1181. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ، وَلَا يُكَلَّفُ مِنَ العَمَلِ إِلَّا مَا يُطِيقُ.} رَوَاهُ مُسْلِمٌ.
1181. ``அடிமைக்கு உணவளிப்பதும் உடை அளிப்பதும் அவனுடைய சக்திக்கு மீறிய வேலையை அவன் மீது சுமத்தாமல் இருப்பதும் அவனுடைய எஜமானன் மீது கடமையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1182. وَعَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ! مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟ قَالَ: "أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ، وَتَكْسُوَهَا إِذَا اِكْتَسَيْتَ، وَلَا تَضْرِبِ الْوَجْهَ، وَلَا تُقَبِّحْ… ".} الْحَدِيثُ. وتَقَدَّمَ فِي عِشْرَةِ النِّسَاءِ.
1182. ``இறைத்தூதர் அவர்களே! இவன் என் மகன்! என் வயிறு இவனுக்குப் பாதுகாப்பான தொட்டிலாகவும், என் மார்பு இவனுக்குத் தண்ணீர்ப் பையாகவும், என் மடி இவனுக்கு வீடாகவும் இருந்தது. இவனுடைய தந்தை என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். அவர் இவனையும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ள விரும்புகிறார்'' என ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்.
``நீ (மறு)மணம் செய்து கொள்ளாத வரை அவன் மீது நீயே அதிகம் உரிமை பெற்றவள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: குழந்தை தந்தைக்குச் சொந்தமானது; தலாக் விடப்பட்ட தாய் மறுமணம் செய்து கொள்ளாத வரை அக்குழந்தை அவளுடன் இருக்கலாம் என்பதை அறியமுடிகிறது.
1183. وَعَنْ جَابِر بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -فِي حَدِيثِ الْحَجِّ بِطُولِهِ- قَالَ فِي ذِكْرِ اَلنِّسَاءِ: {وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ.} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1183. இறைத்தூதர்(ஸல்) பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``அறியப்பட்ட வழிமுறைப்படி அவர்களுக்கு உணவு, உடுத்துவது அனைத்தும் (அளிப்பது) ஆண்களான உங்கள் மீது கடமையாகும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) ஹஜ் குறித்துக் குறிப்பிட்ட நீண்ட ஹதீஸில் கூறினார்.
நூல்: முஸ்லிம்
1184. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ.} رَوَاهُ النَّسَائِيُّ.. وَهُوَ عِنْدَ مُسْلِمٍ بِلَفْظِ: "أَنْ يَحْبِسَ عَمَّنْ يَمْلِكُ قُوتَهُ".
1184. ``தன் குடும்பத்திற்குச் செலவிடாமல் அவர்களை வீணடிப்பதே ஓர் ஆணுக்கு (அவனை அழிப்பதற்கு) போதுமான பாவமாகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்)கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
``தான் பரிகாரமக்கக் கடமைப்பட்டுள்ளவர்களுக்கு தன் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தாருக்கு) செலவிடாமல் இருப்பதே ஓர் ஆணுக்கு (தன்னை அழித்துக் கொள்வதற்கு) போதுமான பாவமாகிறது'' எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.
1185. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ -يَرْفَعُهُ، فِي الْحَامِلِ الْمُتَوَفَّى عَنْهَا- قَالَ: {لَا نَفَقَةَ لَهَا} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ، لَكِنْ قَالَ: اَلْمَحْفُوظُ وَقْفُهُ.
1185. கணவன் இறந்துவிட்ட கர்ப்பமான விதவை பெண்ணைப் பற்றிக் கூறுகையில், ``அவளுக்குச் செலவுத் தொகை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என `மர்ஃபூஃ' எனும் தரத்தில் ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இன்னும் இது மர்பூஃப் என்பதே சதரியானது.
1186. وَثَبَتَ نَفْيُ النَّفَقَةِ فِي حَدِيثِ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ كَمَا تَقَدَّمَ. رَوَاهُ مُسْلِمٌ.
1186. செலவுத் தொகை இல்லை என நிரூபமான ஃபாத்திமா பின்த் கைஸின் ஹதீஸ் முன்பு சென்றுள்ளது.
நூல்: முஸ்லிம்
1187. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْيَدِ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَيَبْدَأُ أَحَدُكُمْ بِمَنْ يَعُولُ. تَقُولُ الْمَرْأَةُ: أَطْعِمْنِي، أَوْ طَلِّقْنِي.} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَإِسْنَادُهُ حَسَنٌ.
1187. ``மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்தது. மனிதன், தான் பராமரிப்பவளுக்கு (மனைவிக்கு) முதலில் அளிக்கட்டும். (ஏனெனில்) `எனக்கு உணவு கொடு இல்லையேல், என்னை தலாக் செய்துவிடு' எனப் பெண் கூறுவாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1188. وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ -فِي الرَّجُلِ لَا يَجِدُ مَا يُنْفِقُ عَلَى أَهْلِهِ- قَالَ: {يُفَرَّقُ بَيْنَهُمَا}. أَخْرَجَهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ: عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْهُ. قَالَ: {فَقُلْتُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: سُنَّةٌ؟ فَقَالَ: سُنَّةٌ}. وَهَذَا مُرْسَلٌ قَوِيَ. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ كَتَبَ إِلَى أُمَرَاءِ الْأَجْنَادِ فِي رِجَالٍ غَابُوا عَنْ نِسَائِهِمْ: أَنْ يَأْخُذُوهُمْ بِأَنَّ يُنْفِقُوا أَوْ يُطَلِّقُوا، فَإِنْ طَلَّقُوا بَعَثُوا بِنَفَقَةِ مَا حَبَسُوا}. أَخْرَجَهُ الشَّافِعِيُّ. ثُمَّ الْبَيْهَقِيّ بِإِسْنَادِ حَسَنٌ.
1188. ``தன் மனைவிக்குப் போதிய அளவு செலவிட இயலாதவரையும் அவரின் மனைவியையும் பிரித்து வைத்துவிட வேண்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் அறிவித்தார்.
ஸயீத் இப்னு முஸ்ய்யிப்பிடம், ``இது நபிவழியா'' என அபூ ஜினாத் கேட்டார்.
``ஆம்; இது நபிவழிதான்'' என்று கூறினார் என ஸுப்யான் வாயிலாக ஸயீத் இப்னு மன்ஸுரில் பதிவாகியுள்ளது.
இது `முர்ஸல்' எனும் தரத்திலுள்ள பலமான அறிவிப்பாகும்.
1189. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ كَتَبَ إِلَى أُمَرَاءِ اَلْأَجْنَادِ فِي رِجَالٍ غَابُوا عَنْ نِسَائِهِمْ: أَنْ يَأْخُذُوهُمْ بِأَنَّ يُنْفِقُوا أَوْ يُطَلِّقُوا، فَإِنْ طَلَّقُوا بَعَثُوا بِنَفَقَةِ مَا حَبَسُوا}. أَخْرَجَهُ اَلشَّافِعِيُّ. ثُمَّ اَلْبَيْهَقِيّ بِإِسْنَادِ حَسَنٌ.
1189. தம் மனைவியரை விட்டு ஒடிவிட்டவர்களைப் பிடித்து; அவர்களைத் தம் மனைவியருக்குச் செலவிற்குக் கொடுக்கச் செய்ய வேண்டும் அல்லது விவாகரத்துச் செய்துவிட வேண்டும்; அப்படி அவர்கள் விவாகரத்துச் செய்துவிட்டால், அந்த (இடைப்பட்ட) காலத்தில் அவர்களுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருந்த செலவுத் தொகையைக் கொடுக்க வேண்டும் எனக் கட்டளை இடுமாறு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு (ஆணையிட்டு) உமர்(ரலி) கடிதம் எழுதினார்கள்.
நூல்: அஷ்ஷாஃபியீ
இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1190. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ! عِنْدِي دِينَارٌ؟ قَالَ: "أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ". قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ: "أَنْفِقْهُ عَلَى وَلَدِكَ". قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ: "أَنْفِقْهُ عَلَى أَهْلِكَ". قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: "أَنْفِقُهُ عَلَى خَادِمِكَ". قَالَ عِنْدِي آخَرُ، قَالَ: "أَنْتَ أَعْلَمَ".} أَخْرَجَهُ الشَّافِعِيُّ وَاللَّفْظُ لَهُ، وَأَبُو دَاوُدَ، وَأَخْرَجَهُ النَّسَائِيُّ وَالْحَاكِمُ بِتَقْدِيمِ. اَلزَّوْجَةِ عَلَى الْوَلَدِ.
1190. ``தர்மம் செய்யுங்கள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது?'' என அப்போது ஒருவர் கூறினார்.
``நீ அதனை உன் செலவுக்கு வைத்துக் கொள்! என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' என அவர் கூறினார்.
``நீ உன் பிள்ளைகளுக்கு செலவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' எனக் கூறினார்.
நீ அதனை என் ஊழியர்களுக்குச் செலவிடு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' எனக் கூறினார்.
``அது குறித்து நீயே தீர்மானித்துக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: ஷாஃபியீ, அபூ தாவூத், நஸயீ மற்றும் ஹாகிம்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
நஸயீ, ஹாகிம் ஆகிய நூல்களில், மக்களுக்குச் செலவிடச் சொல்வதற்கு முன்னதாக மனைவிக்குச் செலவிடு என்று கூறினார்கள் என உள்ளது.
1191. وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ! مَنْ أَبَرُّ؟ قَالَ: "أُمَّكَ". قُلْتُ: ثُمَّ مِنْ؟ قَالَ: "أُمَّكَ". قُلْتُ: ثُمَّ مِنْ "؟ قَالَ: "أُمَّكَ". قُلْتُ: ثُمَّ مِنْ؟ قَالَ: "أَبَاكَ، ثُمَّ الْأَقْرَبَ فَالْأَقْرَبَ".} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحُسَّنَهُ.بَابُ الْحَضَانَةِ
1191. ``இறைத்தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``உன் தாய்க்கு'' என அவர்கள் கூறினார்கள்.
``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன்.
``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள்.
``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன்.
``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள்.
``பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டேன்.
``உன் தந்தைக்கும் உன் நெருங்கிய உறவினருக்கும். பின்னர், அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹாகிம் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1192. عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ اِمْرَأَةً قَالَتْ: {يَا رَسُولَ اللهِ! إِنَّ اِبْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً، وَثَدْيِي لَهُ سِقَاءً، وَحِجْرِي لَهُ حِوَاءً، وَإِنَّ أَبَاهُ طَلَّقَنِي، وَأَرَادَ أَنْ يَنْتَزِعَهُ مِنِّي. فَقَالَ لَهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَنْتِ أَحَقُّ بِهِ، مَا لَمْ تَنْكِحِي".} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1192. ``இறைத்தூதர் அவர்களே! இவன் என் மகன்! என் வயிறு இவனுக்குப் பாதுகாப்பான தொட்டிலாகவும், என் மார்பு இவனுக்குத் தண்ணீர்ப் பையாகவும், என் மடி இவனுக்கு வீடாகவும் இருந்தது. இவனுடைய தந்தை என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். அவர் இவனையும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ள விரும்புகிறார்`` என ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்.
``நீ (மறு)மணம் செய்து கொள்ளாத வரை அவன் மீது நீயே அதிகம் உரிமை பெற்றவள்`` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1193. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ اِمْرَأَةً قَالَتْ: {يَا رَسُولَ اللهِ! إِنَّ زَوْجِي يُرِيدُ أَنْ يَذْهَبَ بِابْنِي، وَقَدْ نَفَعَنِي، وَسَقَانِي مِنْ بِئْرِ أَبِي عِنَبَةَفَجَاءَ زَوْجُهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "يَا غُلَامُ! هَذَا أَبُوكَ وَهَذِهِأُمُّكَ، فَخُذْ بِيَدِ أَيُّهُمَا شِئْتَ" فَأَخَذَ بِيَدِ أُمِّهِ، فَانْطَلَقَتْ بِهِ.} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
1193. ``இறைத்தூதர் அவர்களே! என் மகனை என் கணவர் கொண்டு செல்ல விரும்புகிறார். அவனோ எனக்குப் பயனுள்ளவனாகவும், `அபூ இனபா' எனும் கிணற்றிலிருந்து எனக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டும் இருக்கிறான்'' என ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார் (முறையிட்டார்).
அப்போது அவளின் கணவர் அங்கு வந்தார். ``சிறுவனே! இதே உன் தந்தை. உன் தாய். இவர்கள் இருவரில் நீ விரும்பியவரின் கையைப் பிடித்துக் கொள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். (அந்தச் சிறுவன்) தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனுடன் அவள் சென்றுவிட்டாள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1194. وَعَنْ رَافِعِ بْنِ سِنَانٍ؛ {أَنَّهُ أَسْلَمَ، وَأَبَتِ اِمْرَأَتُهُ أَنْ تُسْلِمَ. فَأَقْعَدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأُمَّ نَاحِيَةً، وَالْأَبَ نَاحِيَةً، وَأَقْعَدَ الصَّبِيَّ بَيْنَهُمَا. فَمَالَ إِلَى أُمِّهِ، فَقَالَ: "اَللَّهُمَّ اِهْدِهِ". فَمَالَ إِلَى أَبِيهِ، فَأَخَذَهُ.} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَالْحَاكِمُ.
1194. ராஃபிவு இப்னு ஸினான்(ரலி) இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். அவரின் மனைவி இஸ்லாமை ஏற்கமறுத்துவிட்டாள். தாயை ஓர் ஓரத்திலும், தந்தையை ஓர் ஓரத்திலும் அமர்த்தி பையனை இருவருக்கும் மத்தியில் இறைத்தூதர்(ஸல்) அமர்த்தினார்கள். அவன் தன் தாயின் பக்கமே திருப்பினான். அப்போது, ``இரட்சகனே! அவனுக்கு நேர்வழியைக் கொடு!'' என இறைத்தூதர்(ஸல்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவன் தன் தந்தையின் பக்கம் திரும்பிவிட்டான். அவர் அவனை எடுத்துக் கொண்டார் என ராஃபி இப்னு ஸினான்(ரலி) அவர்களே இதனை அறிவித்துள்ளார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1195. وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبِ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي اِبْنَةِ حَمْزَةَ لِخَالَتِهَا، وَقَالَ: الْخَالَةُ بِمَنْزِلَةِ الْأُمِّ.} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1195. ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் அவரின் சித்தியைப் பொறுப்பாளராக நியமித்து இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள். மேலும் அப்போது, ``சித்தி தாயின் ஸ்தானத்தில் இருப்பவர்'' என்று கூறினார்கள் என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1196. وَأَخْرَجَهُ أَحْمَدُ: مِنْ حَدِيثِ عَلَيٍّ فَقَالَ: {وَالْجَارِيَةُ عِنْدَ خَالَتِهَا، فَإِنَّ الْخَالَةَ وَالِدَةٌ}
1196. ``கன்னிப் பெண் அவளின் சித்தியிடம் இருப்பாள். சித்தி தாய் (போல) ஆவாள்'' என்று அலீ(ரலி) கூறினார்கள் என அஹ்மதில் உள்ளது.
1197. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1197. ``உங்களில் ஒருவருக்கு அவரின் ஊழியர் அவரின் உணவைக் கொண்டுவந்தால், அவர் அந்த ஊழியரைத் தன்னுடன் அமரச் செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் அவருக்கு ஓரிரு கவளமாவது கொடுக்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1198. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {عُذِّبَتْ اِمْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلْتِ النَّارَ فِيهَا، لَا هِيَ أَطْعَمَتْهَا وَسَقَتْهَا إِذْ هِيَ حَبَسَتْهَا، وَلَا هِيَ تَرَكَتْهَا، تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ} مُتَّفَقٌ عَلَيْهِ.كِتَابُ الْجِنَايَاتِأَحَادِيثٌ فِي الْجِنَايَاتِ
1198. ``ஒரு பூனை விஷயத்தில் ஒரு பெண் தண்டிக்கப்பட்டாள். (ஏனெனில்) அது சாகும் வரை அதனை அவள் சிறை வைத்திருந்தாள். அதனால் அவள் நரகத்தில் புகுந்தாள். அவள் அந்தப் பூனைக்க உணவளிக்கவுமில்லை, நீர் புகட்டவுமில்லை. அதனை அடைத்தே வைத்திருந்தாள். பூமியிலுள்ள புழு, பூச்சிகளை அது இரையாகத் தேடிக்கொள்ள அதனை அவள் விட்டுவிடவுமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

1199. عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَحِلُّ دَمُ اِمْرِئٍ مُسْلِمٍ؛ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنِّي رَسُوْلُ اللهِ، إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: الثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ، وَالتَّارِكُ لِدِينِهِ؛ اَلْمُفَارِقُ لِلْجَمَاعَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1199. ``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், என்னை இறைத்தூதர் என்றும் சாட்சியளிக்கும் மனிதரை, அவர் திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் புரிந்தவராய் இருந்தாலோ, (நியாயமின்றி) யாரையேனும் அவர் கொலை செய்திருந்தால் அதற்குப் பழிவாங்கும் விதத்திலோ, தன் மார்க்கத்தை விட்டு, ஜமாஅத்தை விட்டுப் பிரிந்து சென்றவராக இருந்தாலோ ஆக, இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணத்திற்காகவே தவிர கொல்வது (மரணதண்டனை விதிப்பது) அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1200. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ قَتْلُ مُسْلِمٍ إِلَّا فِي إِحْدَى ثَلَاثِ خِصَالٍ: زَانٍ مُحْصَنٌ فَيُرْجَمُ، وَرَجُلٌ يَقْتُلُ مُسْلِمًا مُتَعَمِّدًا فَيُقْتَلُ، وَرَجُلٌ يَخْرُجُ مِنَ الْإِسْلَامِ فَيُحَارِبُ اللهُ وَرَسُولَهُ، فَيُقْتَلُ، أَوْ يُصْلَبُ، أَوْ يُنْفَى مِنَ الْأَرْضِ.} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1200. ``திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும். ஒரு முஸ்லிமை வேண்டும் என்றே கொல்பவன், (பதிலுக்குக்) கொல்லப்பட வேண்டும். மேலும், இஸ்லாமை விட்டு வெளியேறி அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிடுபவன் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கிலிடப்படவேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். இந்த மூன்று குற்றங்களில், ஏதேனும் ஒன்றைச் செய்த முஸ்லிமைத் தவிர மற்ற முஸ்லிமைக் கொல்வது (மரண தண்டனை விதிப்பது) அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.