1558. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ، لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَسَنَدُهُ مُنْقَطِعٌ.
1558. ``தன் முஸ்லிம் சகோதரன் செய்த ஒரு பாவத்திற்காகக் குறை கூறிப்பழிப்பவன் அந்தப் பாவத்தை, தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.
1559. وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ، فَيَكْذِبُ ؛ لِيَضْحَكَ بِهِ الْقَوْمُ، وَيْلٌ لَهُ، ثُمَّ وَيْلٌ لَهُ} أَخْرَجَهُ الثَّلَاثَةُ، وَإِسْنَادُهُ قَوِيٌّ.
1559. ``மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யுரைப்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடுதான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இது பலமான ஹதீஸாகும்.
1560. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {كَفَّارَةٌ مَنْ اِغْتَبْتَهُ أَنْ تَسْتَغْفِرَ لَهُ} رَوَاهُ الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ بِسَنَدٍ ضَعِيفٍ.
1560. ``நீ யாரைப் பற்றியாவது புறம் பேசினால் அதற்குப் பரிகாரம் அவரிடம் மன்னிப்புக் கேட்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாரிஸ் இப்னு அபீ உஸாமா
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1561. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللهِ اَلْأَلَدُّ الْخَصِمُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.بَابُ التَّرْغِيبِ فِي مَكَارِمِ الْأَخْلَاقِ
1561. ``கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன். அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1562. عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ، وَيَتَحَرَّى الصِّدْقَ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهُ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ، وَيَتَحَرَّى الْكَذِبَ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهُ كَذَّابًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1562. உண்மையில் நிலைத்திருங்கள். ஏனெனில், உண்மை நன்மையில் கொண்டு செல்கிறது. நன்மை, சுவர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு உண்மையைத் தேடிக் கொண்டே இருந்தால், அல்லாஹ் அவனை உண்மையாளர்களில் ஒருவனாக எழுதுகிறான்.
பொய் பேசுதல் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், பொய் தீயவழியில் கொண்டு செல்கிறது. மேலும், தீயவழி நரகத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப்போதும் பொய்யே பேசிக்கொண்டு பொய்யின் தேட்டத்திலேயே இருந்தால், அவனைப் பொய்யர்களில் ஒருவனாக எழுதுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1563. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1563. ``சந்தேகப்பட வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1564. وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ. قَالُوا: يَا رَسُولَ اللهِ! مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا؛ نَتَحَدَّثُ فِيهَا.قَالَ" فَأَمَّا إِذَا أَبَيْتُمْ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ.قَالُوا: وَمَا حَقُّهُ؟ قَالَ:" غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الْأَذَى، وَرَدُّ السَّلَامِ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
1564. ``பாதைகளில் அமர்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு சபைகள் தேவைப்படுகின்றனவே'' என மக்கள் கூறினார்கள்.
``நீங்கள் பேசித்தான் ஆக வேண்டும் என்றால், பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``அதன் உரிமைகள் யாவை?'' என வினவினர்
``(அந்நியப் பெண்களைக் கூர்ந்து பார்ககாமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படிக் கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுப்பதும்தாம் அவை'' என பதிலளித்தார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
1565. وَعَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا، يُفَقِّهْهُ فِي الدِّينِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1565. ``அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ, அவருக்கு மார்க்க (சட்ட நுணுக்க) அறிவைக் கொடுக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1566. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا مِنْ شَيْءٍ فِي الْمِيزَانِ أَثْقَلُ مِنْ حُسْنِ الْخُلُقِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1566. ``நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாய் இருக்காது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1567. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1567. ``வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1568. وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحِ، فَاصْنَعْ مَا شِئْتَ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1568. ``நீ வெட்கம் கொள்ளவில்லை எனில் நீ விரும்பியதைச் செய்து கொள்! என்பது முந்தைய இறைத்தூதுத்துவ மொழிகளில் ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1569. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللَّهِ، وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ: قَدَّرَ اللهُ وَمَا شَاءَ فَعَلَ؛ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1569. பலமான இறைநம்பிக்கையாளன் பலமற்ற இறைநம்பிக்கையாளனைவிட அல்லாஹ்விடம் சிறந்தவனும் விருப்பத்திற்குரியவனும் ஆவான். (இறைநம்பிக்கையுள்ள) ஒவ்வொருவரிலும் நன்மை உண்டு. இன்னும், உனக்கு பயனளிப்பதை நீ ஆசைப்படு. இன்னும், அல்லாஹ்விடமே உதவி தேடு! உனக்கு ஏதாவது நேர்ந்துவிடின், நான் இன்னின்னவாறு? செய்திருந்தால், இப்படி ஆகியிருக்குமே! எனக் கூறாதே!'' அல்லாஹ் எதை நாடினானோ, எது விதியோ அது நடந்துவிட்டது எனக் கூறிக்கொள்! ஏனெனில், (லவ் - இவ்வாறு நடந்திருந்தால்)அந்த வார்த்தை ஷைத்தானின் சூழ்ச்சிக்கு வழி திறக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1570. وَعَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا، حَتَّى لَا يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1570. ``ஒருவர் மற்றவர் மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாய் இருங்கள் என்று எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1571. وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْغَيْبِ، رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَحَسَّنَهُ.
1571. ``தன் சகோதரனின் மானத்தை அவன் அறியாத நிலையிலும் காப்பவரின் முகத்தை, அல்லாஹ் மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1572. وَلِأَحْمَدَ، مِنْ حَدِيثِ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ نَحْوُهُ.
1572. அஸ்மா பின்த் யஸீத் வாயிலாக 1571 வது ஹதீஸ் போன்றே அஹ்மதில் பதிவிடப்பட்டுள்ளது.
1573. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1573. ``தர்மம் செய்தல் செல்வத்தில் எதையும் குறைத்துவிடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை (மேலும்) அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1574. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا أَيُّهَا النَّاسُ! أَفْشُوا السَّلَام، وَصِلُوا الْأَرْحَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1574. ``மக்களே! ஸலாமை (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் கூறி) பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும், இரவில் மக்கள் தூங்கும்போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போதுதான் நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அறிவித்தார்.
ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடரில் இமாம் திர்மிதீ(ரஹ்) இதனைப் பதிவிட்டுள்ளார்.
1575. وَعَنْ تَمِيمٍ الدَّارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ {اَلدِّينُ النَّصِيحَةُ" ثَلَاثًا. قُلْنَا: لِمَنْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ:" لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1575. ``நலம் நாடுவதே மார்க்கமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) மும்முறை கூறினார்கள். அப்போது,
``இறைத்தூதர் அவர்களே! யாருக்கு நலம் நாடுவது?'' என நாங்கள் வினவினோம்.
``அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மற்றும் முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என தமீமுத்தாரி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1576. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوى اللهُ وَحُسْنُ الْخُلُقِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1576. ``அதிகமாக சுவர்க்கத்தில் (மக்களை) புகுத்துபவைவ இறையச்சமும் நற்குணமும்தாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1577. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّكُمْ لَا تَسَعُونَ النَّاسَ بِأَمْوَالِكُمْ، وَلَكِنْ لِيَسَعْهُمْ بَسْطُ الْوَجْهِ، وَحُسْنُ الْخُلُقِ} أَخْرَجَهُ أَبُو يَعْلَى، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1577. ``நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களின் மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால்தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ யஃலா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.