323. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: {اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي} رَوَاهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيُّ، وَاللَّفْظُ لِأَبِي دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
323. இறைத்தூதர்(ஸல்) இரண்டு ஸஜ்தாவிற்கிடையே ``இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை காட்டுவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு (நோயிலிந்து) நிவாரணமளிப்பாயாக! எனக்கு வாழ்வாதாரங்களை நல்குவாயாக!'' என்று கூறுவார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
324. وَعَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا} رَوَاهُ الْبُخَارِيُّ.
324. இறைத்தூதர்(ஸல்) தொழுததை நான் பார்த்துள்ளேன். அவர்கள் ஒற்றைப் படை ரக்அத்திலிருந்து (அடுத்த ரக்அத்துக்காக) எழும்போது சரியாக அமராதவரை எழமாட்டார்கள் என மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
325. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، ثُمَّ تَرَكَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
325. தொழுகையில் ருகூஃவிற்குப் பின்பு (எழுந்து நிற்கையில்) சில அரபு குலத்தாரைச் சபித்தபடி இரண்டு மாதகாலம் இறைத்தூதர்(ஸல்) குனூத் ஓதினார்கள் பின்னர் அதை விட்டுவிட்டார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
326. وَلِأَحْمَدَ وَالدَّارَقُطْنِيِّ نَحْوُهُ مِنْ وَجْهٍ آخَرَ، وَزَادَ: {فَأَمَّا فِي الصُّبْحِ فَلَمْ يَزَلْ يَقْنُتُ حَتَّى فَارَقَ الدُّنْيَا}.
326. அஹ்மத் மற்றும் தாரகுத்னீயில் இவ்வாறே மற்றோர் அறிவிப்பு உள்ளது. அதில், இது நடந்தது குப்ஹுத் தொழுகையில் என்றும், இறைத்தூதர்(ஸல்) மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்றும் உள்ளது.
327. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَانَ لَا يَقْنُتُ إِلَّا إِذَا دَعَا لِقَوْمٍ، أَوْ دَعَا عَلَى قَوْمٍ} صَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
327. ஒரு கூட்டத்தாருக்குச் சாதகமாக துஆச் செய்தாலோ அல்லது ஒரு கூட்டத்தாருக்குப் பாதகமாக துஆ செய்தாலோ தவிர இறைத்ரததர்(ஸல்) குனூத் ஓதமாட்டார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு குஸைமா
இமாம் இப்னு குiஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
328. وَعَنْ سَعْدِ بْنِ طَارِقِ الْأَشْجَعِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ ! إِنَّكَ قَدْ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلَيَّ، أَفَكَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ؟ قَالَ: أَيْ بُنَيَّ، مُحْدَثٌ} رَوَاهُ الْخَمْسَةُ، إِلَّا أَبَا دَاوُدَ.
328. சஅத் இப்னு தாரிக் தம் தந்தையிடம் ``என் தந்தையே! தாங்கள், இறைத்தூதர்(ஸல்) அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) உஸ்மான்(ரலி), அலீ(ரலி) ஆகியோரின் பின்னால் (நின்று) தொழுதுள்ளீர்கள். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்களா?'' என்று கேட்டதற்கு, ``என் மகனே! இது (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்பட்ட செயல்'' எனப் பதில் கூறினார் என சஅத் இப்னு தாரிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
329. وَعَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ قَالَ: {عَلَّمَنِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ اَلْوِتْرِ: " اَللَّهُمَّ اِهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَزِلُّ مَنْ وَّالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ} رَوَاهُ الْخَمْسَةُ.وَزَادَ الطَّبَرَانِيُّ وَالْبَيْهَقِيُّ: {وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ}.زَادَ النَّسَائِيُّ مِنْ وَجْهٍ آخَرَ فِي آخِرِهِ: {وَصَلَّى اللهُ عَلَى النَّبِيِّ}
329. நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக, ``இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்பாயாக! நீ எனக்கு அளித்திருப்பவற்றில் அபிவிருத்தியை வழங்குவாயாக! என் விஷயத்தில் நீ விதித்துள்ள தீங்குகளிலிருந்து என்னைக் காப்பாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு யாரும் விதியை ஏற்படுத்த முடியாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடையமாட்டார். எங்கள் இரட்சகனே! நீ வளம் பொருந்தியவன்; உயர்வு மிக்கவன்'' என்ற வாக்கியங்களை இறைத்தூதர்(ஸல்) எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என `ஹஸன்' இப்னு அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
தப்ரானீ மற்றும் பைஹகீயில் மேற்கண்டதைவிட ``நீ யாரை இழிவு படுத்தி விட்டாயோ! அவரை கண்ணியப்படுத்துபவர் யாரும் இல்லை!'' என்பது அதிகமாக உள்ளது.
நஸயீயின் மற்றோர் அறிவிப்பில், ``அல்லாஹு தஆலா இறைத்தூதர்(ஸல்) மீது சாந்தி ஏற்படுத்துவானாக!'' என்பது அதிகமாக உள்ளது.
330. وَلِلْبَيْهَقِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ} وَفِي سَنَدِهِ ضَعْفٌ.
330. இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் அதனை ஃபஜ்ர் தொழுகையில் குனூத்தாக ஓதிக் கொண்டிருந்தோம் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் உள்ளது.
331. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَبْرُكْ كَمَا يَبْرُكُ الْبَعِيرُ، وَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ} أَخْرَجَهُ الثَّلَاثَةُ.وَهُوَ أَقْوَى مِنْ حَدِيثِ وَائِلٍ:
331. ``நீங்கள் ஸஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம் உங்கள் முழங்கால்களை (தரையில்) வைப்பதற்கு முன்பாக உங்கள் கைகளை (தரையில்) வைப்பதற்கு முன்பாக உங்கள் கைகளை வையுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இந்த ஹதீஸ் (பின்வரும்) வாயில் இப்னு ஹுஜ்ர் அவர்கள் அறிவித்திருக்கும் ஹதீஸை விட வலுவானது.
332. {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ.فَإِنْ لِلْأَوَّلِ شَاهِدًا مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ صَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَذَكَرَهُ الْبُخَارِيُّ مُعَلَّقًا مَوْقُوفًا.
332. இறைத்தூதர்(ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது (தரையில்) கைகளை வைப்பதற்கு முன்னதாக தம் இரண்டு முட்டுக் கால்களையும் வைத்ததை நான் பார்த்தேன் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இப்னு உமர்(ரலி) அவர்களின் ஒரு ஹதீஸ், இங்கு இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸிற்கு சான்றாக உள்ளது. இதனை இப்னு குஸைமா(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் புகாரீ(ரஹ்) இதனை தம் பாடத் தலைப்பில் முஅல்லக், `மவ்கூஃப்' எனும் தரத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
333. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ لِلتَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَالْيُمْنَى عَلَى الْيُمْنَى، وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ، وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ} رَوَاهُ مُسْلِمٌ.وَفِي رِوَايَةٍ لَهُ: {وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِالَّتِي تَلِي الْإِبْهَامَ}
333. இறைத்தூதர்(ஸல்) தஷஹ்ஹுதில் (பெரும் இருப்பில்) அமர்ந்தால் தம் வலக் கையை வலது முழங் காலின் மீதும், இடக் கையை இடது முழங்காலின் மீதும் வைத்து அதனை ஐம்பத்தி மூன்று (அரபு எண்) போல் ஆக்கி தம் சுட்டு விரலால் சமிக்ஞை செய்வார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், எல்லா விரல்களையும் மடக்கிப் பிடித்துக் கொண்டு, கட்டை விரலை அடுத்த (சுட்டு) விரலால் சமிக்ஞை செய்தார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
334. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {اِلْتَفَتَ إِلَيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَقُلْ: اَلتَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ، وَالطَّيِّبَاتُ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةَ اللهُ وَبَرَكَاتُهُ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهُ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ لِيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ أَعْجَبُهُ إِلَيْهِ، فَيَدْعُو} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.وَلِلنَّسَائِيِّ: {كُنَّا نَقُولُ قَبْلِ أَنْ يُفْرَضَ عَلَيْنَا التَّشَهُّدُ}.وَلِأَحْمَدَ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ التَّشَهُّد، وَأَمَرَهُ أَنْ يُعَلِّمَهُ النَّاسَ}.
334. இறைத்தூதர்(ஸல்) எங்களை நோக்கி, ``உங்களில் ஒருவர் தொழும்போது, ``(அத்தஹிய்யாத்து....) எல்லாவிதமான காணிக்கைகளும், தொழுகைகளும், ஏனைய நல்லறங்களும் அல்லாஹ்விற்கே உரித்தானவை. நபியே! உம் மீது சாந்தியும் இறைவனின் கருணையும், அபிவிருத்தியும் உண்டாகட்டும்! இன்னும் எங்கள் மீதும் இறைவனின் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! `நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' அவன் தனித்தவன். அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை' என நான் சாட்சி அளிக்கிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்), அவனுடைய நல்லடியர் மற்றும் தூதர் என்றும்' என நான் சாட்சி அளிக்கிறேன் என ஓதி, பின்னர், அவர் துஆக்களில் தான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் பிரார்த்திக்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
தொழுகையில் அத்திஹிய்யாத்து ஓதுவது சட்டமாய் ஆக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் தொழுகையில் அத்தஹிய்யாத்து ஓதும் இடத்தில் அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும், ஜிப்ரீல் மீகாயீல் மீது சாந்தி உண்டாகட்டும் என ஓதிக் கொண்டிருந்தோம் அப்போது, இறைத்தூதர்(ஸல்) இவ்வாறு சொல்லாதீர்கள்! மாறாக, அத்தஹிய்யாத்தை இவ்வாறு (இந்த ஹதீஸில் வருவதுபோல) கூறுங்கள் என்று கூறினார் என நஸயீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
அப்துல்லாஹ் இப்னு மஸ் வூத்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும், அதை மக்களுக்குக் கற்றுத் தருமாறு கட்டளையிட்டார்கள் என அஹ்மதில் உள்ளது.
335. وَلِمُسْلِمٍ: عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ يُعَلِّمُنَا التَّشَهُّدَ: " اَلتَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ اَلصَّلَوَاتُ لِلَّهِ...} إِلَى آخِرِهِ.
335. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு ``அத்தஹிய்யாத்துல் முபாரகாத்துஸ் ஸலவாத்துத் தைய்யிபாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹி! ஸாலிஹீன் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்'' எனும் தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: வாய்மொழி வணக்கங்களும், உடல்மொழி வணக்கங்களும், பொருள் வழி வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. நபியே! தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும், அபிவிருத்தியும் உண்டாகட்டும். இன்னும், எங்கள் மீதும் இறைநல்லடியார்களின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என நான் சாட்சி அளிக்கிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி அளிக்கிறேன்.
336. وَعَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَمِعَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِجْلاً يَدْعُو فِي صَلَاتِهِ، لَمْ يَحْمَدِ اللهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " عَجِلَ هَذَا " ثُمَّ دَعَاهُ، فَقَالَ: " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ.رَبِّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بِمَا شَاءَ} رَوَاهُ أَحْمَدُ، وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
336. அல்லாஹ்வைப் புகழாமலும், இறைத்தூதர்(ஸல்) மீது ஸலவாத் கூறாமலும் ஒருவர் தம் தொழுகையில் துஆ செய்ததை இறைத்தூதர்(ஸல்) செவியுற்று, ``இவர் அவசரப்பட்டு விட்டார்'' எனக் கூறினார்கள். பின்னர் அவரை அழைத்து, ``உங்களில் ஒருவர் தொழுதால் அவர் (அத்தஹிய்யாத்து) தம் இரட்சகனைப் புகழ்ந்தும், போற்றியும் ஆரம்பிக்கட்டும். பின்னர், இறைத்தூதர்(ஸல்) மீது ஸலவாத் கூறட்டும். அதற்குப் பின்னர், அவர் தாம் விரும்பியவற்றை வேண்டட்டும்'' என்று அவர்கள் கூறினார்கள் என ஃபளாலா இப்னு உபைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
337. وَعَنْ أَبِي مَسْعُودٍ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قَالَ بَشِيرُ بْنُ سَعْدٍ: يَا رَسُولَ اللهِ! أَمَرَنَا اللهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَسَكَتَ، ثُمَّ قَالَ: " قُولُوا: اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. وَالسَّلَامُ كَمَا عَلَّمْتُكُمْ} رَوَاهُ مُسْلِمٌ.وَزَادَ اِبْنُ خُزَيْمَةَ فِيهِ: {فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ، إِذَا نَحْنُ صَلَّيْنَا عَلَيْكَ فِي صَلَاتِنَا}.
337. ``இறைத்தூதர் அவர்களே! தங்கள் மீது ஸலவாத் கூறுமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளானே, தங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது?'' என பஷீர் இப்னு ஸஅத்(ரலி) வினவினார்.
இறைத்தூதர்(ஸல்) (சிறிது) அமைதியாக இருந்துவிட்டு ``எங்கள் இரட்சகனே! இப்ராஹீம்(அலை) மற்றும் அவர்களின் மீதும் அருள் புரிந்தது போன்று முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! இன்னும் அகிலத்தார் அனைவரிலும் நீ இப்ராஹீம்(அலை) மீதும் அருள்வளத்தைப் பொழிந்தது போன்று முஹம்மத்(ஸல்) மீதும் அருள்வளத்தைப் பொழிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும், கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கிறாய்!'' எனக் கூறிக்கொள்ளுங்கள். இன்னும் ``உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்'' என்று பதிலளித்தார்கள் என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
``நாங்கள் எங்கள் தொழுகையில் தங்கள் மீது ஸலாவத் கூறினால் எவ்வாறு கூறுவது?'' என்று வினவினார் என இப்னு குஸைமாவில் அதிகமாக உள்ளது
338. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللهُ مِنْ أَرْبَعٍ، يَقُولُ: اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْأَخِيرِ}
338. உங்களில் ஒருவர் இறுதித் தஷ்ஹ்ஹுதில் அமர்ந்தால் நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். ``எங்கள் இரட்சகனே! நரக வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், `உங்களில் ஒருவர் இறுதித் தஷஹ்ஹுதை முடித்துக் கொண்டால்' (இவ்வாறு ஓதட்டும்) என்ற வாசகம் உள்ளது.
339. وَعَنْ أَبِي بَكْرٍ اَلصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلَاتِيْ. قَالَ قُلْ: "اَللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
339. ``நான் என் தொழுகையில் ஓதிக் கொள்வதற்காக எனக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுங்கள்'' என நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டதற்கு ``எங்கள் இரட்சகனே! எனக்கு நானே நிறைய அநியாயம் செய்து கொண்டேன்! பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை! எனவே, உன் தரப்பிலிருந்து என் பாவங்களை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! நீயே மன்னிக்கக் கூடியவன்; மற்றும் கிருபையாளன், என்று கூறிக்கொள்'' என்று அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
340. وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: "اَلسَّلَام عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهُ وَبَرَكَاتُهُ" وَعَنْ شِمَالِهِ: "اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهُ وَبَرَكَاتُهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ بِإسْنَادٍ صَحِيحٍ.
340. நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறேன். அப்போது, அவர்கள் தம் வலப்பக்கம் `அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு' என்றும், தம் இடப் பக்கம் `அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்றும் ஸலாம் கொடுப்பார்கள் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது என இமாம் அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்..
341. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةِ مَكْتُوبَةٍ: "لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ اَلْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ} مُتَّفَقٌ عَلَيْهِ.
341. இறைத்தூதர்(ஸல்) ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்பும் ``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! அவன் தனித்தவன்! அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை! அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது! இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது! மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன்! எங்கள் இரட்சகனே! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாரும் இல்லை! நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாரும் இல்லை! மதிப்புடைய யாரும் இல்லை! மதிப்புடைய யாரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார் மதிப்பு உன்னிடமே உள்ளது'' என்று ஓதுவார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
342. وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ دُبُرَ اَلصَّلَاةِ: "اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
342. இறைத்தூதர்(ஸல்) ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு, பின்வரும் சொற்களால் பாதுகாவல் தேடுவார்கள் ``இரட்சகனே! உலோபித்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். தள்ளாத வயது வரை வாழ்வதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இவ்வுலகத்தின் குழப்பங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (என்று கூறுவார்கள்) என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ