1241. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ -فِي رَجُلٍ أَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ-: {لَا أَجْلِسُ حَتَّى يُقْتَلَ، قَضَاءُ اللهُ وَرَسُولِهِ، فَأُمِرَ بِهِ، فَقُتِلَ. مُتَّفَقٌ عَلَيْهِ}.وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: {وَكَانَ قَدْ اُسْتُتِيبَ قَبْلَ ذَلِكَ}.
1241. இஸ்லாமை ஏற்றுப் பின்னர், யூதனாகிப் போனவன் குறித்துக் கூறுகையில், ``அவன் கொல்லப்படும் வரை நான் அமர மாட்டேன். ஏனெனில், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பு இதுதான்'' என முஆத் இப்னு ஜபல்(ரலி) கூறினார்கள். பின்னர் அதற்கான கட்டளையிடப்பட்டது. உடனே அவன் கொல்லப்பட்டான் என முஆத் இப்னு ஐபல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில் கொல்லப்படுவதற்கு முன்பு பாவமன்னிப்புக் கோருமாறு அவனிடம் சொல்லப்பட்டது என்றும் உள்ளது.
1242. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1242. ``(இஸ்லாமிலிருந்து கொண்டு) தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்பவனைக் கொன்றுவிடுங்கள். (மரண தண்டனை கொடுங்கள்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார் கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1243. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ أَعْمَى كَانَتْ لَهُ أُمُّ وَلَدَ تَشْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَعُ فِيهِ، فَيَنْهَاهَا، فَلَا تَنْتَهِي، فَلَمَّا كَانَ ذَاتَ لَيْلَةٍ أَخْذَ الْمِعْوَلَ، فَجَعَلَهُ فِي بَطْنِهَا، وَاتَّكَأَ عَلَيْهَا.فَقَتَلَهَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:"أَلَّا اِشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ}. رَوَاهُ أَبُو دَاوُدَ وَرُوَاتُهُ ثِقَاتٌ.كِتَابُ الْحُدُودِبَابُ حَدِّ الزَّانِي
1243. பார்வையற்ற ஒரு நபித்தோழரிடம் ஓர் உம்மு வலத் இருந்தாள். இறைத்தூதர்(ஸல்) அவர்களை அவள் ஏசிக்கொண்டும், குறை பேசிக் கொண்டும் இருந்தாள். அவர் (பலமுறை)அவளைத் தடுத்தும்கூட அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு கோடாரியை எடுத்து அவளின் வயிற்றில் பாய்ச்சி அவள் மீது சாய்ந்து அவளைக் கொன்றுவிட்டார். இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது.
``அறிந்து கொள்ளுங்கள்! அவளின் இரத்தம் வீணாகிவிட்டது. (அவள் கொல்லப்பட்டதற்கு இழப்பீட்டுத் தொகை இல்லை) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1244. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَزَيْدِ بْنِ خَالِدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عنهما {أَنَّ رَجُلًا مِنَ الْأَعْرَابِ أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.فَقَالَ: يَا رَسُولَ اللهِ! أَنْشُدُكَ بِاللّهِ إِلَّا قَضَيْتَ لِي بِكِتَابِ اللهِ، فَقَالَ الْآخَرُ - وَهُوَ أَفْقَهُ مِنْهُ - نَعَمْ. فَاقَضِ بَيْنَنَا بِكِتَابِ اللهِ، وَأْذَنْ لِي، فَقَالَ: "قُلْ". قَالَ: إنَّ اِبْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِاِمْرَأَتِهِ، وَإِنِّي أُخْبِرْتُ أَنْ عَلَى اِبْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمَائَةِ شَاةٍ وَوَلِيدَةٍ، فَسَأَلَتُ أَهْلَ الْعِلْمِ، فَأَخْبَرُونِي: أَنَّمَا عَلَى اِبْنِيْ جَلْدُ مَائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَنَّ عَلَى اِمْرَأَةِ هَذَا الرَّجْمَ، فَقَالَ رَسُولُ ا للَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللهِ، اَلْوَلِيدَةُ وَالْغَنَمُ رَدٌّ عَلَيْكَ، وَعَلَى اِبْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى اِمْرَأَةِ هَذَا، فَإِنْ اِعْتَرَفَتْ فَارْجُمْهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ، هَذَا وَاللَّفْظُ لِمُسْلِمٍ. 1233 - وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {خُذُوا عَنِّي، خُذُوا عَنِّي، فَقَدْ جَعَلَ اللهُ لَهُنَّ سَبِيلاً، الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ، وَالثَّيِّبُ بِالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ، وَالرَّجْمُ} رَوَاهُ مُسْلِمٌ.
1244. கிராமவாசிகளில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு அல்லாஹ்வின் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் எனத் தங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்'' எனக் கூறினார்.
அவருடன் இருந்த அவரைவிட அதிகமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க மற்றொருவர், ``ஆம்! எங்கள் மத்தியில் அல்லாஹ்வின் கட்டளைப்படி தீர்ப்பளியுங்கள். (நடந்ததைக்) கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள்'' எனக் கூறினார்கள்.
``என் மகன் இவரிடம் வேலை பார்த்து வந்தான். அப்போது, அவன் இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் அதற்குப் பகரமாக நூறு ஆடுகள் மற்றும் ஓர் அடிமைப் பெண்ணை ஈட்டுத் தொகையாகக் கொண்டு அவனைத் தண்டனையிலிருந்து விடுவித்தேன். பின்னர், அது குறித்து நான் அறிஞர்களிடம் கேட்டதற்கு, ``அவனுக்குரிய தண்டனை நூறு கசையடியும் ஓராண்டு ஊரைவிட்டு வெளியேற்றுதலும் ஆகும்'' என்றும் இவரின் மனைவியைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்றும் கூறினர்'' என அவர் கூறினார்.
``என் உயிரைத் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக! நான் உங்கள் மத்தியில் இறைச் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன், அந்த அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உங்களிடம் திரும்பத் தரப்பட வேண்டும். உங்கள் மகனுக்குத் தண்டனையாக நூறு கசையடி கொடுக்கப்படும்; மேலும், ஓராண்டு ஊர் விலக்கம் செய்யப்படும். உனைஸே! இவரின் மனைவியிடம் செல்லும். அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொல்லும்!'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1245. عَنْ عُبَادَةُ بْن الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (خُذُوْا عَنِّيْ، فَقَدْ جَعَلَ اللهُ لَهُنَّ سَبِيْلاً، اَلْكِبْرُ بِالْبِكِرِ جَلْدُ مِائَةٍ وَنَفْيُ سَنَةٍ، وَثَيِّبُ بَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ). رَوَاهُ مُسْلِمٌ.
1245. ``என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்தவிட்டான். திருமணம் ஆகாதவன், திருமணம் ஆகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஓராண்டு காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆனவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1246. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَتَى رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -وَهُوَ فِي الْمَسْجِدِ- فَنَادَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللهِ! إِنِّي زَنَيْتُ، فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى تِلْقَاءَ وَجْهِهِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ! إِنِّي زَنَيْتُ، فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى ثَنَّى ذَلِكَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى.نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ. دَعَاهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ "أَبِكَ جُنُونٌ؟" قَالَ. لَا. قَالَ: "فَهَلْأَحْصَنْتَ؟". قَالَ: نَعَمْ. فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "اِذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1246. இறைத்தூதர்(ஸல்) இறைஇல்லத்தில் இருந்தபோது முஸ்லிம்களில் ஒருவர் அவர்களிடம் வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சப்தமாக அழைத்தார்.
``இறைத்தூதர் அவர்களே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்'' எனக் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவரைக் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
அவர் மறுபடியும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்திற்கு எதிரே வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்'' எனக் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) மறுபடியும் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் இவ்வாறே திரும்பத் திரும்ப நான்கு முறை செய்தார். இவ்வாறு அவர் தனக்கு எதிராக நான்கு முறை சாட்சி அளித்தப் பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவரை அழைத்து, ``உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``இவரை அழைத்துச் சென்று கல்லெறிந்து மரண தண்டனை கொடுங்கள்'' என்று கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1247. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: "لَعَلَّكَ قَبَّلْتَ، أَوْ غَمَزْتَ، أَوْ نَظَرْتَ؟" قَالَ: لَا يَا رَسُولَ اللهِ.} رَوَاهُ الْبُخَارِيُّ.
1247. மாயிஸ் இப்னு மாலிக்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, ``நீ முத்தமிட்டிருப்பாய்; அல்லது கண்சாடை காட்டியிருப்பாய் (கட்டியணைத்திருப்பாய்) அல்லது பார்த்திருப்பாய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1248. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ اللهُ بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ فِيمَا أَنْزَلَ اللهُ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ. قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا، فَرَجَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ، فَيَضِلُّوابِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللهُ، وَإِنَّ الرَّجْمَ حَقٌّ فِي كِتَابِ اللهُ عَلَى مَنْ زَنَى، إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَبَلُ، أَوِ الِاعْتِرَافُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1248. உமர்(ரலி) ஒரு முறை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ``நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அதில் நாங்கள் கல்லெறியும் சட்டத்தை எடுத்துரைக்கும் வசனத்தைப் படித்தோம். அதைப் புரிந்து காண்டு மனதில் பதித்தோம். நபி(ஸல்) அவர்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின்பு நாங்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினோம். மக்கள் மீது நீண்ட காலம் சென்றுவிட்டதால் கல்லெறியும் சட்டத்தை அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் காணவில்லை'' என்று யாரேனும் கூற, மக்கள் அல்லாஹ் அருளிய ஒரு கடமையைக் கை விட்டு வழிகெட்டுவிடுவார்கள் என நான் அஞ்சுகிறேன். உண்மையில் திருமணமான ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து அதற்கான சாட்சியம் கிடைத்தாலோ, கருத்தரித்துவிட்டாலோ அல்லது (தானே முன் வந்து குற்றத்தை) ஒப்புக் கொண்டாலோ அவளைக் கல்லெறிந்து கொல்வது அல்லாஹ்வின் கட்டளையாகும்'' என்று உமர்(ரலி) கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1249. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ، فَتَبَيَّنَ زِنَاهَا، فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلَا يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلَا يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ، فَتَبَيَّنَ زِنَاهَا، فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ} مُتَّفَقٌ عَلَيْهِ وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
1249. ``உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமாகிவிட்டால் அவர் அவளுக்கு (ஐம்பது) கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மனவேதனைப்படுத்த வேண்டாம். பின்னரும் அவள் விபச்சாரம் செய்து அது நிரூபணமாகிவிட்டால் அவளுக்கு அவன் (ஐம்பது) கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மன வேதனைப்படுத்த வேண்டாம். பின்னர், அவள் மூன்றாவது முறையும் விபச்சாரம் செய்து; அது நிரூபணமாகிவிட்டால், முடியால் செய்யப்பட்ட ஒரு கயிற்றுக்கேனும் அவளை விற்பனை செய்துவிடட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1250. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَقِيمُوا الْحُدُودَ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَهُوَ فِي "مُسْلِمٍ" مَوْقُوفٌ.
1250. ``உங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பெண்கள் மற்றும் அடிமைகள் மீது (அவர்கள் குற்றம் புரிந்து விட்டால்) தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஸ்லிம் `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1251. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَينٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ اِمْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا-فَقَالَتْ: يَا نَبِيَّ اللهِ! أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا. فَقَالَ: "أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَائْتِنِي بِهَا" فَفَعَلَ. فَأَمَرَ بِهَا فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا، ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، فَقَالَ عُمَرُ: أَتُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللهُ وَقَدْ زَنَتْ؟ فَقَالَ: "لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِّمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ، وَهَلْ وَجَدَتْ أَفَضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ؟} ". رَوَاهُ مُسْلِمٌ.
1251. ``விபச்சாரம் செய்து கர்ப்பிணியான ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருபெண், அதே நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளேன். என் மீது அதனை (தண்டனையை) நிறைவேற்றுங்கள்'' எனக் கூறினார்.
இதனைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவரின் பொறுப்பாளரை அழைத்து, அவரின் பொறுப்பாளரை அழைத்து, இவளுடன் நன்றாக நடந்து கொள்ளும் இவள் குழந்தை பெற்றெடுத்தும் என்னிடம் அழைத்துவாரும்'' எனக் கூறினார்கள். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றினார். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவளின் துணியை அவள் மீது கட்டிவிட்டு அவள் மீது கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அவளுக்கு நபி(ஸல்) ஜனாஸா தொழைகையும் நடத்தினார்கள். இதனைக் கண்ட உமர்(ரலி), ``இறைத்தூதர் அவர்களே! விபச்சாரம் செய்த ஒரு பெண்ணுக்கா தாங்கள் தொழுகை நடத்துகிறீர்கள்?'' எனக் கேட்டார்.
``அவள் செய்திருக்கும் பாவமன்னிப்பை இந்த மதீனா நகரில் உள்ள எழுபது மனிதர்களுக்குப் பிரித்துப் பங்கிட்டாலும் அது அவர்கள் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட போதுமானதாய் இருக்கும். அந்த அளவிற்கு அவள் பாவமன்னிப்புக் கோரியிருக்கிறாள். தன் உயிரை இறைவன் வசம் ஒப்படைத்துவிட்ட ஒரு பெண்ணை விடச் சிறந்த செயல் புரிந்தவரை நீர் கண்டதுண்டா?'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1252. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {رَجَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مَنْ أَسْلَمَ، وَرَجُلًا مِنَ الْيَهُودِ، وَاِمْرَأَةً} رَوَاهُ مُسْلِمٌ.
1252. அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் யூத குலத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் மற்றும் ஒரு பெண்ணுக்கும் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை இறைத்தூதர்(ஸல்) வழங்கினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1253. وَقِصَّةُ رَجْمِ الْيَهُودِيَّيْنِ فِي "الصَّحِيحَيْنِ" مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ.
1253. விபச்சாரம் புரிந்த யூதர்களையும் யூதப் பெண்ணையும் இறைத்தூதர்(ஸல்) கல்லெறிந்து கொன்ற (மரண தண்டனைக்கான தீர்ப்பை அளித்த) சம்பவம் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
1254. وَعَنْ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عِبَادَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ بَيْنَ أَبْيَاتِنَا رُوَيْجِلٌ ضَعِيفٌ، فَخَبَثَ بِأَمَةٍ مِنْ إِمَائِهِمْ، فَذَكَرَ ذَلِكَ سَعْدٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: "اِضْرِبُوهُ حَدَّهُ". فَقَالُوا: يَا رَسُولَ اللهِ! إِنَّهُ أَضْعَفُ مِنْ ذَلِكَ، فَقَالَ: "خُذُوا عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ، ثُمَّ اِضْرِبُوهُ بِهِ ضَرْبَةً وَاحِدَةً". فَفَعَلُوا} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ، وَإِسْنَادُهُ حَسَنٌ. لَكِنْ اخْتُلِفَ فِي وَصْلِهِ وَإِرْسَالِهِ.
1254. திருமணம் ஆகாத பலவீனமான சிறிய மனிதர் ஒருவர் எங்கள் வீடுகளில் இருந்து வந்தார். (ஒருமுறை) அவர் எங்கள் அடிமைப் பெண்களில் ஒருத்தியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். (இது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என் தந்தை சஅத்(ரலி) முறையிட்டார்.
``அவருக்கு அதற்கான கசையடி கொடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! அவர் மிகவும் பலவீனமானவர்'' என மக்கள் கூறினார்கள்.
``சிறு கிளைகள் கொண்ட பெரிய ஒன்றைப் பிடுங்கி அதனால் அவரை ஓர் அடி அடியுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அவர்களும் அவ்வாறே செய்தார்கள் என ஸயீத் இபனு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அறவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இது மவ்ஸுலா மற்றும் முர்ஸலா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
1255. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ، فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ، وَمَنْ وَجَدْتُمُوهُ وَقَعَ عَلَى بَهِيمَةٍ، فَاقْتُلُوهُ وَاقْتُلُوا الْبَهِيمَةَ} ". رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ،وَرِجَالُهُ مُوَثَّقُونَ، إِلَّا أَنَّ فِيهِ اِخْتِلَافًا.
1255. ``லூத்(அலை) அவர்களின் கூட்டத்தார் செய்த (ஓரினச் சேர்க்கை) செயலைச் செய்பவனை நீங்கள் கண்டால், செய்தவனையும் அதற்கு உடன்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்! (மரண தண்டனை கொடுங்கள்!) கால்நடையோடு உறவு கொள்பவனை, நீங்கள் கண்டால், அவனையும் அந்தக் கால்நடையையும் கொன்றுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இருப்பினும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.
1256. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ.} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّهُ اخْتُلِفَ فِي رَفْعِهِ، وَوَقْفِهِ.
1256. திருமணம் ஆகாத ஆணை, இறைத்தூதர்(ஸல்) (கசையால் நூறு அடி) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். அபூ பக்ர்(ரலி) (கசையால்) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். உமர்(ரலி) (கசையால்) அடித்தார்கள். இன்னும் ஊர் விலக்கம் செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இன்னும் இது `மர்ஃபூஃ' அல்லது `மவ்கூஃப்' என்பதில் கருதது வேறுபாடு உள்ளது.
1257. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ: {أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1257. பெண்களைப் போல (தன்னை) மாற்றிக் கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல (தன்னை) மாற்றிக் கொள்ளும் பெண்களையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள். மேலும், ``அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி (விரட்டி) விடுங்கள்'' எனக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1258. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِدْفَعُوا الْحُدُودَ، مَا وَجَدْتُمْ لَهَا مَدْفَعًا} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ.
1258. ``தண்டனைகளை விலக்கிக் கொள்ளும் முகாந்திரம் உள்ள வரை அவற்றை விலக்கிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது.
1259. وَأَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِلَفْظِ {ادْرَأُوا الْحُدُودَ عَنِ الْمُسْلِمِينَ مَا اِسْتَطَعْتُمْ} " وَهُوَ ضَعِيفٌ أَيْضًا.
1259. ``உங்களால் முடிந்த அளவு முஸ்லிம்களை விட்டு தண்டனைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) வாயிலாக திர்மிதீ மற்றும் ஹாகிமில் உள்ளது. இதுவும் `ளயீஃப்' எனும் தரத்திலேயே உள்ளது.
1260. وَرَوَاهُ الْبَيْهَقِيُّ: عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ (مِنْ) قَوْلِهِ بِلَفْظِ: {ادْرَأُوا الْحُدُودَ بِالشُّبُهَاتِ}
1260. ``சந்தேகங்கம் வந்துவிட்டால் தண்டனைகளைத் தவிர்த்து விடுங்கள்'' (என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்) என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ