தால், அதன் காரணமாக அவருக்கு (அப்பெண்) அனுமதிக்கப்பட்டவளாகிறாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `மவ்கூஃப்' எனும் தரத்திலுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1067. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجَازَ نِكَاحَ اِمْرَأَةٍ عَلَى نَعْلَيْنِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ، وَخُولِفَ فِي ذَلِكَ.
1067. காலணிகளுக்குப் பதிலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.
1068. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {زَوَّجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلاً اِمْرَأَةً بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ} أَخْرَجَهُ الْحَاكِمُ. وَهُوَ طَرَفٌ مِنَ الْحَدِيثِ الطَّوِيلِ الْمُتَقَدِّمِ فِي أَوَائِلِ النِّكَاحِ.وَعَنْ عَلَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ}. أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ مَوْقُوفًا، وَفِي سَنَدِهِ مَقَالٌ.
1068. ஓர் இரும்பு மோதிரத்திற்குப் பதிலாக ஒருவருக்கு ஒரு பெண்ணை இறைத்தூதர்(ஸல்) திருமணம் செய்து வைத்தார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (இது நீண்ட ஹதீஸின் சுருக்கம்; இந்நூலின் ஹதீஸ் எண் 1006 காண்க)
நூல்: ஹாகிம்
1069. . وَعَنْ عَلَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَا يَكُونُ اَلْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ}. أَخْرَجَهُ اَلدَّارَقُطْنِيُّ مَوْقُوفًا، وَفِي سَنَدِهِ مَقَالٌ.
1069. ``பத்து திர்ஹமிற்குக் குறைவாக மஹர் இருக்கக்கூடாது'' என அலீ(ரலி) கூறினார்.
இது தாரகுத்னீ(ரஹ்) இதனை ``மவ்கூஃப்'' எனும் தரத்தில் பதிவிட்டுள்ளார். இதன் அறிவிப்பாளர் தொடரில் பிரச்னை உள்ளது.
1070. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1070. ``மணமகன் எளிதாக அளிக்கும் விதத்தில் குறைவாக இருக்கும் மஹரே சிறந்தது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமீர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1071. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ عَمْرَةَ بِنْتَ الْجَوْنِ تَعَوَّذَتْ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُدْخِلَتْ عَلَيْهِ - تَعْنِي: لَمَّا تَزَوَّجَهَا - فَقَالَ: " لَقَدْ عُذْتِ بِمَعَاذٍ "، فَطَلَّقَهَا، وَأَمَرَ أُسَامَةَ فَمَتَّعَهَا بِثَلَاثَةِ أَثْوَابٍ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَفِي إِسْنَادِهِ رَاوٍ مَتْرُوكٌ.
1071. அம்ரா பின்த் ஜவ்ன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடினார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அதாவது, இறைத்தூதர்(ஸல்) அவர்களை அவர் திருமணம் செய்தபோது, ``நீ சரியான இடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொண்டாய்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். பின்னர், அவரை தலாக் (மணவிலக்கு) செய்து மூன்று துணிகளை அவருக்கு உதவிப் பொருளாகக் கொடுக்குமாறு உஸாமாவிடம் கட்டளையிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இதன் அறிவிப்புத் தொடரில் ஒருவர் விடுபட்டுள்ளார்.
1072. وَأَصْلُ الْقِصَّةِ فِي " الصَّحِيحِ " مِنْ حَدِيثِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ. بَابُ الْوَلِيمَةِ
1072. அபூ உஸைத் அஸ்ஸாயிதீ வாயிலாக ஸஹீஹில் இதன் முழுச் சம்பவம் உள்ளது.
குறிப்பு: ஹதீஸ் முழுவதையும் அறிந்திடக் காண்க: புகாரீ 5637
1073. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، قَالَ: " مَا هَذَا ؟ "، قَالَ: يَا رَسُولَ اللهِ ! إِنِّي تَزَوَّجْتُ اِمْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. فَقَالَ: " فَبَارَكَ اللهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1073. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது மஞ்சள் நிறத்தைக் கண்ட இறைத்தூதர்(ஸல்), ``இது என்ன?'' எனக் கேட்டார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! ஒரு (பேரீச்சம்பழக்) கொட்டை அளவு தங்கத்திற்குப் பகரமாக நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன்'' எனக் கூறினார்.
``அல்லாஹ் உனக்கு அருள்வளம் அளிப்பானாக! நீ ஓர் ஆட்டையேனும் வலீமா (திருமண) விருந்தாகக் கொடு! என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லீம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1074. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ. وَلِمُسْلِمٍ: {إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيُجِبْ؛ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ}.
1074. ``உங்களில் ஒருவர் வலீமா விருந்திற்கு அழைக்கப்பட்டால், அதற்கு அவர் (மறுக்காமல்) செல்லட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``உங்கள் சகோதரன் உங்களை விருந்திற்கு அழைத்தால் நீங்கள் பதிலளியுங்கள் (செல்லுங்கள்) அது வலீமா விருந்தாகவோ அல்லது அது போன்ற மற்ற விருந்தாகவோ இருந்தாலும் (சரி)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
1075. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ: يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا، وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا، وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللهُ وَرَسُولَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1075. ``வருபவர்களைத் தடுத்தும், விருப்பமற்றவர்களை அழைத்தும் நடத்துகிற வலீமா விருந்தே (உணவுகளில்) தீய உணவு. இன்னும், விருந்தழைப்பைப் புறக்கணிப்பவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1076. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ ؛ فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ، وَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيُطْعَمْ} أَخْرَجَهُ مُسْلِمٌ أَيْضًا.
1076. ``உங்களில் ஒருவர் விருந்திற்கு அழைக்கப்பட்டால், அவர் அதனை ஏற்கட்டும்! (செல்லட்டும்). அவர் நோன்பாளியாய் இருந்தால், (அழைத்தவருக்காக) பிரார்த்திக்கட்டும். அவர் நோன்பில்லாதவராய் இருந்தால், (சென்று) உணவு உண்ணட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1077. وَلَهُ مِنْ حَدِيثِ جَابِرٍ نَحْوُهُ. وَقَالَ: {فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ}.
1077. ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``அவர் (கடமையல்லாத நோன்பிருப்பவர்) விரும்பினால் சாப்பிடட்டும்' அல்லது விட்டுவிடட்டும்'' என உள்ளது.
1078. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {طَعَامُ الْوَلِيمَةِ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وِمَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ " "} رَوَاهُ التِّرْمِذِيُّ وَاسْتَغْرَبَهُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
1078. ``வலீமா உணவு முதல் நாளில் கடமையாகும், இரண்டாவது நாள் உணவு சுன்னத்தாகும் மூன்றாவது நாள் உணவு பகட்டாகும். பகட்டுக் காட்டுகிறவனின் குறைகளை அல்லாஹ் பகிரங்கப்படுத்துகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதனை கரீப் என இமாம் திர்மிதீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார். இதன் அறிவிப்பாளர்கள் சரியானவர்கள்.
1079. وَلَهُ شَاهِدٌ: عَنْ أَنَسٍ عِنْدَ اِبْنِ مَاجَهْ.
1079. மேற்கண்ட ஹதீஸிஹ்குச் சான்றாக இப்னு மாஜாவில் அனஸ்(ரலி) வாயிலாக ஒரு ஹதீஸ் பதிவிடப்பட்டுள்ளது.
1080. وَعَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ: {أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1080. இறைத்தூதர்(ஸல்) திருமணம் செய்தபோது) தங்கள் மனைவியருக்காக இரண்டு `முத்' கோதுமையை `வலீமா' விருந்தாக கொடுத்தார்கள் என ஸஃபிய்யா பின்த்து ஷைபா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1081. وَعَنْ أَنَسٍ قَالَ: {أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ، يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ، فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِالْأَنْطَاعِ، فَبُسِطَتْ، فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ، وَالْأَقِطُ، وَالسَّمْنُ.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1081. கைபருக்கும், மதீனாவிற்கும் இடையில் இறைத்தூதர்(ஸல்) மூன்று இரவுகள் தங்கினார்கள். அப்போது, ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் திருமணம் செய்திருந்ததால் அவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டது. அப்போது, நான் முஸ்லிம்களை வலீமாவிருந்திற்கு அழைத்தேன். அ(ந்த விருந்)தில், ரொட்டியோ, கறியோ இல்லை. நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி போர்வைகள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி மற்றும் நெய் (விருந்துணவாக) வைக்கப்பட்டது என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.