39. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ بْنِ عَاصِمٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي صِفَةِ الْوُضُوءِ- قَالَ: {وَمَسَحَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
39. நபி(ஸல்) அவர்களின் `உளூ' குறித்துக் கூறுகையில், ``இறைத்தூதர்(ஸல்) தலைக்கு மஸஹ் செய்தபோது, தம் இரண்டு (உள்ளங்)கைகளையும் தலையின் முன்நெற்றியில் வைத்து பின்னே தடவிக் கொண்டே சென்று, பிறகு முன்னே கொண்டு வந்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
40. وَفِي لَفْظٍ: {بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ}.
40. புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், தலையின் முன் பகுதியில் இருந்து (மஸஹை) ஆரம்பித்து, தம் பிடரி வரை (கைகளை) கொண்டு சென்று, பின்னர் (மஸஹை) ஆரம்பித்த இடத்திற்கே தம் கைகளைக் கொண்டு வந்தார்கள் என உள்ளது.
41. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا -فِي صِفَةِ الْوُضُوءِ- قَالَ: {ثُمَّ مَسَحَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِهِ، وَأَدْخَلَ إِصْبَعَيْهِ السَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ، وَمَسَحَ بِإِبْهَامَيْهِ ظَاهِرَ أُذُنَيْهِ.} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
41. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் `உளூ' குறித்துக் கூறுகையில் ``அவர்கள் தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள். இன்னும், தம் இரண்டு ஆட்காட்டி விரல்களையும் காதிகளினுள் நுழைத்து, தம் கட்டை விரல்கள் இரண்டினாலும் காதுகளின் வெளிப்பகுதியில் மஸஹ் செய்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு குஸைமா.
இது ஸஹிஹ் எனும் தரத்தில் உள்ளது என இமாம் இப்னு குஸைமா(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்
42. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
42. ``உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தன் மூக்கை மும்முறை சிந்தட்டும். ஏனெனில், அவரின் மூக்குத் தண்டில் ஷைத்தான் இரவைக் கழிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
43. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ: {إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
43. ``உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தம் கை மும்முறை கழுவாத வரை, தண்ணீர் உள்ள பாத்திரத்தினுள் தம் கையை நுழைக்க வேண்டாம். ஏனெனில், அவரின் கை இரவை எங்கு கழித்தது என்பதை அவர் அறியமாட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
44. وَعَنْ لَقِيطِ بْنُ صَبْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
44. ``நிறைவாக `உளூ'ச் செய்யுங்கள். இன்னும் விரல்களைக் கோதிக் கழுவுங்கள். இன்னும் நோன்பாளியாய் இல்லை எனில் நாசிக்கு நன்றாக நீர் செலுத்துங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என லகீத் இப்னு ஸபிரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது ஆதரப்பூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு குஸைமா(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
45. وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: {إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ}.
45. ```உளூ'ச் செய்தால் நீ வாய்கொப்பளி'' எனும் வாசகம் அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
46. وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ فِي الْوُضُوءِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
46. ``இறைத்தூதர்(ஸல்) `உளூ'ச் செய்கபோது, தம் தாடியைக் கோதிக் கழுவினார்கள்'' என உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, இப்னு குஸைமா
இது ஆதரப்பூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு குஸைமா(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
47. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بِثُلُثَيْ مُدٍّ، فَجَعَلَ يَدْلُكُ ذِرَاعَيْهِ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
47. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முத்து (இரண்டு கைகளையும் கூட்டி அள்ளும்) தண்ணீரின் அளவில், மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் (மட்டுமே) தரப்பட்டது. அவர்கள் (கழுவியபோது) தம் முழங்கைகளைத் தேய்க்கலானார்கள்!'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹமத், இப்னு குஸைமா
இது ஆதரப்பூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு குஸைமா(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
48. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ، {أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ لِأُذُنَيْهِ مَاءً خِلَافَ الْمَاءِ الَّذِي أَخَذَ لِرَأْسِهِ.} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ.وَهُوَ عِنْدَ "مُسْلِمٍ" مِنْ هَذَا الْوَجْهِ بِلَفْظٍ: وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرَ فَضْلِ يَدَيْهِ، وَهُوَ الْمَحْفُوظُ.
48. இறைத்தூதர்(ஸல்) `உளூ'ச் செய்தபோது காதுகள் மற்றும் தலைக்கு (மஸஹ் செய்ய) தனித்தனியாகத் தண்ணீர் எடுத்ததைத் தாம் பார்த்ததாக அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இமாம் பைஹகீ, திர்மிதீ(ரஹ்) ஆகியோர் இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
``இறைத்தூதர்(ஸல்) தம் கையில் எஞ்சி இருந்த தண்ணீரால் மஸஹ் செய்யாமல், பின்னர் ஒரு முறை தண்ணீரில் தம் கையை நுழைத்து ஈரமாக்கித் தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள்'' என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
49. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ، مِنْ أَثَرِ الْوُضُوءِ، فَمَنْ اِسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
49. ``நிச்சயமாக என் சமுதாயம், மறுமை நாளில் `உளூ'வின் அடையாளத்தால் கைகள் ஒளிர்ந்த வண்ணம் வருவார்கள். தம் கையின் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
50. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهُ، وَفِي شَأْنِهِ كُلِّهِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
50. ``இறைத்தூதர்(ஸல்) செருப்பு அணியும் போதும், தலை வாரும் போதும், `உளூ'ச் செய்யும் போது, தம் காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பவர்களாய் இருந்தாhர்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
51. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا تَوَضَّأْتُمْ فابدأوا بِمَيَامِنِكُمْ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
51. ``நீங்கள் `உளூ'ச் செய்யும்போது உங்களின் வலப் பக்கத்திலிருந்து (ஒவ்வோர் உறுப்பையும் கழுவு) ஆரம்பியுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு குஸைமா(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
52. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَمَسَحَ بِنَاصِيَتِهِ، وَعَلَى الْعِمَامَةِ وَالْخُفَّيْنِ.} أَخْرَجَهُ مُسْلِمٌ.
52. ``இறைத்தூதர்(ஸல்) `உளூ'ச் செய்தபோது தம் நெற்றி ரோமம், தலைப்பாகை மற்றும் இரண்டு காலணிகளுக்கும் மஸஹ் செய்தார்கள்'' என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
53. وَعَنْ جَابِرٍ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا -فِي صِفَةِ حَجِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ {اِبْدَؤُوا بِمَا بَدَأَ اللهُ بِهِ} أَخْرَجَهُ النَّسَائِيُّ، هَكَذَا بِلَفْظِ الْأَمْر ِوَهُوَ عِنْدَ مُسْلِمٍ بِلَفْظِ الْخَبَرِ.
53. நபி(ஸல்) அவர்களின் ஹஜ் குறித்து ஜாபிர்(ரலி) கூறுகையில், ``அல்லாஹ் ஆரம்பித்தததைக் கொண்டே நீங்களும் ஆரம்பியுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, முஸ்லிம்
இந்த ஹதீஸ் நஸயீயில் கட்டளை வாக்கியமாகவும், முஸ்லிமில் செய்தி வாக்கியமாகவும் உள்ளது.
குறிப்பு: எச்செயலாய் இருப்பினும், அதனை முறையாகச் செய்தல் அவசியம். ஒவ்வொரு செயலையும் இறைவன் வரிசைப்படுத்திக் காண்பித்தவாறே செய்ய வேண்டும். `உளூ'ச் செய்யும்போது குர்ஆனின் 5:6 வசனத்தின் அடிப்படையில் வரிசையாகச் செய்ய வேண்டும். எனவேதான், இந்த ஹதீஸ் இங்கு இடம்பெற்றுள்ளது.
54. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ أَدَارَ الْمَاءَ عَلَى مُرْفَقَيْهِ.} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادِ ضَعِيفٍ.
54. ``இறைத்தூதர்(ஸல்) `உளூ'ச் செய்தபோது தம் முழங்கைகளில் தண்ணீர் ஊற்றினார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
இமாம் தார குத்னீ(ரஹ்) பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிட்டுள்ளார்.
55. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اِسْمَ اللهُ عَلَيْهِ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، بِإِسْنَادٍ ضَعِيفٍ.
55. ``(`உளூ'வை ஆரம்பிக்கும்போது), `பிஸ்மில்லாஹ் சொல்லாதவரின் `உளூ' கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா
இதனை இமாம் இப்னு மாஜா(ரஹ்) பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவிட்டுள்ளார்.
56. وَلِلترْمِذِيِّ: عَنْ سَعِيدِ بْنِ زَيْد وَأَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوُه. قَالَ أَحْمَدُ: لَا يَثْبُتُ فِيهِ شَيْءٌ.
56. ஸயீத் இப்னு ஸைத் மற்றும் அபூ ஸயீது அல் குத்ரீ(ரலி) வாயிலாக திர்மிதீயிலும் மேற்கண்ட ஹதீஸ் உள்ளது. இது தொடர்பாக வரும் ஹதீஸ் கள் எதுவும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவையற்று என இமாம் அஹ்மத்(ரஹ்) கூறியுள்ளார்.
57. وَعَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ رَضِيَ اللهُ عَنْهُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ.} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادِ ضَعِيفٍ.
57. இறைத்தூதர்(ஸல்) தண்ணீரை, வாய் கொப்பாளிப்பதற்கும், நாசிக்கும் தனித்தனியாக எடுத்தார்கள் என தல்ஹா இப்னு முஸர்ரிஃப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது அபூ தாவூதில் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
58. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ الْوُضُوءِ- {ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، يُمَضْمِضُ وَيَنْثِرُ مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ مِنْهُ الْمَاءَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ.
58. நபி(ஸல்) அவர்களின் `உளூ' குறித்து அலீ(ரலி) கூறுகையில், ``இறைத்தூதர்(ஸல்) மும்முறை வாய் கொப்பளித்தார்கள். இன்னும் மும்முறை மூக்கைச் சிந்தினார்கள். (வாய் கொப்பளிக்க எடுத்த) அதே தண்ணீரால் நாசியையும் சுத்தம் செய்தார்கள்'' என கூறினார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ.