18. عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ والْفِضَّةِ، وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الْآخِرَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
18. ``தங்கப் பாத்திரங்களிலும் வெள்ளிப் பாத்திரங்களிலும் பருகாதீர்கள்! இன்னும் அந்தப் பாத்திரங்களில் சாப்பிடாதீர்கள்! ஏனெனில், அவை உலகில் அவர்களுக்கு (இறை மறுப்பாளர்களுக்கு) உரியதாகும்; மறுமையில் உங்களுக்கு உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
19. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
19. ``வெள்ளிப் பாத்திரங்களில் பருகுபவரின் வயிற்றில் நரக நெருப்பு குமுறிக் கொண்டிருக்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
20. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
20. ``பச்சைத் தோலைப் பதனிட்டால் அது தூய்மையாகிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
21. وَعِنْدَ الْأَرْبَعَةِ: {أَيُّمَا إِهَابٍ دُبِغَ}.
21. எந்தத் தோலானாலும் பதனிடப்பட்டால் (அது தூய்மையாகிவிடும்'' என அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ளது.
22. وَعَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طُهُورُهاَ} صَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
22. ``இறந்து கால்நடைகளின் தோல்கள் பதனிடப்பட்டால் அது தூய்மையாகிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸலமா இப்னு அல் முஹய்யிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
23. وَعَنْ مَيْمُونَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: {مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ يَجُرُّونَهَا، فَقَالَ: "لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا؟" فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: "يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
23. இறந்த ஆட்டை இழுத்துச் சென்றோரை இறைத்தூதர்(ஸல்) கடந்து சென்றபோது, ``அதன் தோலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே?'' எனக் கூறினார்கள்.
``அது தானாக செத்தாயிற்றே?'' என அவர்கள் பதிலளித்தனர்.
``அதனைத் தண்ணீர் மற்றும் மரப்பட்டை சுத்தம் செய்துவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மைமூனா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
24. وَعَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا بِأَرْضِ قَوْمٍ أَهْلِ كِتَابٍ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟ فـَ قَالَ: "لَا تَأْكُلُوا فِيهَا، إِلَّا أَنْ لَا تَجِدُوا غَيْرَهَا، فَاغْسِلُوهَا، وَكُلُوا فِيهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ.
24. ``இறைத்தூதர் அவர்களே! வேதம் வழங்கப்பட்டோரின் நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம். எனவே, அவர்களின் பாத்திரங்களில் நாங்கள் உண்ணலாமா?'' என்று நான் கேட்டேன்.
``அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள்! உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லை எனில், அவற்றைக் கழுவிவிட்டு அவற்றில் உண்ணுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸஅலபா அல் ஃகுஷனிய்யீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
25. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ تَوَضَّئُوا مِنْ مَزَادَةِ اِمْرَأَةٍ مُشْرِكَةٍ.} مُتَّفَقٌ عَلَيْهِ، فِي حَدِيثٍ طَوِيلٍ.
25. ``இணைவைக்கும் ஒரு பெண்ணின் தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீரைக் கொண்டு நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் `உளூ'ச் செய்தார்கள்'' என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புகாரீ, முஸ்லிம்
26. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ قَدَحَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ.} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.بَابُ إِزَالَةِ النَّجَاسَةِ وَبَيَانِهَا
26. ``நபி(ஸல்) அவர்களின் பாத்திரம் ஒன்று உடைந்துவிட்டது. அதன் ஒட்டை விழுந்த இடத்தை அவர்கள் வெள்ளித் துண்டால் அடைத்தார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
அசுத்தங்களை அகற்றுதல்
27. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سُئِلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ تُتَّخَذُ خَلًّا؟ قَالَ: "لَا".} أَخْرَجَهُ مُسْلِمٌ.
27. ``மதுலிருந்து `சிர்கா' செய்தல் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, `கூடாது' என அவர்கள் கூறினார்கள் (தடை விதித்தார்கள்)'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
இது திர்மிதீயில் ``ஸஹீஹ்'' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
28. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ، أَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا طَلْحَةَ، فَنَادَى: "إِنَّ اللهُ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ ، فَإِنَّهَا رِجْسٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
28. கைபர் யுத்தத்தன்று அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே ``அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதையின் மாமிசத்தை (உண்ண) தடை செய்துவிட்டார்கள். ஏனெனில், அது அசுத்தமானது'' என்பதை அவர் அறிவித்தார் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
29. وَعَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى، وَهُوَ عَلَى رَاحِلَتِهِ، وَلُعَابُهَا يَسِيلُ عَلَى كَتِفَيَّ.} أَخْرَجَهُ أَحْمَدُ، وَاَلتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
29. இறைத்தூதர்(ஸல்) மினாவில் தங்களின் வாகனத்தில் அமர்ந்தவாறே எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, அதன் (அக்கால் நடையின்) உமிழ் நீர் என் தோளில் (விழுந்து) வழிந்தோடிக் கொண்டிருந்தது என அம்ர் இப்னு காரிஜா(ரலி) அறிவித்தார்.
குறிப்பு: உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர் ஆடைகளில் அல்லது உடலிலோ படுவதால் அசுத்தமாகாது.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இது திர்மிதீயில் `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
30. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ الْمَنِيَّ، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ فِي ذَلِكَ اَلثَّوْبِ، وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغُسْلِ فِيهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
30. ``இறைத்தூதர்(ஸல்) (தங்களின் ஆடையில் பட்ட) இந்திரியத்தைக் கழுவியப் பின்னர், அதே ஆடையுடன் தொழுகைக்குச் செல்வார்கள். அப்போது அந்த ஆடையில் கழுவப்பட்ட அடையாளத்தை நான் காண்பேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
31. وَلِمُسْلِمٍ: {لَقَدْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْكًا، فَيُصَلِّي فِيهِ}.
31. ``நபி(ஸல்) அவர்களின் ஆடையில் படிந்திருந்த (இந்திரியத்)தை சுரண்டிவிடுபவளாய் நான் இருந்தேன். அவர்கள் (அந்நேரத்தில்) அதே ஆடையுடன் தொழுது வந்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள் என முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
32. وَفِي لَفْظٍ لَهُ: {لَقَدْ كُنْتُ أَحُكُّهُ يَابِسًا بِظُفُرِي مِنْ ثَوْبِهِ}.
32. ``அது காய்ந்த நிலையில் ஆடையில் இருந்தால் என் நகத்தால் அதனை சுரண்டிவிடுவேன்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
33. وَعَنْ أَبِي السَّمْحِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلَامِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
33. ``பெண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தைக் கழுவவேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தல் போதுமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸம்ஹி(ரலி) அறிவித்தார்.
குறிப்பு: தாய்ப் பால் மட்டும் அருந்திக் கொண்டிருக்கும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. ஆனால், ஆண் குழந்தை மற்ற ஆகாரங்கள் உண்ணத் தொடங்கினால், சிறுநீர் பட்ட அந்த இடத்தைத் தண்ணீரால் கழுவுதல் அவசியம்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் ஹாகிம்
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் ஹாகிமில் பதிவிடப்பட்டுள்ளது.
34. وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ-: {"تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
34. ``மாதவிடாய் இரத்தம் பட்ட துணியை சுரண்டி, பின்னர் அதனைத் தண்ணீரால் கழுவி, பின்பு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதில் தொழுது கொள்ளலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
35. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَتْ خَوْلَةُ: {يَا رَسُولَ اللهِ، فَإِنْ لَمْ يَذْهَبِ الدَّمُ؟ قَالَ: "يَكْفِيكِ الْمَاءُ، وَلَا يَضُرُّكِ أَثَرُهُ"} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَسَنَدُهُ ضَعِيفٌ.بَابُ الْوُضُوءِ
35. ``இறைத்தூதர் அவர்களே! மாதவிடாய் இரத்தக் கறை (துணியிலிருந்து) நீங்காவிட்டால்?'' என கவ்லா(ரலி) வினவினார்.
``அதன் மீது தண்ணீர் விட்டால் போதுமானது அதன் கறையால் உனக்குத் தீங்கில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு ளஹ்யா இடம்பெற்றுள்ளார். எனினும், இதில் கூறப்பட்டுள்ள செய்தி சரியானதே.
36. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ وُضُوءٍ} أَخْرَجَهُ مَالِكٌ، وأَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَذَكَرَهُ البخاري تعليقا.
36. ``என் சமுதாயத்திற்கு கஷ்டம் தந்துவிடுவேன் என நான் அஞ்சாவிட்டால் ஒவ்வோர் `உளூ'வுடனும் (மிஸ்வாக்) பல் துலக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: மாலிக், அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு குஸைமா
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவிடப்பட்டுள்ளது.
இமாம் புகாரீ(ரஹ்) இதனைப் பாடத்தின் தலைப்பாக இடம் பெறச் செய்துள்ளார்.
37. وَعَنْ حُمْرَانَ؛ {أَنَّ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ دَعَا بِوَضُوءٍ، فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ مَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا.} مُتَّفَقٌ عَلَيْهِ.
37. உஸ்மான்(ரலி) `உளூ'விற்காகத் தண்ணீர் கேட்டார்கள். (தண்ணீர் கொடுக்கப்பட்டதும்) மும்முறை தம் கைகளைக் கழுவினார்கள். பின்னர், வாய்கொப்பளித்தார்கள். இன்னும், மூக்கில் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர், தம் முகத்தை மும்முறை கழுவினார்கள். பின்னர், தம் வலக் கையை முழங்கை வரை மும்முறை கழுவினார்கள். பின்னர், தம் இடக் கையை அதே போன்று கழுவினார்கள். பின்னர், தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள். (தலையை ஈரக் கையால் தடவினார்கள்). பின்னர், தம் வலக் காலை கணுக்கால்கள் வரை மும்முறை கழுவினார்கள். பின்னர், தம் இடக் காலை அதே போன்று கழுவினார்கள். பின்னர், ``இறைத்தூதர்(ஸல்) `உளூ'ச் செய்வதை நான் பார்த்துள்ளேன். அவர்களின் `உளூ' (நான் செய்து காட்டிய) என்னுடைய இந்த `உளூ'வைப் போன்றே அமைந்திருந்தது'' என்று கூறினார்கள் என உஸ் மான்(ரலி) அவர்களின் அடிமை ஹும்ரான் அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்