1081. وَعَنْ أَنَسٍ قَالَ: {أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ، يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ، فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِالْأَنْطَاعِ، فَبُسِطَتْ، فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ، وَالْأَقِطُ، وَالسَّمْنُ.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1081. கைபருக்கும், மதீனாவிற்கும் இடையில் இறைத்தூதர்(ஸல்) மூன்று இரவுகள் தங்கினார்கள். அப்போது, ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் திருமணம் செய்திருந்ததால் அவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டது. அப்போது, நான் முஸ்லிம்களை வலீமாவிருந்திற்கு அழைத்தேன். அ(ந்த விருந்)தில், ரொட்டியோ, கறியோ இல்லை. நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி போர்வைகள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி மற்றும் நெய் (விருந்துணவாக) வைக்கப்பட்டது என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1082. وَعَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا اِجْتَمَعَ دَاعِيَانِ، فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا، فَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبِ الَّذِيْ سَبَقَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَسَنَدُهُ ضَعِيفٌ.
1082. ``இரண்டு பேர் ஒன்றாக (ஒரே நேரத்தில்) விருந்திற்கு அழைத்தால் உன் வீட்டிற்கு நெருக்கமானவரின் அழைப்பை நீ ஏற்றுக்கொள்! (இருப்பினும்) அவ்விருவரில், முந்திக் கொள்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடர் `ளயீஃப்' எனும் பலவீனமானது.
1083. وَعَنْ أَبِي جُحَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا آكُلُ مُتَّكِئًا} رَوَاهُ الْبُخَارِيُّ.
1083. ``நான் (எதன் மீதும்) சாய்ந்து கொண்டு சாப்பிடுவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1084. وَعَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا غُلَامُ ! سَمِّ اللهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1084. ``சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறி உன் வலக்கையால் சாப்பிடு! மேலும், உனக்கு முன்பாக உள்ளதிலிருந்து சாப்பிடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள் என உமா இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1085. وَعَنِ ابْنِ عَبَّاسٍ ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقَصْعَةٍ مِنْ ثَرِيدٍ، فَقَالَ: "كُلُوا مِنْ جَوَانِبِهَا، وَلَا تَأْكُلُوا مِنْ وَسَطِهَا، فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ فِي وَسَطِهَا} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَهَذَا لَفْظُ النَّسَائِيِّ، وَسَنَدُهُ صَحِيحٌ.
1085. நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு கோப்பையில், குழம்பில் ஊற வைக்கப்பட்ட ரொட்டி கொடுக்கப்பட்டது. அப்போது, அவர்கள் ``(தட்டின்) ஓரங்களிலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள். ஏனெனில், அதன் நடுவில் அருள்வளம் (பரக்கத்) இறங்கிக் கொண்டிருக்கிறது'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இங்கு நஸயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1086. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَا عَابَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، كَانَ إِذَا اِشْتَهَى شَيْئًا أَكَلَهُ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1086. இறைத்தூதர்(ஸல்) எப்போதும் உணவைக் குறை கூறியதில்லை. அவர்கள் ஒன்றை விரும்பினால், அதைப் சாப்பிடுவார்கள். அவர்கள் அதனை வெறுத்தால், அதனை விட்டுவிடுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1087. وَعَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَأْكُلُوا بِالشِّمَالِ ؛ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِالشِّمَالِ} رَوَاهُ مُسْلِمٌ.
1087. ``இடக் கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் உண்ணுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1088. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا شَرِبَ أَحَدُكُمْ، فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1088. ``உங்களில் ஒருவர் பருகினால் அவர் அந்தப் பாத்திரத்தினுள் மூச்சை விடதிருக்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1089. وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عَبَّاسٍ نَحْوُهُ، وَزَادَ: {أَوْ يَنْفُخْ فِيهِ} وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ. بَابُ الْقَسْمِ
1089. இப்னு அப்பாஸ் வாயிலாக அபூ தாவூதில் மேற்கண்ட ஹதீஸ் போன்றே உள்ளது. அதில், ``அதனுள் (பாத்திரத்தினுள்) ஊத வேண்டாம்'' என உள்ளது. மேலும், இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1090. عَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ، فَيَعْدِلُ، وَيَقُولُ: "اَللَّهُمَّ هَذَا قَسْمِي فِيمَا أَمْلِكُ، فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ وَالْحَاكِمُ، وَلَكِنْ رَجَّحَ التِّرْمِذِيُّ إِرْسَالَهُ.
1090. . இறைத்தூதர்(ஸல்) தங்கள் மனைவியருக்கு மத்தியில் (தம்மிடம் உள்ளதைப்) பங்கிடுபவர்களாகவும், நீதியுடன் நடப்பவர்களாகவும் இருந்தார்கள். இன்னும், ``இரட்சகனே! இது நான் கட்டுப்பாடாக இருப்பதால் செய்யப்படும் பங்கீடாகும். என் கட்டுப்பாட்டில் இல்லாத, உன் கட்டுப்பாட்டில் உள்ளதைக் கொண்டு என்னை இழிவுபடுத்திவிடாதே!'' என்று கூறுபவர்களாகவும் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், `முர்ஸல்' தரம் என்பதே சரி என இமாம் திர்மிதீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
1091. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ كَانَتْ لَهُ اِمْرَأَتَانِ، فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَسَنَدُهُ صَحِيحٌ.
1091. ``ஒருவருக்கு இரண்டு மனைவியர் இருந்து, அவர்களிடருவரில் ஒரு மனைவியின் பக்கம் அவர் அதிகம் சாய்ந்துவிட்டால், மறுமை நாளில் அவர் தன் ஒரு பக்க தோள்புஜம் இறங்கியவராக வருவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இதன் அறிவிப்புத் தொடர் `ஸஹீஹ்' ஆகும்.
1092. وَعَنْ أَنَسٍ قَالَ: {مِنَ السُّنَّةِ إِذَا تَزَوَّجَ الرَّجُلُ الْبِكْرَ عَلَى الثَّيِّبِ أَقَامَ عِنْدَهَا سَبْعًا، ثُمَّ قَسَمَ، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا، ثُمَّ قَسَمَ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1092. ஒரு கன்னிப் பெண்ணை (தனக்கு மனைவி இருக்கும் நிலையில்) மணப்பவர் அவளுடன் ஏழு இரவுகள் தங்கி இருக்க வேண்டும். அதன் பின்னரே அவர் (இரவுகளை மனைவியரிடையே) பங்கிட வேண்டும். கன்னி கழிந்த (விதவை அல்லது கைவிடப்பட்ட) பெண்ணைத் திருமணம் செய்பவர் அவளுடன் மூன்று இரவுகள் தங்கிய பின்னரே (மற்ற மனைவியுடன்) இரவுகளைப் பங்கிட வேண்டும் என்பது நபிவழியாகும் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1093. وَعَنْ أُمِّ سَلَمَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا تَزَوَّجَهَا أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا، وَقَالَ: " إِنَّهُ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ، إِنْ شِئْتِ سَبَّعْتُ لَكِ، وَإِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي} رَوَاهُ مُسْلِمٌ.
1093. இறைத்தூதர்(ஸல்) உம்மு ஸலமா(ரலி) அவர்களைத் திருமணம் செய்தபோது அவருடன் மூன்று இரவுகள் தங்கிவிட்டு, உன்னை உன் கணவர் (நான்) லேசாகக் கருதவில்லை. நீ விரும்பினால் நான் உன்னுடன் ஒரு வாரம் தங்குவேன். உன்னிடம் ஒரு வாரம் தங்கினால், என் மற்ற மனைவிகளிடமும் ஒரு வாரம் தங்க வேண்டியது வரும்'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி). அவர்களே அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1094. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لِعَائِشَةَ يَوْمَهَا وَيَوْمَ سَوْدَةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1094. ஸவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) தம்முடைய ஓர் இரவை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அளித்ததால், இறைத்தூதர்(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களின் நாளையும் ஸவ்தா(ரலி அவர்களின் நாளையும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கே பங்கிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1095. وَعَنْ عُرْوَةَ قَالَ: {قَالَتْ عَائِشَةُ: يَا اِبْنَ أُخْتِي ! كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُفَضِّلُ بَعْضَنَا عَلَى بَعْضٍ فِي الْقَسْمِ مِنْ مُكْثِهِ عِنْدَنَا، وَكَانَ قَلَّ يَوْمٌ إِلَّا وَهُوَ يَطُوفُ عَلَيْنَا جَمِيعًا، فَيَدْنُو مِنْ كُلِّ اِمْرَأَةٍ مِنْ غَيْرِ مَسِيسٍ، حَتَّى يَبْلُغَ الَّتِي هُوَ يَوْمُهَا، فَيَبِيتَ عِنْدَهَا} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1095. ``என் சகோதரியின் மகனே! இறைத்தூதர்(ஸல்) (தம் மனைவிமார்களான) எங்களிடம் தங்கும் நாள்களில் ஒருவரைவிட மற்றொருவருக்கு அதிகப் பங்கு அளிக்க மாட்டார்கள். பங்கீட்டில் ஏதாவது ஒரு நாள் மீதமாகிவிட்டால், அவர்கள் பெரும்பாலும் அந்த ஒரு நாளிலும் தங்களின் மனைவியர் எல்லாரின் வீட்டிற்கும் வந்து உடலுறவு கொள்ளாமல், அனைவரோடும் நெருக்கமாக உறவாடுவார்கள். இறுதியில் அந்த நாள் யாருக்குரியதோ அவரின் இல்லத்தை அடைந்து அவரிடம் இரவைக் கழிப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) கூறினார் என உர்வா(ரஹ்) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதில் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1096. وَلِمُسْلِمٍ: عَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْعَصْرَ دَارَ عَلَى نِسَائِهِ، ثُمَّ يَدْنُو مِنْهُنَّ} اَلْحَدِيثَ.
1096. இறைத்தூதர்(ஸல்) அஸ் ர் தொழுதுவிட்டால், தம் மனைவியர் அனைவரிடமும் சென்று அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவார்கள் என ஆயிஷா(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் உள்ளது. (ஹதீஸ் சுருக்கம்)
1097. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِيْ مَاتَ فِيهِ: " أَيْنَ أَنَا غَدًا ؟ "، يُرِيدُ: يَوْمَ عَائِشَةَ، فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ، فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1097. இறைத்தூதர்(ஸல்) தம் இறப்புக்கு முன்பாக நோய் வாய்ப்பட்டிருந்தபோது என் இல்லத்தில் தங்க விரும்பி, ``நாளை நான் எங்கு தங்குவது?'' என்று அடிக்கடி வினவினார்கள். இதனைப் புரிந்து கொண்ட அவர்களின் மற்ற மனைவியர் நபி(ஸல்) அவர்களுக்க அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தார்கள். எனவே, அவர்கள் என் இல்லத்தில் தங்கினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1098. وَعَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا، خَرَجَ بِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1098. இறைத்தூதர்(ஸல்) பயணம் மேற்கொள்ள விரும்பினால், தம் மனைவியருக்கிடையில் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாரின் பெயர் அப்போது வருகிறதோ, அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1099. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَجْلِدُ أَحَدُكُمْ اِمْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ} رَوَاهُ الْبُخَارِيُّ.بَابُ الْخُلْعِ
1099. ``அடிமையை அடிப்பது போன்று; உங்கள் மனைவியை யாரும் அடிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1100. عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ اِمْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ ! ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعِيبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ، قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ ؟ "، قَالَتْ: نَعَمْ. قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " اِقْبَلِ الْحَدِيقَةَ، وَطَلِّقْهَا تَطْلِيقَةً} رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةٍ لَهُ: {وَأَمَرَهُ بِطَلَاقِهَا}.
1100. ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! ஸாபித் இப்னு கைஸ் அவர்களை அவர்களின் ஒழுக்கத்திலோ, மார்க்கத்திலோ நான் குறை ஏதும கூறவில்லை. ஆனால், இஸ்லாமில் இருந்து கொண்டு இறைமறுப்பை (இறைவனுக்கு மாறுசெய்வதை) வெறுக்கிறேன்'' எனக் கூறினார்.
``அப்படியானால் (அவர் மஹராக உனக்களித்த) அவரின் தோட்டத்தை அவரிடம் திருமபக் கொடுக்கிறாயா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``கொடுக்கிறேன்'' என அவர் வறினார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) ஸாபித் இப்னு கைஸிடம்) ``உன் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு இவரை ஒட்டு மொத்தமாக விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
மற்றோர் அறிவிப்பின்படி ``அவரை மணவிலக்குச் செய்யுமாறு அவரிடம் கட்டளையிட்டார்கள்''என்ற வாசகம் உள்ளது.
குறிப்பு: குல்வு என்பது ஒரு பெண் தன் கணவனை விவாகரத்துச செய்யும் சட்டம்.