1448. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: "تَرَى الشَّمْسَ؟" قَالَ: نَعَمْ. قَالَ: "عَلَى مِثْلِهَا فَاشْهَدْ، أَوْ دَعْ"} أَخْرَجَهُ اِبْنُ عَدِيٍّ بِإِسْنَادٍ ضَعِيفٍ، وَصَحَّحَهُ الْحَاكِمُ فَأَخْطَأَ.
1448. இறைத்தூதர்(ஸல்) ஒரு மனிதரிடம், ``நீ சூரியனைப் பார்க்கிறாயா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``அதைப்போன்று தெளிவானவற்றில் சாட்சி சொல்! இல்லையேல் விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு அதீ(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளார்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தவறுதலாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1449. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِيَمِينٍ وَشَاهِدٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ. وَأَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ وَقَالَ: إِسْنَادُ[هُ جَيِّدٌ.
1449. ஒரு சத்தியம் மற்றும் ஒரு சாட்சியைக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இதன் அறிவிப்புத் தொடர் சரியானது என இமாம் நஸயீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: வாதியிடமிருந்து சாட்சியத்தையும், பிரதிவாதியிடமிருந்து சத்தியத்தையும் பெற்று அதன்படி தீர்ப்பளித்தார்கள்.
1450. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ. بَابُ الدَّعْوَى وَالْبَيِّنَاتِ
1450. அபூ தாவூத் மற்றும் திர்மிதீயில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1451. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ، لَادَّعَى نَاسٌ دِمَاءَ رِجَالٍ، وَأَمْوَالَهُمْ، وَلَكِنِ الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1451. ``மக்களுக்கு, அவர்களின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கோருவதை எல்லாம் (பிரதிவாதியை விசாரிக்காமல்) கொடுத்தோம் என்றால் மக்கள், பலரின் உயிருக்கும் உடமைக்கும் உரிமை கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். எனினும், பிரதிவாதியின் மீது (தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுப்பதற்கு) சத்தியம் செய்யும் கடமை உள்ளது'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1452. وَلِلْبَيْهَقِيِّ بِإِسْنَادٍ صَحِيحٍ: {"اَلْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي، وَالْيَمِينُ عَلَى مَنْ أَنْكَرَ}.
1452. ``வழக்காடுபவன் (வாதி) ஆதாரம் கொண்டு வரவேண்டும். அதனை மறுப்பவன் (பிரதிவாதி) சத்தியம் செய்ய வேண்டும்'' என பைஹகீயில் உள்ளது.
இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது.
1453. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ، فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ، أَيُّهُمْ يَحْلِفُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1453. ஒரு கூட்டத்தை இறைத்தூதர்(ஸல்) சத்தியம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். அவர்கள் சத்தியம் செய்வதில் விரைவதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்), ``யார் சத்தியம் செய்வது?'' என்பதைக் குலுக்கல் போடுமாறு கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1454. وَعَنْ أَبِي أُمَامَةَ الْحَارِثِيُّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ اِقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ". فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: "وَإِنْ قَضِيبٌ مِنْ أَرَاكٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1454. ``பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தவருக்கு அல்லாஹ் நரகத்தை விதித்துவிட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கிவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
(இதனைச் செவியுற்ற ஒருவர்), ``இறைத்தூதர் அவர்களே! சாதாரணப் ஒரு பொருளுக்காகவுமா?'' என வினவினார்.
``அராக் மரத்தின் ஒரு கிளையாய் இருப்பினும்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலுரைத்தார்கள் என அபூ உமாமா அல்ஹாரிஸிய்யீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1455. وَعَنِ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، هُوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللهُ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1455. ``ஒரு சத்தியம் செய்து, அதன் காரணமாக ஒரு முஸ்லிமின் சொத்தைப் பறித்தவன், அதில் பொய்யனாய் இருந்தால், மறுமையில் அல்லாஹ்வை தன் மீது கோபம் சொண்ட நிலையில் சந்திப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1456. وَعَنْ أَبَى مُوسَى اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلَيْنِ اِخْتَصَمَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَابَّةٍ، لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ، فَقَضَى بِهَا رَسُوْلُ اللهِ. بَيْنَهُمَا نِصْفَيْنِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ وَهَذَا لَفْظُهُ، وَقَالَ: إِسْنَادُهُ جَيِّدٌ.
1456. ஒரு கால்நடை விஷயத்தில் இரண்டு மனிதர்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. அவர்கள் இருவரிடமுமே (அது யாருடையது என்ற) ஆதாரம் எதுவும் இல்லை. (எனவே, அந்த வழக்கில்) அவர்கள் இருவருக்கும் இடையில் பாதிப் பாதியாக அதைப் பிரித்து இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இங்கு நஸயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பு சரியானது, சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1457. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ حَلَفَ عَلَى مِنْبَرِي هَذَا بِيَمِينٍ آثِمَةٍ، تَبَوَّأَ مَقْعَدَهُ مِنَ النَّارِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1457. ``என்னுடைய மிம்பருக்கு அருகே (அல்லது மிம்பரில் நின்று) பாவமான (பொய்) சத்தியம் செய்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1458. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلَاةِ، يَمْنَعُهُ مِنْ اِبْنِ اَلسَّبِيلِ؛ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ لَهُ بِاللَّهِ: لَأَخَذَهَا بِكَذَا وَكَذَا، فَصَدَّقَهُ، وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ؛ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لَا يُبَايِعُهُ إِلَّا لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا، وَفَى، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا، لَمْ يَفِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1458. ``மூன்று வகையான மனிதர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு. 1. வனாந்திரத்தில் எஞ்சி இருக்கும் தண்ணீரை வழிப்போக்கர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பவன் 2. அஸ் ருக்குப் பின் ஒருவருடன் வியாபாரம் செய்து அந்தப் பொருளை இன்ன விலைக்கு வாங்கினேன் எனப் பொய் சத்தியம் செய்து அதனை உண்மை என்று நம்ப வைத்தவன். ஆனால் அது உண்மை அல்ல. 3. உலக இலாபத்திற்காகவே ஆட்சித் தலைவரிடம் பைஅத் செய்தவன். அவன் ஏதேனும் கொடுத்தால், அவனுக்கு நன்றி செலுத்துவான்; எதையும் கொடுக்கவிட்டால் அவனுக்கு மாறுசெய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1459. وَعَنْ جَابِرٍرَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلَيْنِ اِخْتَصَمَا فِي نَاقَةٍ، فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَ انُتِجَتْ عِنْدِي، وَأَقَامَا بَيِّنَةً، فَقَضَى بِهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ هِيَ فِي يَدِهِ}.
1459. ஓர் ஒட்டகம் தொடர்பாக இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த ஒட்டகம் என்னிடமே பிறந்தது என்றனர். தம் வாதத்திற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தனர். அந்த ஒட்டகம் யாரிடமிருந்தோ, அவருக்கே (அது உரியது) என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
1460. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَدَّ الْيَمِينَ عَلَى طَالِبِ الْحَقِّ} رَوَاهُمَا الدَّارَقُطْنِيُّ، وَفِي إِسْنَادِهِمَا ضَعْفٌ.
1460. உரிமையைக் கோருபவரின் பக்கமே இறைத்தூதர்(ஸல்) சத்தியத்தைத் திருப்பிவிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
மேற்கண்ட இரண்டு ஹதீஸும் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பு: பிரதிவாதி சத்தியம் செய்ய மறுத்தால், அந்த சத்தியத்தை தன் உரிமையைக் கோரும் வாதியே செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) தீர்ப்பளித்து நடைமுறைப்படுத்தினார்கள்.
1461. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا {قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مَسْرُورًا، تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ. فَقَالَ: "أَلَمْ تَرَيْ إِلَى مُجَزِّزٍ الْمُدْلِجِيِّ ؟ نَظَرَ آنِفًا إِلَى زَيْدِ بْنِ حَارِثَةَ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، فَقَالَ: " هَذِهِ أَقْدَامٌ بَعْضُهَا مِنْ بَعْضٍ"} مُتَّفَقٌ عَلَيْهِ.كِتَابُ الْعِتْقِ
1461. ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) தம் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மின்ன என்னிடம் வந்தார்கள். ``(ஆயிஷாவே!) முஜஸ்ஸிஸ் அல் முத்லிஜியை நீ பார்க்கவில்லையா? அவர் ஸைது இப்னு ஹாரிஸா மற்றும் உஸாமா இப்னு ஸைதைப் பார்த்து, இந்தக் கால்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது எனக் கூறினார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் அடிமையும், வளர்ப்பு மகனுமான ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், அவர்களின் மனைவி உம்மு அய்மன்(ரலி) அவர்களும் கறுப்பு நிறமுடையவர்களாய் இருந்தனர். அவர்களின் மகன் உஸாமாவோ வெள்ளை நிறமுடையவராய் இருந்தார். அதனால், இணைவைப்பவர்கள் அவரின் பிறப்பைப் பற்றித் தவறாகப் பேசினார்கள்.
அப்போதுதான் முஜஸ்ஸிஸ் என்பவர் அங்க அடையாளங்களை வைத்து - இரத்த உறவுகளை இனங்கண்டு சொல்லும் திறன் கொண்டவர், ஸைத்(ரலி) அவர்களும், உஸாமா(ரலி) அவர்களும் போர்வையால் முகத்தையும், உடலையும் மூடிக் கொண்டு, கால்கள் வெளியில் தெரியும்படி படுத்திருந்தபோது அதனைப் பார்த்துவிட்டு, ``இவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடையவை'' என்று சொன்னார். எனவே, நபி(ஸல்) இணைவைப்பாளர்களின் குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டு விட்டதாக மகிழ்ந்தார்கள். காண்க: புகாரீ ஹதீஸ் எண் 3555, 3733

1462. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ اِمْرَأً مُسْلِماً، اِسْتَنْقَذ َاللهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1462. ``ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை விடுதலை செய்தால், விடுதலை செய்யப்பட்டவனின் உறுப்புக்குப் பகரமாக அவனுடைய (விடுதலை செய்தவனின்) ஒவ்வோர் உறுப்பையும் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1463. وَلِلتِّرْمِذِيِّ وَصَحَّحَهُ؛ عَنْ أَبِي أُمَامَةَ: {"وَأَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ اِمْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ، كَانَتَا فِكَاكَهُ مِنَ النَّارِ"}.
1463. ``(அடிமைகளான) இரண்டு முஸ்லிம் பெண்களை விடுதலை செய்த ஒரு முஸ்லிம் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு, அவ்விரு முஸ்லிம் பெண்களே காரணமாவர்'' என அபூ உமாமா(ரலி) வாயிலாக திர்மிதீயில் `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1464. وَلِأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ كَعْبِ بْنِ مُرَّةَ: {"وَأَيُّمَا اِمْرَأَةٍ أَعْتَقَتْ اِمْرَأَةً مُسْلِمَةً، كَانَتْ فِكَاكَهَا مِنَ النَّارِ}.
1464. ``ஒரு முஸ்லிம் பெண்ணை விடுதலை செய்த ஒரு முஸ்லிம் பெண், தான் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு (விடுவிக்கப்பட்ட) அப்பெண்ணே காரணமாகிறாள்'' என கஅப் இப்னு முர்ரா(ரலி) வாயிலாக அபூ தாவூதில் உள்ளது.
1465. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ {قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: "إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ". قُلْتُ: فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: "أَعْلَاهَ اثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ".
1465. ``எந்தச் செயல் சிறந்தது'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனுடைய வழியில் போராடுவதும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``எப்படிப்பட்டோரை விடுதலை செய்வது சிறந்தது?'' என நான் கேட்டேன்.
``எஜமானனிடம் இருக்கக் கூடிய அடிமைகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமான விலை உயர்ந்த அடிமையை விடுதலை செய்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1466. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ، قُوِّمَ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ، وَعَتَقَ عَلَيْهِ الْعَبْدُ، وَإِلَّا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1466. ``ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்பவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால், (அந்த அடிமையின்) நியாயமான விலையை மதிப்பிட்டு, தன் பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்குக்கான விலையை கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்யவேண்டும். இல்லையெனில், தான் விடுதலை செய்த அளவுக்கே அந்த அடிமை விடுதலை பெறுவார் (இதில் அந்த அடிமைக்கு எப்பயனும் இல்லை)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1467. وَلَهُمَا: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {"وَإِلَّا قُوِّمَ عَلَيْهِ، وَاسْتُسْعِيَ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ"}. وَقِيلَ: إِنَّ السِّعَايَةَ مُدْرَجَةٌ فِي الْخَبَر ِ.
1467. புகாரீ, முஸ்லிம் அறிவித்துள்ள (மற்றொரு) ஹதீஸில் ``இல்லையெனில் அந்த அடிமையின் (நியாயமான) விலையை மதிப்பிட்டு (மீதி பங்குகளின் விலையை தருவதற்காக) உழைத்து சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அதிக சிரமத்தை தரக் கூடாது'' என அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக உள்ளது.