1539. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَحَاسَدُوا وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهُ إِخْوَانًا، اَلْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ، اَلتَّقْوَى هَا هُنَا، وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مِرَارٍ، بِحَسْبِ اِمْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1539. ``ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! நீங்கள் பொருளை வாங்கும் எண்ணமில்லாமல் பிறரை வாங்கச் செய்வதற்காக விலையை உயர்த்திவிடாதீர்கள்! ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்! இன்னும், ஒருவரின் வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள்! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு சகோதரனாய் இருக்கிறான்; அவன், அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அவனை இழிவுபடுத்தவும் மாட்டான்'' இறையச்சம் இங்கே இருக்கிறது என (கூறி) தம் நெஞ்சை மும்முறை சுட்டிக் காண்பித்து, ``மனிதன் தன் சகோதரனை இழிவாகக் கருதுவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும்.
முஸ்லிமின் இரத்தமும், அவனுடைய சொத்தும், மேலும் அவனுடைய தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1540. وَعَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {اَللَّهُمَّ جَنِّبْنِي مُنْكَرَاتِ الْأَخْلَاقِ، وَالْأَعْمَالِ، وَالْأَهْوَاءِ، وَالْأَدْوَاءِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ وَاللَّفْظِ لَهُ.
1540. ``என் இரட்சகனே! என்னைத் தீயபழக்கங்களிலிருந்தும், தீய செயல்களிலிருந்தும், தீய இச்சைகளிலிருந்தும், இன்னும், கொடும் நோய்களிலிருந்தும் காப்பாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறுவார்கள் என குத்பா இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு ஹாகிமின் வாசகமே இடம் பெற்றுள்ளது.
1541. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تُمَارِ أَخَاكَ، وَلَا تُمَازِحْهُ، وَلَا تَعِدْهُ مَوْعِدًا فَتُخْلِفَهُ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ بِسَنَدٍ ضَعْفٌ.
1541. ``உன் முஸ்லிம் சகோதரனுடன் சண்டையிடாதே! அவனைக் கேலி செய்யாதே! அவனிடம் உன்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிக்காதே!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பலவீனமான அறிவிப்புத் தொடருடன் இது திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1542. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {خَصْلَتَانِ لَا يَجْتَمِعَانِ فِي مُؤْمِنٍ: اَلْبُخْلُ، وَسُوءُ الْخُلُقِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَفِي سَنَدِهِ ضَعْفٌ.
1542. ``உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
பலவீனமான அறிவிப்புத் தொடருடன் இது திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1543. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ: {اَلْمُسْتَبَّانِ مَا قَالَا، فَعَلَى الْبَادِئِ، مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1543. ``இருவர் ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டால் அதன் பாவம் (ஏச) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாதவரை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1544. وَعَنْ أَبِي صِرْمَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ ضَارَّ مُسْلِمًا ضَارَّهُ اللهُ، وَمَنْ شَاقَّ مُسَلِّمًا شَقَّ اللهُ عَلَيْهِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
1544. ``ஒரு முஸ்லிமிற்குத் தீங்கிழைப்பவனுக்கு அல்லாஹ் தீங்கிழைக்கிறான். மேலும், முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துபவனை அல்லாஹ் கஷ்டத்தில் ஆழ்த்துகிறான்''என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸிர்மா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1545. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ يُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيءَ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ.
1545. ``தீய கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடரில் இமாம் திர்மிதீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
1546. وَلَهُ مِنْ حَدِيثِ اِبْنِ مَسْعُودٍ -رَفَعَهُ-: {لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلَا اللَّعَّانُ، وَلَا الْفَاحِشَ، وَلَا الْبَذِيءَ} وَحَسَّنَهُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَرَجَّحَ الدَّارَقُطْنِيُّ وَقْفَهُ.
1546. ``இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருக்கமாட்டான்; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருக்கமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது என்றும், இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
1547. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَسُبُّوا الْأَمْوَاتَ ؛ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1547. ``இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1548. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1548. ``புறம் பேசுபவன் சுவர்க்கம் புகமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1549. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ كَفَّ غَضَبَهُ، كَفَّ اللهُ عَنْهُ عَذَابَهُ} أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي" الْأَوْسَطِ".
1549. ``தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவரிடமிருந்து அல்லாஹ் தன் தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தப்ரானீ
1550. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ عِنْدَ اِبْنِ أَبِي الدُّنْيَا.
1550. மேற்கண்ட 1549 வது ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அபித் துன்யாவில் இப்னு உமர்(ரலி) வாயிலாக ஹதீஸ் உள்ளது.
1551. وَعَنْ أَبِي بَكْرٍ اَلصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ، وَلَا بَخِيلٌ، وَلَا سَيِّئُ الْمَلَكَةِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَفَرَّقَهُ حَدِيثَيْنِ، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
1551. ``ஏமாற்றுக்காரன், கஞ்சன், தன் பொறுப்பின் உள்ளவர்களுக்குத் தீங்கிழைப்பவன் ஆகிய யாரும் சுவர்க்கம் புக மாட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ பக்கர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1552. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ تَسَمَّعَ حَدِيثَ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ} يَعْنِي: اَلرَّصَاصَ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1552. ஒரு கூட்டம் வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களின் பேச்சைக் கேட்பதற்கு முயல்பவரின் காதில் மறுமை நாளில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1553. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {طُوبَى لِمَنْ شَغَلَهُ عَيْبَهُ عَنْ عُيُوبِ النَّاسِ} أَخْرَجَهُ البَزَّارُ بِإِسْنَادٍ حَسَنٍ.
1553. ``மக்களின் குறைகளை விட்டுவிட்டுத் தம் குறைகளைக் காண்பவருக்கு `தூபா' எனும் நிழல் தரும் மரம் (சுவர்க்கத்தில்) உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1554. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ تَعَاظَمَ فِي نَفْسِهِ، وَاخْتَالَ فِي مِشْيَتِهِ، لَقِيَ اللهُ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ} أَخْرَجَهُ الْحَاكِمُ وَرِجَالُهُ ثِقَاتٌ.
1554. ``தன்னைத்தானே பெரியவன் என எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாய் இருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளவர்கள் பலமானவர்கள்.
1555. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَقَالَ: حَسَنٌ.
1555. ``அவசரப்படுவது ஷைத்தானின் (செயல்களில்) ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1556. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلشُّؤْمُ: سُوءُ الْخُلُقِ} أَخْرَجَهُ أَحْمَدُ وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
1556. ``துர்க்குறி என்பது தீயகுணமேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இது பலவீனமான அறிவிப்பாகும்.
1557. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُفَعَاءَ، وَلَا شُهَدَاءَ يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1557. ``சபிப்பவர்கள் மறுமையில் பரிந்துரைப்பவர்களாகவோ, சாட்சி அளிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார்.
நூல்: முஸ்லிம்
1558. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ، لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَسَنَدُهُ مُنْقَطِعٌ.
1558. ``தன் முஸ்லிம் சகோதரன் செய்த ஒரு பாவத்திற்காகக் குறை கூறிப்பழிப்பவன் அந்தப் பாவத்தை, தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.