1341. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"لَأَخْرِجَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، حَتَّى لَا أَدَعَ إِلَّا مُسْلِماً"} رَوَاهُ مُسْلِمٌ.
1341. ``முஸ்லிம்களைத் தவிர்த்து வேறு யாரையும் விட்டு வைக்காத நிலை வரும் வரை யூதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நான் அரபு தீபகற்பத்தை விட்டு வெளியேற்றி விடுவேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவுயற்றுள்ளேன் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1342. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِهِ، مِمَّا لَمْ يُوجِفْ عَلَيْهِ الْمُسْلِمُونَ بِخَيْلٍ وَلَا رِكَابٍ، فَكَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً، فَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَةٍ، وَمَا بَقِيَ يَجْعَلُهُ فِي الْكُرَاعِ وَالسِّلَاحِ، عُدَّةً فِي سَبِيلِ اللهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1342. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள், முஸ்லிம்கள் அவர்களின் குதிரை மற்றும் ஒட்டகத்தைக் கொண்டு போரிட்டு சண்டையிடாமல் கிடைத்தப் பொருட்களைச் சேர்ந்தவற்றில் உள்ளவையாகும். இச்சொத்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்ததாகும். அவற்றை அவர்கள் தம் மனைவியருக்கு ஆண்டு முழுக்கச் செலவிட்டு அதில் மிச்சம் இருப்பதை அல்லாஹ்வின் பாதையில் குதிரைகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதில் செலவிடுவார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1343. وَعَنْ مُعَاذٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، فَأَصَبْنَا فِيهَا غَنَمًا، فَقَسَمَ فِينَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَائِفَةً، وَجَعَلَ بَقِيَّتَهَا فِي الْمَغْنَمِ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَرِجَالُهُ لَا بَأْسَ بِهِمْ.
1343. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் மீது போர் தொடுத்தோம். கைபரில் எங்களுக்கு ஆடுகள் கிடைத்தன. அவற்றில் ஒரு மந்தையை எங்களிடையே பங்கிட்டுவிட்டு, மீதமிருந்ததை இறைத்தூதர்(ஸல்) கனீமத் பொருளுடன் சேர்த்தார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் குறையுள்ளவர்கள் அல்ல.
1344. وَعَنْ أَبِي رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ، وَلَا أَحْبِسُ الرُّسُلَ "} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
1344. ``நான் ஒப்பந்தத்தை முறிக்க மாட்டேன்! மேலும், பிறநாட்டுத் தூதர்களை (வெளியுறவுத் துறை அதிகாரிகளைத்) தடுக்கமாட்டேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ராஃபிஃவு அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1345. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"أَيُّمَا قَرْيَةٍ أَتَيْتُمُوهَا، فَأَقَمْتُمْ فِيهَا، فَسَهْمُكُمْ فِيهَا، وَأَيُّمَا قَرْيَةٍ عَصَتِ اللهَ وَرَسُولَهُ، فَإِنْ خُمُسَهَا لِلَّهِ وَرَسُولِهِ، ثُمَّ هِيَ لَكُمْ"} رَوَاهُ مُسْلِمٌ.بَاب الْجِزْيَةَ وَالْهُدْنَةَ
1345. ``(முஸ்லிம்களே!) நீங்கள் எந்த ஊருக்குச் சென்று தங்கிவிடுகிறீர்களோ அதில்தான் உங்களுக்குப் பங்கு கிடைக்கும். இன்னும் எந்த ஊர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு மாறுசெய்கிறதோ அதில் ஐந்தல் ஒரு பங்கு அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு உரியது. பின்னர், (எஞ்சியது) உங்களுக்குரியது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: இது எதிர்ப்பின்றி பெற்றுக் கொள்ளப்பட்ட ஊராகும். இதில் கிடைக்கும் செல்வங்களுக்கு `ஃபய்வு' எனப் பெயர். இதில் இறைத்தூதருக்கு உரிய 'குமுஸ்' அதாவது ஐந்தில் ஒரு பங்கு கிடையாது. (அந்த ஊரில் தங்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்கும்.)
இரண்டாவது: எதிர்ப்பைக் காட்டி போரின் மூலம் வெற்றி கொள்ளப்பட்ட ஊராகும். அதில் கிடைக்கும் செல்வம் `கனீமத்' எனப்படும். இதில்தான் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் உரிய `குமுஸ்' ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்படும். எஞ்சியவை இஸ்லாமிய வீரர்களுக்கிடையே பங்கிடப்படும்.
1346. عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَهَا - يَعْنِي: اَلْجِزْيَةُ - مِنْ مَجُوسِ هَجَرَ} رَوَاهُ الْبُخَارِيّ ُ. وَلَهُ طَرِيقٌ فِي "الْمَوْطَأِ" فِيهَا اِنْقِطَاعٍ.
1346. ஹஜர் பிரதேசத்தில் வசித்து வந்த (நெருப்பு வணங்கிகளான) மஜூஸிகளிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) ஜிஸ்யா வரி வசூலித்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
அறிவிப்புத் தொடர் விடுபட்ட நிலையில் முஅத்தாவிலும் வேறொரு வழியாக இது பதிவிடப்பட்டுள்ளது.
1347. وَعَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ أَنَسٍ، وَعَن ْعُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثٍ خَالِدُ بْنُ الْوَلِيدِ إِلَى أُكَيْدِرِ دُومَةَ، فَأَخَذُوهُ،فَحَقَنَ دَمِهِ، وَصَالَحَهُ عَلَى الْجِزْيَةِ} رَوَاهُ أَبُو دَاوُدَ.
1347. தூமத்துல் ஐந்தல் எனும் தேசத்தின் அரசன் உகைதிர் என்பவனிடம் இறைத்தூதர்(ஸல்) ஃகாலித் இப்னு வலீதை (ஒரு படையுடன்) அனுப்பினார்கள். அவர்கள் அவரைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவன் இஸ்லாமிய ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து, இரத்தம் சிந்தவிடாமல் அவனைப் பாதுகாத்தார்கள் என அபூ சுலைமான்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: அபூ தாவூத்
1348. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، وَأَمَرَنِي أَنْ آخُذَ مِنْ كُلِّ حَالِمٍ دِينَاراً، أَوْ عَدْلَهُ معافرياً} أَخْرَجَهُ الثَّلَاثَةِ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1348. இறைத்தூதர்(ஸல்) என்னை யமன் தேசம் அனுப்பி, ஒவ்வொரு பருவமடைந்தவரிடமும் ஒரு தீனார் அல்லது அதற்குச் சமமான யமன் நாட்டு (மஆஃபிர் நகரத்துத்) துணியை ஜிஸ்யா வரியாக வசூலிக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1349. وَعَنْ عَائِذٍ بْنُ عَمْرِوِ الْمُزَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"اَلْإِسْلَامِ يَعْلُو، وَلَا يُعْلَى"} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ.
1349. ``இஸ்லாம்தான் மேலோங்கும். வேறு எந்தக் கொள்கையாலும் அதனை வென்று மேலோங்க முடியாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயித் இப்னு அம்ர் அல் முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
1350. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" لَا تَبْدَؤُوا الْيَهُودَ وَالنَّصَارَى بِالسَّلَامِ، وَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ"} رَوَاهُ مُسْلِمٌ.
1350. ``யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு நீங்கள்முதலில் சலாம் (முகமன்) கூறாதீர்கள். நீங்கள் அவர்களை வழியில் சந்திக்கும்போது அவர்கள் (ஒடுங்கி நடக்கும் படி) குறுகலான பாதையில் செல்ல நிர்பந்தியுங்கள். (நீங்கள் விலகி வழிவிடாதீர்கள்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1351. وَعَنِ الْمِسْوَرِ بْنُ مَخْرَمَةَ. وَمَرْوَانُ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْحُدَيْبِيَةِ... فَذَكِّرْ الْحَدِيثَ بِطُولِهِ، وَفِيهِ: "هَذَا مَا صَالَحَ عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ سُهَيْلِ بْنِ عَمْرِوٍ: عَلَى وَضْعِ الْحَرْبِ عَشْرِ سِنِينَ، يَأْمَنُ فِيهَا النَّاسُ، وَيَكُفُّ بَعْضُهُمْ عَنْ بَعْضِ"} أَخْرَجَهُ أَبُو دَاوُد َ. وَأَصْلِهِ فِي الْبُخَارِيّ ِ.
1351. இறைத்தூதர்(ஸல்) ஹுதைபிய்யா ஆண்டில் (உம்ரா செய்ய மக்காவை நோக்கிப்) புறப்பட்டுச் சென்றபோது குறைஷிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் கூறுகிறார். அந்த ஹதீஸில் (சமாதான ஒப்பந்தம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்ததாக) உள்ளது.
இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் சுஹைலுடன், `மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக பத்து ஆண்டுகள் போர் புரிவதைக் கைவிட்டு, ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தாமல் நிறுத்திக் கொள்வோம் என்ற ஷரத்தின் பேரில் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும். இதனை மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன்மூலம் புகாரீயில் உள்ளது.
1352. وَأَخْرُجَ مُسْلِمٌ بَعْضِهِ مِنْ حَدِيثِ أَنَسٍ، وَفِيهِ: {أَنَّ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدْهُ عَلَيْكُمْ، وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا. فَقَالُوا: أَنَكْتُبُ هَذَا يَا رَسُولُ اللهِ؟ قَالَ: "نَعَمْ. إِنَّهُ مِنْ ذَهَبٍ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللهُ، وَمَنْ جَاءَنَا مِنْهُمْ، فَسَيَجْعَلُ اللهُ لَهُ فَرَجاً وَمُخْرِجاً"}.
1352. அதன் சில பகுதிகள் அனஸ்(ரலி) வாயிலாக முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ``உங்களிடமிருந்து எங்களிடம் வருபவரை நாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம். மேலும், எங்களிடமிருந்து உங்களிடம் வருபவரை நீங்கள் எங்களிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும்'' என்று இருந்தது. (இதனைக் கண்ட) நபித்தோழர்கள் ``இறைத்தூதர் அவர்களே! இதனை எழுதப் போகிறீர்களா?'' எனக் கேட்டனர்.
``ஆமாம்; நம்மை விட்டு அவர்களிடம் செல்பவரை அல்லாஹ்வே தூரமாக்கி விட்டான். அவர்களில், நம்மிடம் வருபவரை, நாம் அவர்களிடமே திருப்பி அனுப்பினாலும் ஏதேனும் ஒரு வழியை அல்லாஹ் அவருக்கு ஏற்படுத்துவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
1353. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو ٍ ؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مِنْ قَتْلِ مُعَاهِداً لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لِيُوجَدَ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامّاً"} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.بَاب السَّبْقِ وَالرَّمْيِ
1353. ``இஸ்லாமிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் பிரஜையாக வாழும் முஸ்லிம் அல்லாத வரைக் கொல்பவன் சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டான். அதன் நறுமணமோ நாற்பதாண்டு காலப் பயண தூரத்துக்கு வீசக் கூடியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1354. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {سَابَقَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْخَيْلِ الَّتِيْ قَدْ أُضْمِرَتْ، مِنَ الْحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةِ الْوَدَاعِ. وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِيْ لَمْ تُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِد ٍبَنِي زُرَيْقٍ، وَكَانَ اِبْنُ عُمَرَ فِيمَنْ سَابَقَ} مُتَّفَقٌ عَلَيْهِزَادَ الْبُخَارِيُّ، قَالَ سُفْيَانُ: مِنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعُ خَمْسَةِ أَمْيَالٍ، أَوْ سِتَّةَ، وَمِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيل ٍ.
1354. ஹஃப்யா எனும் இடத்திலிருந்து ஸனிய்யத்துல் வதாஃ எனும் இடம் வரைக்கும் மெலிந்த குதிரைகளுக்கு இடையில் இறைத்தூதர்(ஸல்) பந்தயம் வைத்தார்கள். மேலும், ஸனிய்யாவிலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் இறைஇல்லம் வரை மெலியாத குதிரைகளுக்கு இடையில் பந்தயம் வைத்தார்கள். பந்தயத்தில் கலந்து கொண்டவர்களில் உமரும் ஒருவராய் இருந்தார் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஹஃப்யாவிலிருந்து ஸனிய்யத்துல் வதா வரை ஐந்து அல்லது ஆறு மைல் தூரமாகும். மேலும், ஸனிய்யாவிலிருந்து பனூ ஸுரைக் இறைஇல்லம் வரை ஒரு மைல் தூரமாகும் என சுஃப்யான் வாயிலாக புகாரீயில் அதிகப்படியாக உள்ளது.
1355. وَعَنْهُ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْقَ بَيْنَ الْخَيْلِ، وَفَضْلِ الْقَرْحُ فِي الْغَايَةِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1355. இறைத்தூதர்(ஸல்) குதிரைகளுக்கு மத்தியில் போட்டி வைத்தார்கள். அதிகத் தூரம் ஓடிய குதிரையைத் தேர்ந்தெடுத்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1356. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"لَا سَبْقَ إِلَّا فِي خُفٍّ، أَوْ نَصْلٍ، أَوْ حَافِرٍ"} رَوَاهُ أَحْمَدُ، وَالثَّلَاثَةَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1356. ஒட்டகம் குதிரை மற்றும் அம்பு எய்வது தவிர வேறு எதிலும் பந்தயமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1357. وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" مَنْ أَدْخُلُ فَرَساً بَيْنَ فَرَسَيْنِ - وَهُوَ لَا يَأْمَنُ أَنْ يَسْبِقَ - فَلَا بَأْسَ بِهِ، وَإِنْ أَمِنَ فَهُوَ قِمَارٌ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ.
1357. இரண்டு குதிரைகளுக்கு இடையில் ஒருவர் தன்னுடைய குதிரையை நுழைத்து, அது தோற்கவும் கூடும் என்ற அச்சத்துடன் இருப்பதில் குற்றமில்லை. அது தோற்றுவிடும் என்ற அச்சமற்று இருப்பதே சூதாட்டம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இது `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1358. وَعَنْ عَقَبَةِ بْنُ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ {[ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقْرَأُ: وَأَعِدُّوا لَهُمْ مَا اِسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ "أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ}. رَوَاهُ مُسْلِمٌ.كِتَاب الْأَطْعِمَةِ
1358. இறைத்தூதர்(ஸல்) மிம்பரின் மீது இருந்தபடி பகைவர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக உங்களால் முடிந்த அளவு பலத்தையும், தயார் நிலையிலுள்ள குதிரைப்படையையும் திரட்டி வையுங்கள் என்னும் (7:60) இறைவசனத்தை ஓத நான் செவியுற்றுள்ளேன்.
(பின்னர் அவர்கள்) ``அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சக்தி அம்பு எய்வதில்தான் உள்ளது. அறிந்த கொள்ளுங்கள்! சக்தி அம்பு எய்வதில்தான் உள்ளது. அறிந்து கொள்ளுங்கள்! சக்தி அம்பு எய்வதில்தான் உள்ளது'' என்று (மும்முறை) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1359. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، فَأَكَلَهُ حَرَامٌ"} رَوَاهُ مُسْلِمٌ.
1359. ``விலங்குகளில் (கோரைப் பல்லுடைய) கீறிக் கிழிக்கும் ஒவ்வொன்றையும் உண்பது விலக்கப்பட்டதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1360. وَأَخْرَجَهُ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ بِلَفْظٍ: نَهَى. وَزَادَ: {"وَكُلُّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ"}.
1360. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பில், (தடை செய்தார்கள்) என உள்ளது. ``பறவைகளில் கால் நகங்களால் பிடித்துத் தூக்கி உண்பவை'' என்பதும் உள்ளது.