1319. وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالسَّلَبِ لِلْقَاتِلِ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ.
1319. (போரில் எதிரியைக்) கொன்றவருக்கே கொலை செய்யப்பட்டவனின் பொருட்கள் சொந்தம் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
1320. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي - قِصَّةِ قَتْلِ أَبِي جَهْلٍ - قَالَ: {فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلَاهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَاهُ، فَقَالَ: "أَيُّكُمَا قَتَلَهُ؟ هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا ؟" قَالَا: لَا. قَالَ: فَنَظَرَ فِيهِمَا، فَقَالَ: "كِلَاكُمَا قَتَلَهُ، سَلْبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِوِ بْنِ الْجَمُوحِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1320. அபூ ஜஹல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) கூறுகையில், ``அவர்கள் இருவரும் விரைவாக வாளைச் சுழற்றி(வெட்டி)னார்கள். அவன் இறந்துவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைக் கூறினார்கள்.
``உங்கள் இருவரில் அவனை யார் வெட்டியது? நீங்கள் வாளைத் துடைத்து (சுத்தப்படுத்தி) விட்டீர்களா?'' என்று இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``இல்லை'' என அவர்கள் கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அந்த வாளைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ``நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள்'' என்று (ஆறுதலாகச்) கூறினார்கள்.
பிறகு அவனுடைய பொருட்களை (அபூ ஜஹ்லைக் கொல்லத் துணை புரிந்த மூன்றாமவர்) முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ்(ரலி) எடுத்துக் கொள்ளட்டும் என்று தீர்ப்பளித்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1321. وَعَنْ مَكْحُولٍ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصَبَ الْمَنْجَنِيقَ عَلَى أَهْلِ الطَّائِفِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي "الْمَرَاسِيلِ" وَرِجَالُهُ ثِقَاتٌ.وَوَصَلَهُ الْعُقَيْلِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ.
1321. தாயிஃப் நகரவாசிகளுடன் நிகழ்ந்த போரில் மிஞ்ஜனீக் எனும் ஆயுதத்தை இறைத்தூதர்(ஸல்) பயன்படுத்தினார்கள் என மக்ஹூல்(ரலி) அறிவித்தார்.
இது அபூ தாவூதில் `முர்ஸல்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
அலீ(ரலி) வாயிலாக இமாம் உகைலீ(ரஹ்) `ளயீஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1322. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ: "اُقْتُلُوهُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1322. இறைத்தூதர்(ஸல்) (மக்கா நகரை வெற்றி கொண்ட பின்) மக்காவினுள் நுழையும்போது தன் தலையில் இரும்புத் தொப்பி அணிந்திருந்தார்கள். அவர்கள் அதைக் கழற்றியபோது ஒருவர் வந்து, ``இப்னு கதல் என்பவன் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்'' எனக் கூறினார்.
``அவனைக் கொன்றுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1323. وَعَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتَلَ يَوْمَ بَدْرٍ ثَلَاثَةً صَبْراً} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي "الْمَرَاسِيلِ" وَرِجَالُهُ ثِقَاتٌ.
1323. பத்ருப் போரின்போது மூன்று நபர்களைக் கட்டி வைத்து இறைத்தூதர்(ஸல்) கொன்றார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
அபூ தாவூதில் `முர்ஸல்' எனும் தரத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1324. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَى رَجُلَيْنِ مِنَ الْمُسْلِمِينَ بِرَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ. وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ.
1324. இரண்டு முஸ்லிம் ஆண்களை (எதிரிகள்) விடுதலை செய்வதற்காக இறைத்தூதர்(ஸல்) ஒரு முஷ்ரிக்கை (இணைவைப்பாளரை) விடுதலை செய்தார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
1325. وَعَنْ صَخْرِ بْنِ اَلْعَيْلَةِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"إِنَّ الْقَوْمَ إِذَا أَسْلَمُوا ؛ أَحْرَزُوا دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَرِجَالُهُ مُوَثَّقُونَ.
1325. ``மக்கள் இஸ்லாமை ஏற்று இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் அவர்கள் தங்களின் உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸக்ர் இப்னு அய்லா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1326. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعَمٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ: {" لَوْ كَانَ الْمُطْعَمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1326. இறைத்தூதர்(ஸல்) பத்ருப் போர்க் கைதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் ``முத்யிம் இப்னு அதீ உயிருடன் இருந்திருப்பின் இந்த நாற்றம் பிடித்த கைதிகளுக்காக என்னிடம் பேசியிருப்பார். நான் அவருக்காக இவர்களை விடுவித்திருப்பேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
குறிப்பு: நபி (ஸல்) தம் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் துணைவியார் கதீஜா(ரலி) ஆகியோரின் மரணத்திற்குப் பின்பு தாயிஃப் நகரத்திற்குச் சென்று, இஸ்லாமிய அழைப்பை அந்நகர மக்களின் முன்பு எடுத்துரைத்தார்கள். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். பின்னர் அங்கிருந்து மக்கா நகருக்கு நபி(ஸல்) திரும்பி வந்தார்கள். குறைஷிகள் நபி(ஸல்) அவர்களை நகருக்குள் நுழையவிடவில்லை. அப்போது, இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ள முத்யிம் இப்னு அதீயின் அபயம் பெற்றுத்தான் நபி(ஸல்) மக்காவினுள் நுழைந்தார்கள். எனவேதான், ``முத்யிம் இப்போது உயிரோடு இருந்து சிபாரிசு செய்திருந்தால், அவர் அன்று செய்த உதவிக்கு கைமாறாக இவர்களை விடுதலை செய்திருப்பேன்'' என நபி(ஸல்) கூறினார்கள்.
1327. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَصَبْنَا سَبَايَا يَوْمَ أَوْطَاسٍ لَهُنَّ أَزْوَاجٌ، فَتَحَرَّجُوا، فَأَنْزَلَ اللهُ تَعَالَى: وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ } أَخْرَجَهُ مُسْلِمٌ.
1327. அவ்தாஸ் கணவாய் போரின்போது எங்களுக்குச் சில (கணவன் உயிருடன் இருக்கும்) பெண்கள் கைதிகளாகக் கிடைத்தனர். அவர்களுடன் உறவு கொள்வதை நபித்தோழர்கள் பாவம் எனக் கருதினார்கள். அப்போது 42:4 வசனம் இறக்கப்பட்டது என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1328. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {بَعَثَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةٍ وَأَنَا فِيهِمْ، قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلاً كَثِيرَةً، فَكَانَتْ سُهْمَانُهُمْ اِثْنَيْ عَشَرَ بَعِيراً، وَنُفِّلُوا بَعِيراً بَعِيراً} مُتَّفَقٌ عَلَيْهِ.
1328. நஜ்தை நோக்கி ஒரு சிறு படையை இறைத்தூதர்(ஸல்) அனுப்பினார்கள். அதில் நானும் இருந்தேன். அந்தப் போரில் நாங்கள் அதிகமான ஒட்டகங்களை கைப்பற்றிக் கொண்டு வந்தோம். அதில் ஒவ்வொருவருக்கும் பன்னிரெண்டு ஒட்டகங்கள் பங்காகக் கிடைத்தது. அவர்களுக்கு ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகவும் கொடுக்கப்பட்டது என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1329. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قَسَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ لِلْفَرَسِ سَهْمَيْنِ، وَلِلرَّاجِلِ سَهْمًا} مُتَّفَقٌ عَلَيْهِ. وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1329. கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) குதிரை வீரர்களுக்கு இரண்டு பங்குகளும், வாகனம் இல்லாத வீரர்களுக்கு ஒரு பங்கும் என கனீமத் பொருளைப் பங்கிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1330. وَلِأَبِي دَاوُدَ: {أَسْهَمَ لِرَجُلٍ وَلِفَرَسِهِ ثَلَاثَةَ أَسْهُمٍ: سَهْمَيْنِ لِفَرَسِهِ، وَسَهْماً لَهُ}.
1330. இறைத்தூதர்(ஸல்) ஒரு மனிதருக்கும் அவரின் குதிரைக்கும் மூன்று பங்குகள் கொடுத்தார்கள். (அதில்) இரண்டு பங்குகள் அவரின் குதிரைக்கும், ஒரு பங்கு அவருக்கும் ஆகும் என அபூ தாவூதில் உள்ளது.
1331. وَعَنْ مَعْنِ بْنِ يَزِيدَ رَضِيَ اللهُ عَنْهُمَاقَالَ: {سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَا نَفْلَ إِلَّا بَعْدَ الْخُمُسِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الطَّحَاوِيُّ.
1331. ``(கனீமத் பொருள்) அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரிய குமுஸ் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தப் பின்னர் மட்டுமே அதிகப்படியாக கொடுக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என மஃன் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் தஹாவீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1332. وَعَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {شَهِدْتُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفَّلَ الرُّبْعَ فِي الْبَدْأَةِ، وَالثُّلُثَ فِي الرَّجْعَةِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ الْجَارُودِ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1332. நபி(ஸல்) அவர்களுடன் நான் ஒரு போரில் கலந்து கொண்டேன். ஆரம்பத்தில் நான்கில் ஒரு பாகமும் திரும்பி வரும்போது மூன்றில் ஒரு பாகமும் அதிகப்படியாகவும் கொடுத்தார்கள் என ஹபீப் இப்னு மஸ்லமா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னுல் ஜாரூத், இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகி(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1333. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَفِّلُ بَعْضَ مَنْ يَبْعَثُ مِنَ السَّرَايَا لِأَنْفُسِهِمْ خَاصَّةً، سِوَى قَسْمِ عَامَّةِ الْجَيْشِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1333. இறைத்தூதர்(ஸல்) படைக் குழுக்களில் தாம் அனுப்பி வைக்கும் வீரர்களில் சிலருக்கு பிரத்யேகமான முறையில் (போர்ச் செல்வங்களில்) பொதுவாகப் படைவீரர்களுக்கு எனக் கொடுக்கும் பங்கு போக அதிகப்படியாகவும் கொடுப்பார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1334. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نُصِيبُ فِي مَغَازِينَا الْعَسَلَ وَالْعِنَبَ، فَنَأْكُلُهُ وَلَا نَرْفَعُهُ} رَوَاهُ الْبُخَارِيُّ. وَلِأَبِي دَاوُدَ: {فَلَمْ يُؤْخَذْ مِنْهُمُ الْخُمُسُ}. وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
1334. நாங்கள் கலந்து கொள்ளும் புனிதப் போர்களில் தேன் மற்றும் திராட்சையைப் பெறுவோம். அதனை நாங்கள் சாப்பிட்டுவிடுவோம்; எடுத்துவரமாட்டோம் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
``அதில் `குமுஸ்' ஐந்திலொரு பங்கு எடுக்கப்படவில்லை'' என அபூ தாவூதில் உள்ளது. இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1335. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أَصَبْنَا طَعَاماً يَوْمَ خَيْبَرَ، فَكَانَ الرَّجُلُ يَجِيءُ، فَيَأْخُذُ مِنْهُ مِقْدَارَ مَا يَكْفِيهِ، ثُمَّ يَنْصَرِفُ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ الْجَارُودِ، وَالْحَاكِمُ.
1335. கைபர் போரில் எங்களுக்கு உணவுப் பொருள் கிடைத்தது. எங்களில் ஒவ்வொருவரும் வந்து, தங்களுக்குப் போதுமான அளவு எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிடுவர் என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னுல் ஜாரூத் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1336. وَعَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهُ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَرْكَبُ دَابَّةً مِنْ فَيْءِ الْمُسْلِمِينَ، حَتَّى إِذَا أَعْجَفَهَا رَدَّهَا فِيهِ، وَلَا يَلْبَسُ ثَوْباً مِنْ فَيْءِ الْمُسْلِمِينَ حَتَّى إِذَا أَخْلَقَهُ رَدَّهُ فِيهِ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالدَّارِمِيُّ، وَرِجَالُهُ لَا بَأْسَ بِهِمْ.
1336. ``அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் முஸ்லிம்களின் வெற்றிச் செல்வத்திலிருந்து எந்த (கால்நடை) வாகனத்திலும் சவாரி செய்ய வேண்டாம். அதனை (நன்கு பயன்படுத்திக் கொண்டு) மெலியச் செய்த பின்பு, அதைத் திருப்பித் தர வேண்டாம். மேலும், அவர் முஸ்லிம்களின் வெற்றிச் செல்வத்திலிருந்து எந்த ஆடையையும் எடுத்து அணிய வேண்டாம். அதனை (நன்கு உடுத்திப்) பழையதாக்கி விட்டுப் பின்னர் திருப்பித் தர வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ருவைஃபிவு இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், தாரிமீ
இதன் அறிவிப்பாளர்களில் குளறு படி ஏதும் இல்லை.
குறிப்பு: போரில் சண்டையிடாமல் கிடைக்கும் பொருள் ஃபைவு எனப்படும்.
1337. وَعَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" يُجِيرُ عَلَى الْمُسْلِمِينَ بَعْضُهُمْ"} أَخْرَجَهُ ابْنُ أَبِي شَيْبَةَ، وَأَحْمَدُ، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
1337. ``முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அபயம் அளித்துக் கொள்ளலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூ உபைதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு அபீ ஷைபா, அஹ்மத்
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1338. وَلِلْطَيَالِسِيِّ: مِنْ حَدِيثِ عَمْرِوِ بْنِ الْعَاصِ: {" يُجِيرُ عَلَى الْمُسْلِمِينَ أَدْنَاهُمْ"}.
1338. ``முஸ்லிம்களில் கடைசித் தரத்தில் இருப்பவரும் அபயம் அளிக்கலாம்'' என அம்ர் இப்னு ஆஸ்(ரலி) வாயிலாக தயாலிஸ் எனும் நூலில் உள்ளது.