1248. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ اللهُ بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ فِيمَا أَنْزَلَ اللهُ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ. قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا، فَرَجَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ، فَيَضِلُّوابِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللهُ، وَإِنَّ الرَّجْمَ حَقٌّ فِي كِتَابِ اللهُ عَلَى مَنْ زَنَى، إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَبَلُ، أَوِ الِاعْتِرَافُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1248. உமர்(ரலி) ஒரு முறை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ``நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அதில் நாங்கள் கல்லெறியும் சட்டத்தை எடுத்துரைக்கும் வசனத்தைப் படித்தோம். அதைப் புரிந்து காண்டு மனதில் பதித்தோம். நபி(ஸல்) அவர்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின்பு நாங்களும் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினோம். மக்கள் மீது நீண்ட காலம் சென்றுவிட்டதால் கல்லெறியும் சட்டத்தை அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் காணவில்லை'' என்று யாரேனும் கூற, மக்கள் அல்லாஹ் அருளிய ஒரு கடமையைக் கை விட்டு வழிகெட்டுவிடுவார்கள் என நான் அஞ்சுகிறேன். உண்மையில் திருமணமான ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து அதற்கான சாட்சியம் கிடைத்தாலோ, கருத்தரித்துவிட்டாலோ அல்லது (தானே முன் வந்து குற்றத்தை) ஒப்புக் கொண்டாலோ அவளைக் கல்லெறிந்து கொல்வது அல்லாஹ்வின் கட்டளையாகும்'' என்று உமர்(ரலி) கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1249. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ، فَتَبَيَّنَ زِنَاهَا، فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلَا يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الْحَدَّ، وَلَا يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ، فَتَبَيَّنَ زِنَاهَا، فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ} مُتَّفَقٌ عَلَيْهِ وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
1249. ``உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமாகிவிட்டால் அவர் அவளுக்கு (ஐம்பது) கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மனவேதனைப்படுத்த வேண்டாம். பின்னரும் அவள் விபச்சாரம் செய்து அது நிரூபணமாகிவிட்டால் அவளுக்கு அவன் (ஐம்பது) கசையடி தரட்டும். அவளை ஏசிப் பேசி மன வேதனைப்படுத்த வேண்டாம். பின்னர், அவள் மூன்றாவது முறையும் விபச்சாரம் செய்து; அது நிரூபணமாகிவிட்டால், முடியால் செய்யப்பட்ட ஒரு கயிற்றுக்கேனும் அவளை விற்பனை செய்துவிடட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1250. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَقِيمُوا الْحُدُودَ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَهُوَ فِي "مُسْلِمٍ" مَوْقُوفٌ.
1250. ``உங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பெண்கள் மற்றும் அடிமைகள் மீது (அவர்கள் குற்றம் புரிந்து விட்டால்) தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஸ்லிம் `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1251. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَينٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ اِمْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا-فَقَالَتْ: يَا نَبِيَّ اللهِ! أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا. فَقَالَ: "أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَائْتِنِي بِهَا" فَفَعَلَ. فَأَمَرَ بِهَا فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا، ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، فَقَالَ عُمَرُ: أَتُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللهُ وَقَدْ زَنَتْ؟ فَقَالَ: "لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِّمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ، وَهَلْ وَجَدَتْ أَفَضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ؟} ". رَوَاهُ مُسْلِمٌ.
1251. ``விபச்சாரம் செய்து கர்ப்பிணியான ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருபெண், அதே நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளேன். என் மீது அதனை (தண்டனையை) நிறைவேற்றுங்கள்'' எனக் கூறினார்.
இதனைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவரின் பொறுப்பாளரை அழைத்து, அவரின் பொறுப்பாளரை அழைத்து, இவளுடன் நன்றாக நடந்து கொள்ளும் இவள் குழந்தை பெற்றெடுத்தும் என்னிடம் அழைத்துவாரும்'' எனக் கூறினார்கள். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றினார். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவளின் துணியை அவள் மீது கட்டிவிட்டு அவள் மீது கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அவளுக்கு நபி(ஸல்) ஜனாஸா தொழைகையும் நடத்தினார்கள். இதனைக் கண்ட உமர்(ரலி), ``இறைத்தூதர் அவர்களே! விபச்சாரம் செய்த ஒரு பெண்ணுக்கா தாங்கள் தொழுகை நடத்துகிறீர்கள்?'' எனக் கேட்டார்.
``அவள் செய்திருக்கும் பாவமன்னிப்பை இந்த மதீனா நகரில் உள்ள எழுபது மனிதர்களுக்குப் பிரித்துப் பங்கிட்டாலும் அது அவர்கள் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட போதுமானதாய் இருக்கும். அந்த அளவிற்கு அவள் பாவமன்னிப்புக் கோரியிருக்கிறாள். தன் உயிரை இறைவன் வசம் ஒப்படைத்துவிட்ட ஒரு பெண்ணை விடச் சிறந்த செயல் புரிந்தவரை நீர் கண்டதுண்டா?'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1252. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {رَجَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مَنْ أَسْلَمَ، وَرَجُلًا مِنَ الْيَهُودِ، وَاِمْرَأَةً} رَوَاهُ مُسْلِمٌ.
1252. அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் யூத குலத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் மற்றும் ஒரு பெண்ணுக்கும் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை இறைத்தூதர்(ஸல்) வழங்கினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1253. وَقِصَّةُ رَجْمِ الْيَهُودِيَّيْنِ فِي "الصَّحِيحَيْنِ" مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ.
1253. விபச்சாரம் புரிந்த யூதர்களையும் யூதப் பெண்ணையும் இறைத்தூதர்(ஸல்) கல்லெறிந்து கொன்ற (மரண தண்டனைக்கான தீர்ப்பை அளித்த) சம்பவம் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
1254. وَعَنْ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عِبَادَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ بَيْنَ أَبْيَاتِنَا رُوَيْجِلٌ ضَعِيفٌ، فَخَبَثَ بِأَمَةٍ مِنْ إِمَائِهِمْ، فَذَكَرَ ذَلِكَ سَعْدٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: "اِضْرِبُوهُ حَدَّهُ". فَقَالُوا: يَا رَسُولَ اللهِ! إِنَّهُ أَضْعَفُ مِنْ ذَلِكَ، فَقَالَ: "خُذُوا عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ، ثُمَّ اِضْرِبُوهُ بِهِ ضَرْبَةً وَاحِدَةً". فَفَعَلُوا} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ، وَإِسْنَادُهُ حَسَنٌ. لَكِنْ اخْتُلِفَ فِي وَصْلِهِ وَإِرْسَالِهِ.
1254. திருமணம் ஆகாத பலவீனமான சிறிய மனிதர் ஒருவர் எங்கள் வீடுகளில் இருந்து வந்தார். (ஒருமுறை) அவர் எங்கள் அடிமைப் பெண்களில் ஒருத்தியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். (இது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என் தந்தை சஅத்(ரலி) முறையிட்டார்.
``அவருக்கு அதற்கான கசையடி கொடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! அவர் மிகவும் பலவீனமானவர்'' என மக்கள் கூறினார்கள்.
``சிறு கிளைகள் கொண்ட பெரிய ஒன்றைப் பிடுங்கி அதனால் அவரை ஓர் அடி அடியுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அவர்களும் அவ்வாறே செய்தார்கள் என ஸயீத் இபனு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அறவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இது மவ்ஸுலா மற்றும் முர்ஸலா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
1255. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ، فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ، وَمَنْ وَجَدْتُمُوهُ وَقَعَ عَلَى بَهِيمَةٍ، فَاقْتُلُوهُ وَاقْتُلُوا الْبَهِيمَةَ} ". رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ،وَرِجَالُهُ مُوَثَّقُونَ، إِلَّا أَنَّ فِيهِ اِخْتِلَافًا.
1255. ``லூத்(அலை) அவர்களின் கூட்டத்தார் செய்த (ஓரினச் சேர்க்கை) செயலைச் செய்பவனை நீங்கள் கண்டால், செய்தவனையும் அதற்கு உடன்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்! (மரண தண்டனை கொடுங்கள்!) கால்நடையோடு உறவு கொள்பவனை, நீங்கள் கண்டால், அவனையும் அந்தக் கால்நடையையும் கொன்றுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இருப்பினும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.
1256. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ.} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّهُ اخْتُلِفَ فِي رَفْعِهِ، وَوَقْفِهِ.
1256. திருமணம் ஆகாத ஆணை, இறைத்தூதர்(ஸல்) (கசையால் நூறு அடி) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். அபூ பக்ர்(ரலி) (கசையால்) அடித்தார்கள். மேலும் ஊர்விலக்கம் செய்தார்கள். உமர்(ரலி) (கசையால்) அடித்தார்கள். இன்னும் ஊர் விலக்கம் செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இன்னும் இது `மர்ஃபூஃ' அல்லது `மவ்கூஃப்' என்பதில் கருதது வேறுபாடு உள்ளது.
1257. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ: {أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1257. பெண்களைப் போல (தன்னை) மாற்றிக் கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல (தன்னை) மாற்றிக் கொள்ளும் பெண்களையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள். மேலும், ``அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி (விரட்டி) விடுங்கள்'' எனக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1258. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِدْفَعُوا الْحُدُودَ، مَا وَجَدْتُمْ لَهَا مَدْفَعًا} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ.
1258. ``தண்டனைகளை விலக்கிக் கொள்ளும் முகாந்திரம் உள்ள வரை அவற்றை விலக்கிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது.
1259. وَأَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِلَفْظِ {ادْرَأُوا الْحُدُودَ عَنِ الْمُسْلِمِينَ مَا اِسْتَطَعْتُمْ} " وَهُوَ ضَعِيفٌ أَيْضًا.
1259. ``உங்களால் முடிந்த அளவு முஸ்லிம்களை விட்டு தண்டனைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) வாயிலாக திர்மிதீ மற்றும் ஹாகிமில் உள்ளது. இதுவும் `ளயீஃப்' எனும் தரத்திலேயே உள்ளது.
1260. وَرَوَاهُ الْبَيْهَقِيُّ: عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ (مِنْ) قَوْلِهِ بِلَفْظِ: {ادْرَأُوا الْحُدُودَ بِالشُّبُهَاتِ}
1260. ``சந்தேகங்கம் வந்துவிட்டால் தண்டனைகளைத் தவிர்த்து விடுங்கள்'' (என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்) என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
1261. وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِجْتَنِبُوا هَذِهِ الْقَاذُورَاتِ الَّتِيْ نَهَى اللهُ تَعَالَى عَنْهَا، فَمَنْ أَلَمَّ بِهَا فَلْيَسْتَتِرْ بِسِتْرِ اللهُ تَعَالَى، وَلِيَتُبْ إِلَى اللهِ تَعَالَى، فَإِنَّهُ مَنْ يَبْدِ لَنَا صَفْحَتَهُ نُقِمْ عَلَيْهِ كِتَابَ اللهُ رَوَاهُ الْحَاكِمُ، وَهُوَ فِي "اَلْمُوْطَّإِ" مِنْ مَرَاسِيلِ زَيْدِ بْنِ أَسْلَمَ.بَابُ حَدِّ الْقَذْفِ
1261. ``அல்லாஹ் தடை செய்துள்ள தீயே செயல்களையும் தீய பேச்சுக்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். யார் ஒரு குற்றத்தைப் புரிகிறானோ, அல்லாஹ் அதனை மறைத்தவாறே அவன் அதனை மறைத்துக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோராட்டும். நம்மிடம் தன் குற்றத்தை வெளிப்படுத்துபவன் மீது நாம் இச்சட்டத்தை நிலை நிறுத்துவோம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இது முஅத்தாவில் ஸைத் இப்னு அஸ்லம் வாயிலாக `முர்ஸல்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1262. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {لَمَّا نَزَلَ عُذْرِي، قَامَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ ذَلِكَ وَتَلَا الْقُرْآنَ، فَلَمَّا نَزَلَ أَمَرَ بِرَجُلَيْنِ وَاِمْرَأَةٍ فَضُرِبُوا الْحَدَّ} أَخْرَجَهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ.
1262. நான் தூய்மையானவன் என எடுத்துரைக்கும் இறைவசனம் அருளப்பட்டதும் இறைத்தூதர்(ஸல்) மிம்பரில் ஏறி அதைக் கூறிவிட்டு குர்ஆனை ஓதினார்கள். பின்னர், கீழே இறங்கி இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது புகாரீயிலும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு: தண்டிக்கப்பட்ட அவர்கள், ஹஸ் ஸான் இப்னு ஸாபித், மிஸ் தஹ் மற்றும் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆவர்.
1263. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَوَّلَ لِعَانٍ كَانَ فِي الْإِسْلَامِ أَنَّ شَرِيكَ بْنُ سَمْحَاءَ قَذَفَهُ هِلَالُ بْنُ أُمَيَّةَ بِاِمْرَأَتِهِ، فَقَالَ لَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "اَلْبَيِّنَةَ وَإِلَّا فَحَدٌّ فِي ظَهْرِكَ"} اَلْحَدِيثَ أَخْرَجَهُ أَبُو يَعْلَي، وَرِجَالُهُ ثِقَاتٌ.
1263. ஷரீக் இப்னு ஸஹ்மாவின் மீது ஹிலால் இப்னு உமையா இணைத்து (விபச்சாரக்) குற்றம் சாட்டினார்.
``சாட்சி கொண்டுவா! இல்லையெனில், உன் முதுகில் கசையடிதான் (விழும்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ யஃலா
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1264. وَفِي الْبُخَارِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عَنْهُمَا.
1264. இன்னும் இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக புகாரீயிலும் இது போன்ற ஹதீஸ் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: காண்க புகாரீ ஹதீஸ் எண் 4747
1265. وَفِي الْبُخَارِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ.وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ بْنِ رَبِيعَةَ قَالَ: {لَقَدْ أَدْرَكَتُ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ، وَمِنْ بَعْدَهُمْ، فَلَمْ أَرَهُمْ يَضْرِبُونَ الْمَمْلُوكَ فِي الْقَذْفِ إِلَّا أَرْبَعِينَ} رَوَاهُ مَالِكٌ، وَالثَّوْرِيُّ فِي "جَامِعِهِ".
1265. ``அபூ பக்ர், உமர், உஸ்மான் மற்றும் அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அனைவரும் அவதூறுக் குற்றம் புரிந்த அடிமைகளுக்கு நாற்பது கசையடிகள் தருவதைத்தான் நான் கண்டுள்ளேன்'' என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார். இதனை இமாம் மாலிக்(ரஹ்) தம்முடைய ஜாமிவு எனும் நூலில் பதிவிட்டுள்ளார்.
1266. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مِنْ قَذْفَ مَمْلُوكَهُ يُقَامُ عَلَيْهِ الْحَدُّ يَوْمَ الْقِيَامَةِ، إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ حَدِّ السَّرِقَةِ
1266. ``தன் அடிமையின் மீது அவதூறாகக் குற்றம் சாட்டியவன் சொன்னது போல் (அவன்) இல்லை எனில் மறுமையில் அவனுக்குக் கசையடி கொடுக்கப்படும்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1267. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {لَا تُقْطَعُ يَدُ سَارِقٍ إِلَّا فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا} مُتَّفَقٌ عَلَيْهِ. وَاللَّفْظُ لِمُسْلِمٍ. وَلَفْظُ الْبُخَارِيِّ: "تُقْطَعُ الْيَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا "وَفِي رِوَايَةٍ لِأَحْمَدَ "اِقْطَعُوا فِي رُبُعِ دِينَارٍ، وَلَا تَقْطَعُوا فِيمَا هُوَ أَدْنَى مِنْ ذَلِكَ"
1267. ``கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமானதற்காகவே தவிர, திருடனின் கை வெட்டப்படக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
``கால் தீனார் அல்லது அதற்கு அதிகமானதற்காக திருடனின் கை வெட்டப்படும்'' என்று (இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என) புகாரீயில் உள்ளது.
``கால் தீனாரில் கையை வெட்டுங்கள். அதற்குக் குறைவாக உள்ளதில் கையை வெட்டாதீர்கள்'' என அஹ்மதில் உள்ளது.