1282. وَعَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي شَارِبِ الْخَمْرِ: {إِذَا شَرِبَ فَاجْلِدُوهُ، ثُمَّ إِذَا شَرِبَ الثَّانِيَةِ فَاجْلِدُوهُ، ثُمَّ إِذَا شَرِبَ الثَّالِثَةِ فَاجْلِدُوهُ، ثُمَّ إِذَا شَرِبَ الرَّابِعَةِ فَاضْرِبُوا عُنُقَهُ} أَخْرَجَهُ أَحْمَدُ وَهَذَا لَفْظُهُ، وَالْأَرْبَعَة ُ. وَذَكَرَ التِّرْمِذِيُّ مَا يَدُلُّ عَلَى أَنَّهُ مَنْسُوخٌ، وَأَخْرَجَ ذَلِكَ أَبُو دَاوُدَ صَرِيحًا عَنِ الزُّهْرِيّ ِ.
1282. மது அருந்துபவனுக்குரிய தண்டனை பற்றிக் குறிப்பிட்டபோது, ``அவன் மது குடித்தால் கசையடி கொடுங்கள். மீண்டும் அவன் மது குடித்தால் கசையடி அடியுங்கள். அவன் மூன்றாம் முறையும் மது குடித்தால் அப்போதும் அவனுக்குக் கசையடி கொடுங்கள். அவன் பின்னர், நான்காவது முறையும் மது குடித்தால் அவனுடைய கழுத்தை வெட்டிவிடுங்கள் (தலையைக் கொய்துவிடுங்கள்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
``நான்காவது முறையாகக் குடித்துவிட்டு வந்தால் அவனைக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிடுங்கள்'' என்று சொல்லும் இந்த ஹதீஸின் சட்டம் மற்றோர் அறிவிப்பின் வாயிலாக மாற்றப்பட்டுவிட்டது என இமாம் திர்மிதீ(ரஹ்) கூறியுள்ளார். வெளிப்படையான அந்த அறிவிப்பை ஸுஹ்ரீ(ரஹ்) வாயிலாக இமாம் அபூ தாவூத்(ரஹ்) தம்முடைய நூலில் பதிவிட்டுள்ளார்.
1283. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" إِذَا ضَرَبَ أَحَدُكُمْ فَلْيَتَّقِ الْوَجْهَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1283. ``நீங்கள் யாரையேனும் அடிக்க நேர்ந்தால், முகத்தில் அடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1284. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" لَا تُقَامُ الْحُدُودُ فِي الْمَسَاجِدِ"} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ.
1284. ``இறைஇல்லத்தில் தண்டனைகள் நிறைவேற்றப்படக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, ஹாகிம்
1285. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَقَدْ أَنْزَلَ اللهُ تَحْرِيمَ الْخَمْرِ، وَمَا بِالْمَدِينَةِ شَرَابٌ يَشْرَبُ إِلَّا مِنْ تَمْرٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1285. மதுவைத் தடை செய்யும் சட்டத்தை அல்லாஹ் அருளியபோது மதீனாவில் பேரீச்சம்பழத்தால் செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த மதுவும் இருக்கவில்லை என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1286. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، وَهِيَ مِنْ خَمْسَةِ: مِنَ الْعِنَبِ، وَالتَّمْرِ، وَالْعَسَلِ، وَالْحِنْطَةِ، وَالشَّعِيرِ. وَالْخَمْرُ: مَا خَامَرَ الْعَقْلَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1286. ``மது தடை செய்யப்பட்ட செய்தி இறக்கப்பட்டபோது, திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை மற்றும் வாற்கோதுமை ஆகிய ஐந்து பொருள்களால் மது தயாரிக்கப்பட்டு வந்தது. அறிவுக்குத் திரையிட்டு மறைப்பதே மதுவாகும்'' என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1287. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ"} أَخْرَجَهُ مُسْلِمُ.
1287. ``போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் மதுவாகும் போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1288. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ"} أَخْرَجَهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ. وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1288. ``எந்தப் பொருளை அதிக அளவில் அருந்தினால் அது போதை உண்டாக்குமோ அதனைக் குறைந்த அளவில் அருந்துவதும் தடைசெய்யப்பட்டதேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1289. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْبَذُ لَهُ الزَّبِيبُ فِي السِّقَاءِ، فَيَشْرَبُهُ يَوْمَهُ، وَالْغَدَ، وَبَعْدَ الْغَدِ، فَإِذَا كَانَ مَسَاءُ الثَّالِثَةِ شَرِبَهُ وَسَقَاهُ، فَإِنْ فَضَلَ شَيْءٌ أَهْرَاقَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1289. நபி(ஸல்), உலர்ந்த திராட்சையால் நபீத் எனும் பானத்தைத் தயாரித்து முதல் நாள், அதற்கடுத்த நாள் மற்றும் மூன்றாம் நாள் மாலை வரை அதைக் குடிப்பார்கள். பிறருக்குக் குடிக்கக் கொடுப்பார்கள். அதற்குப் பின்பு அதில் ஏதாவது மிச்சம் இருந்தால், அதைக் கீழே கொட்டிவிடுவார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1290. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"إِنَّ اللهُ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ"} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1290. ``அல்லாஹ் உங்களுக்கு எவற்றைத் தடைசெய்திருக்கிறானோ அவற்றில் அவன் உங்களுக்கு நிவாரணத்தை வைக்கவில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1291. وَعَنْ وَائِلٍ الْحَضْرَمِيِّ؛ أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ يَصْنَعُهَا لِلدَّوَاءِ؟ فَقَالَ:" إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ، وَلَكِنَّهَا دَاءٌ"} أَخْرَجَهُ مُسْلِمٌ. وَأَبُو دَاوُدَ وَغَيْرُهُمَا.بَاب التَّعْزِيرِ وَحُكْمِ الصَّائِلِ
1291. மருந்துக்காகத் தயாரிக்கும் மது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தாரிக் இப்னு ஸுவைத்(ரலி) வினவினார்.
``நிச்சயமாக அது மருந்தல்ல; மாறாக அது நோயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என வாயில் இப்னு ஹள்ரமீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம் மற்றும் அபூ தாவூத்
1292. عَنْ أَبِي بُرْدَةَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"لَا يُجْلَدُ فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ، إِلَّا فِي حَدِّ مِنْ حُدُودِ اللهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1292. ``அல்லாஹ் கடமையாக்கியுள்ள தண்டனைகள் எதிலும் பத்து கசையடிக்கு மேல் அடிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற அனஸ் (ரலி) செவியுற்றதாக அபூ புர்தா அல் அன்ஸாரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1293. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" أَقِيلُوا ذَوِي الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ إِلَّا الْحُدُودَ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا، فَيَمُوتُ، فَأَجِدُ فِي نَفْسِي، إِلَّا شَارِبَ الْخَمْرِ؛ فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1293. ``இறைத் தண்டனைக்குரிய குற்றங்களைத் தவிர கண்ணியமானவர்கள் செய்யும் பிற தவறுகளுக்காக அவர்களை (தண்டிக்காமல்) மன்னித்துவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் பைஹகீ
1295. وَعَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" مِنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ"} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
1295. ``தன் சொத்தை (அநியாயமாகப் பிடுங்கிக் கொள்ள ஒருவர் முனையும்போது அதை) பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் கொல்லப்பட்டால், அவர் உயிர்த்தியாகி ஆவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிட்டுள்ளார்.
1296. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَّابٍ قَالَ: سَمِعْتَ أَبِي رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" تَكُونُ فِتَنٌ، فَكُنْ فِيهَا عَبْدَ اللهِ الْمَقْتُولَ، وَلَا تَكُنِ الْقَاتِلَ"} أَخْرَجَهُ ابْنُ أَبِي خَيْثَمَةَ. وَالدَّارَقُطْنِيُّ.
1296. ``அல்லாஹ்வின் அடிமையே! (விரைவில்) பல குழப்பங்கள் தோன்றும். அப்போது நீ கொலை செய்யப்பட்டவனாய் இருக்கலாம். (ஆனால்) கொலைகாரனாய் இருக்கக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என்று என் தந்தை கூறினார் என அப்துல்லாஹ் இப்னு கப்பாப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு அபூ கைஸமா, தாரகுத்னீ
1297. وَأَخْرَجَ أَحْمَدُ نَحْوَهُ: عَنْ خَالِدِ بْنِ عُرْفُطَةَ رَضِيَ اللهُ عَنْهُ. كِتَابُ الْجِهَادِأَحَادِيثَ فِي الْجِهَادِ
1297. ஃகாலித் இப்னு உர்ஃபுதா வாயிலாக அஹ்மதில் மேற்கண்ட ஹதீஸ் போன்று உள்ளது.

1298. عَنْ أَبِي هُرَيْرَةَ رَ ضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ نَفْسَهُ بِهِ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1298. ``(சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காகப்) போரிடாமலும், அது குறித்த எண்ணங்கூட இல்லாமலும் இறப்பவன் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்துடனேயே இறக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1299. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ، وَأَنْفُسِكُمْ، وَأَلْسِنَتِكُمْ"} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1299. ``நீங்கள் உங்கள் பொருட்கள், உங்கள் உயிர்கள் மற்றும் உங்கள் நாவுகள் மூலம் இணைவைப்பாளர்களுடன் அறப்போரிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1300. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ ! عَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: "نَعَمْ. جِهَادٌ لَا قِتَالَ فِيهِ، اَلْحَجُّ وَالْعُمْرَةُ"}. رَوَاهُ اِبْنُ مَاجَه. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
1300. ``இறைத்தூதர் அவர்களே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா?'' என நான் கேட்டேன்.
``ஆமாம் அவர்களுக்கு போரில்லாத ஜிஹாத் உண்டு. அது ஹஜ் மற்றும் உம்ராவாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
1301. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ. فَقَالَ: " أَ حَيٌّ وَالِدَاكَ؟"، قَالَ: نَعَمْ: قَالَ: " فَفِيهِمَا فَجَاهِدْ"}. مُتَّفَقٌ عَلَيْهِ.
1301. ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் வந்து ஜிஹாதில் (கலந்து கொள்ள) அனுமதி கோரினார்.
``உன் பெற்றோர் உயிருடன் உள்ளனரா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``ஆமாம்'' என அவர் கூறினார்.
``நீ அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நீர் ஜிஹாத் செய்வீராக!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவரிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை முதிய வயதில் நல்ல விதமாகப் பராமரித்து, பணிவிடை செய்து அவர்களின் நலனுக்காக உழைப்பதும் ஜிஹாத் எனும் அறப்போரின் ஓர் அம்சமாகும்.