1577. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّكُمْ لَا تَسَعُونَ النَّاسَ بِأَمْوَالِكُمْ، وَلَكِنْ لِيَسَعْهُمْ بَسْطُ الْوَجْهِ، وَحُسْنُ الْخُلُقِ} أَخْرَجَهُ أَبُو يَعْلَى، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1577. ``நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களின் மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால்தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ யஃலா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1578. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
1578. ``இறைநம்பிக்கையாளன் இறைநம்பிக்கை கொண்டுள்ள தன் சகோதரனுக்குக் கண்ணாடி ஆவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1579. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمُؤْمِنُ الَّذِيْ يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ الَّذِيْ لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ، وَهُوَ عِنْدَ التِّرْمِذِيِّ: إِلَّا أَنَّهُ لَمْ يُسَمِّ الصِّحَابِيَّ.
1579. ``மக்களுடன் உறவாடி அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இறைநம்பிக்கையாளன், மக்களுடன் உறவாடாத, அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சகிக்காத இறைநம்பிக்கையாளனைவிட, மேலானவன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இது இப்னு மாஜாவில் `ஹஸன்' எனும் தரத்திலும் மற்றும் திர்மிதீயில் ஸஹாபியின் பெயர் இல்லாமலும் உள்ளது.
1580. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي، فَحَسِّنْ خُلُقِي} رَوَاهُ أَحْمَدُ وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.بَابُ الذِّكْرِ وَالدُّعَاءِ
1580. ``என் இரட்சகனே! என்னை அழகாகப் படைத்தது போன்று என் குணநலன்களையும் அழகுபடுத்துவாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) பிராத்தித்து வந்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1581. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَقُولُ اللهُ -تَعَالَى-: أَنَا مَعَ عَبْدِي مَا ذَكَرَنِي، وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ} أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ، وَذَكَرَهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا.
1581. ``என் அடியான் என்னை நினைவு கூர்ந்து கொண்டும், என் தியானத்தால் தன் உதடுகளை அசைத்துக் கொண்டு இருக்கும் வரையில் நான் அவனுடன் இருக்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரீயில் இது முஅல்லக் ஆக உள்ளது.
1582. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا عَمِلَ ابْنُ آدَمَ عَمَلاً أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللهُ مِنْ ذِكْرِ اللهِ} أَخْرَجَهُ ابْنُ أَبِي شَيْبَةَ، وَالطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ حَسَنٍ.
1582. ``அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தன்னை அதிகமாகக் காக்கக் கூடிய வெறு எந்த நற்செயலையும் ஆதமின் மகன் செய்வதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஷைபா மற்றும் தப்ரானீயில் இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1583. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا، يَذْكُرُونَ اللهُ إِلَّا حَفَّتْ بِهِمُ الْمَلَائِكَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1583. ``அல்லாஹ்வை நினைவு கூர்ந்தபடி மக்கள் ஒரு சபையில் அமரும்போது வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். இறைவனின் கருணை அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி (புகழ்ந்து தன் அவையில்) தன்னிடம் இருப்பவர்களிடம் நினைவு கூர்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1584. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا قَعَدَ قَوْمٌ مَقْعَدًا لَمْ يَذْكُرُوا اللهَ، وَلَمْ يُصَلُّوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَقَالَ:"حَسَنٌ".
1584. ``மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து அங்கு அல்லாஹ்வை நினைவுகூராமலும், இறைத்தூதர்(ஸல்) மீது ஸலவாத் கூறாமலும் இருப்பார்களாயின், அதுவே மறுமை நாளில் அவர்கள் மீது பேரிழப்பாகவே வந்து முடியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1585. وَعَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ عَشْرَ مَرَّاتٍ، كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1585. ``(லாயிலாஹா இல்லல்லாஹுவஹ்...) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை இல்லை. அதிகாரங்கள் எல்லாம் அவனுக்கே உரியன புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் மிக்கவன்'' என பத்துமுறை ஓதுபவர் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரிலிருந்து நான்கு அடிமைகளை விடுவித்தவரைப் போன்றவர் ஆவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹய்யூப் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1586. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ قَالَ: سُبْحَانَ اللهُ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1586. ``ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' (அல்லாஹ் தன் புகழைக் கொண்டே தூயவன்)'' என நூறு முறை ஓதுபவரின் பாவம் கடல் நுரையளவு இருப்பினும் மன்னிக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1587. وَعَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ قَالَتْ: قَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ اللهُ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1587. நிச்சயமாக, நான் உனக்காக நான்கு வார்த்தைகளைக் கூறியுள்ளேன். இன்று வரையில் நீ பேசியுள்ள வார்த்தைகளையும் இதனையும் எடைபோட்டால் அவை அனைத்தையும் விட இது கடுமையானதாய் இருக்கும். அது (ஹுப்ஹானல்லாஹி) அல்லாஹ் தூயவன். இன்னும், அவன் அவனுடைய படைப்பினங்கள் அளவு புகழ்பெற்றவன். இன்னும், அவனுடைய அரியணையின் கனமும் அவனுடைய வார்த்தைகளின் மையிக்கு சமமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள் என ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1588. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْبَاقِيَاتُ الصَّالِحَاتُ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَسُبْحَانَ اللهِ، وَاللهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ} أَخْرَجَهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1588. 1. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை). 2. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). 3. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்). 4. அல் ஹம்து லில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்விற்கே) 5. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (தீங்கிலிருந்து விலகிக் கொள்ளவும் நன்மைகள் செய்யவும் அல்லாஹ்வின் உதவியின்றி (வேறு) இல்லை) ஆகிய வாசகங்கள் என்றும் நிலையான நன்மை பயக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1589. وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ، لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1589. ``நான்கு வார்த்தைகள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவை. அவற்றில் எதிலிருந்து ஆரம்பித்தாலும் சரி உனக்கு அது தீங்கிழைக்காது. அவை `சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்' ஆகியனவாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1590. وَعَنْ أَبِي مُوسَى اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا عَبْدَ اللهُ بْنَ قَيْسٍ! أَلَّا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.زَادَ النَّسَائِيُّ: {وَلَا مَلْجَأَ مِنَ اللهِ إِلَّا إِلَيْهِ}
1590. ``அப்துல்லாஹ் இப்னு கைஸே! சுவர்க்கத்தின் புதையல்களில் ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?'' அது `லா ஹவ்லவலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``அல்லாஹ்வைத் தவிர வேறு புகலிடம் இல்லை'' என்பதும் நஸயீயில் உள்ளது.
1591. وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
1591. ``நிச்சயமாக துஆ (பிரார்த்தனை) வணக்கமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1592. وَلَهُ مِنْ حَدِيثِ أَنَسٍ بِلَفْظِ: {اَلدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ}.
1592. `வணக்கத்தின் கரு பிரார்த்தனையே ஆகும்' எனும் ஹதீஸ் அனஸ்(ரலி) வாயிலாக ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் திர்மிதீயில் உள்ளது.
1593. وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ: {لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللهُ مِنَ الدُّعَاءِ} وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1593. ``அல்லாஹ்விடம் துஆவை விட கண்ணியம் வாய்ந்தது எதுவுமில்லை'' என்பது அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் திர்மிதீயில் உள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகி(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1594. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ لَا يُرَدُّ} أَخْرَجَهُ النَّسَائِيُّ، وَغَيْرُهُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَغَيْرُهُ.
1594. ``பாங்கிற்கும் `இகாமத்'திற்குமிடையில் செய்யப்படும் துஆ (பிரார்த்தனை) ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறவிக்கிறார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு ஹிப்பா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1595. وَعَنْ سَلْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفَرًا} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1595. நிச்சயமாக உங்கள் இரட்சகன் அதிக வெட்கமுள்ளவன். கொடையாளி, தன் அடியான் கையை ஏந்திவிட்டால், அதனை வெறுமனே திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸல்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1596. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَدَّ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَرُدَّهُمَا، حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ. وَلَهُ شَوَاهِدُ مِنْهَا:
1596. ``இறைத்தூதர்(ஸல்) துஆவிற்காகத் தம் கைகளை உயர்த்தினால், அதனை முகத்தில் தடவிக் கொள்ளாத வரை அகற்ற மாட்டார்கள்'' என்று உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் உள்ளன.