439. وَعَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {رُصُّوا صُفُوفَكُمْ، وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ.} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
439. ``உங்கள் வரிசைகளை (ஜமாஅத்தாக தொழும்போது) சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும், அவற்றுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள். இன்னும், தோள்புஜங்களை ஒன்றுக்கொன்று நேராக வைத்துக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
440. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا} رَوَاهُ مُسْلِمٌ.
440. ``ஆண்களின் சிறந்த வரிசை மறுமைப் பலன் அதிகமாகக் கிடைக்கும் வரிசை (ஸஃப்) முதலில் உள்ளதாகும். இன்னும் அதில் சிறப்பற்றது மறுமைப் பலன் குறைவாகக் கிடைக்கும் வரிசை இறுதியில் உள்ளதாகும். பெண்களின் சிறந்த வரிசை (ஸஃப்) இறுதியில் உள்ளதாகும். அதில் சிறப்பற்றது முதலில் உள்ளதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
441. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِيْ عَنْ يَمِيْنِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
441. நபி(ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தொழுதபோது நான் அவர்களுக்கு இடப்பக்கமாக நின்றேன். எனவே, இறைத்தூதர்(ஸல்) என் தலையை பின்பக்கமாகப் பிடித்து என்னை அவர்களுக்கு வலப்பக்கமாக ஆக்கினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
442. وَعَنْ أَنَسٍ قَالَ: {صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
442. நபி(ஸல்) அவர்களுடன் தொழுதபோது அவர்களுக்குப் பின்னால் நானும் ஓர் அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் (என் தாய்) உம்மு ஸுலைம் நின்றார் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
443. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ اِنْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {زَادَكَ اللهُ حِرْصًا وَلَا تَعُدْ} رَوَاهُ الْبُخَارِيُّ.وَزَادَ أَبُو دَاوُدَ فِيهِ: {فَرَكَعَ دُونَ الصَّفِّ، ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ}.
443. தொழுகையில் இறைத்தூதர்(ஸல்) ருகூஃவில் இருந்தபோது, வரிசையை (ஸஃப்பை) அடைவதற்கு முன்னரே நான் ருகூஃ செய்ததால், ``அல்லாஹ் உம் ஆர்வத்தை அதிகப்படுத்தட்டும். இனிமேல் இவ்வாறு செய்யாதீர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
``ஸஃப்பீல் சேராமலேயே ருகூஃ செய்து, பின்னர் (குனிந்தவாறு) நடந்து (ஓடிச்) சென்று ஸஃப்பில் சேர்ந்தேன்'' என்ற செய்தி அபூ தாவூதில் அதிகப்படியாக உள்ளது.
444. وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ.} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
444. ஸஃப்பிற்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவரைத் திரும்பத் தொழுமாறு கட்டளையிட்டாகள் என வாயிலாக இப்னு மஅபத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
445. وَلَهُ عَنْ طَلْقٍ{لَا صَلَاةَ لِمُنْفَرِدٍ خَلْفَ الصَّفِّ}. وَزَادَ الطَّبَرَانِيُّ مِنْ حَدِيثِ وَابِصَةَ: {أَلَا دَخَلْتَ مَعَهُمْ أَوْ اِجْتَرَرْتَ رَجُلًا؟}.
445. ``ஸஃப்பிற்குப் பின்னால் தனித்து நிற்பவருக்குத் தொழுகை இல்லை'' என்று தல்க் இப்னு அலீ(ரலி) அறிவித்தார்.
இன்னும் வாபிஸா(ரலி) வாயிலாக, ``நீ ஏன் அவர்களுடன் (ஸஃப்பில்) சேரவில்லை?'' அல்லது (வரிசையிலிருந்து) ஏன் ஒருவரை (பின்னால் உன்னுடன்) இழுத்துக் கொள்ளவில்லை'' என்று கூறினார் என தபரானீயில் அதிகமாக உள்ளது.
446. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا سَمِعْتُمُ الْإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلَاةِ، وَعَلَيْكُمُ السَّكِينَةُ وَالْوَقَارُ، وَلَا تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
446. ``தொழுகைக்கான `இகாமத்'தை நீங்கள் செவியுற்றால் அத்தொழுகையின் பக்கம் செல்லுங்கள். இன்னும், அமைதியைக் கடைபிடியுங்கள். மேலும், விரைந்து (ஓடி) வராதீர்கள். மேலும், தொழுகையில் நீங்கள் அடைந்த அளவு தொழுங்கள்! (இமாம் தொழுகையை முடித்த) பின்னர், அதனை (விடுபட்ட ரக்அத்துக்களை எழுந்து) முழுமையாக்குங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
447. وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلَاةُ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ، وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ، وَمَا كَانَ أَكْثَرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
447. ``ஒருவர் தனித்துத் தொழுவதைவிட மற்றொருவருடன் இணைந்து தொழுதல் அதிக நன்மையைப் பெற்றுத் தருகிறது. மேலும், ஒருவர் மற்றொரு மனிதருடன் தொழுவதைவிட இரண்டு மனிதர்களுடன் இணைந்து தொழுதல் இன்னும் அதிக நன்மையைப் பெற்றுத் தருகிறது. இவ்வாறே எவ்வளவு அதிகமாகிறார்களோ அந்த அளவு அல்லாஹ்விடம் விருப்பத்திற்குரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபய் இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
448. وَعَنْ أُمِّ وَرَقَةَ رَضِيَ اللهُ عَنْهَا، {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
448. என் வீட்டாருக்கு இமாமத் செய்யுமாறு என்னை இறைத்தூதர்(ஸல்) பணித்தார்கள் என உம்மு வரகா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்தல் கூடாது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பெண் இமாமத் செய்யலாம் என்பதையே இங்கு நபி(ஸல்) கூறினார்கள்.
449. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتَخْلَفَ اِبْنَ أُمِّ مَكْتُومٍ، يَؤُمُّ النَّاسَ، وَهُوَ أَعْمَى} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
449. இறைத்தூதர்(ஸல்) பயணம் மேற்கொண்டால்) மக்களுக்கு இமாமத் செய்வதற்காக இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களை (மதீனாவின்) பிரதிநிதியாக்கினார்கள். அவர் பார்வையற்றவராய் இருந்தார் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
450. وَنَحْوُهُ لِابْنِ حِبَّانَ: عَنْ عَائِشَة َرَضِيَ اللهُ عَنْهَا.
450. 449வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக இப்னு ஹிப்பானில் பதிவிடப்பட்டுள்ளது.
451. وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلُّوا عَلَى مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَصَلُّوا خَلْفَ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
451. ``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, எனக் கூறியவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துங்கள். இன்னும், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' எனக் கூறியவருக்குப் பின்னால் (அவரை இமாமாக ஏற்று) தொழுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமாது என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
452. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالْإِمَامُ عَلَى حَالٍ، فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ} رَوَاهُ التِّرْمِذِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.بَابُ صَلَاةِ الْمُسَافِرِ وَالْمَرِيضِ
452. ``உங்களில் ஒருவர் தொழுகைக்கு வந்தால் இமாம் எந்நிலையில் (எவ்வாறு செய்து கொண்டு) இருக்கிறாரோ அவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமாது என இமாம் திர்மிதீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
453. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَوَّلُ مَا فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ، فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَأُتِمَّتْ صَلَاةُ الْحَضَرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
453. முதலில் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகவே கடமையாக்கப்பட்டிருந்தது. பின்னர், அது பயணத்தில் மட்டும் என ஆக்கப்பட்டது; முழுத் தொழுகை பயணி அல்லாதோருக்காக (உள்ளூரில் இருப்போருக்காக) முழுமையாக்கப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
454. وَلِلْبُخَارِيِّ: {ثُمَّ هَاجَرَ، فَفُرِضَتْ أَرْبَعًا، وَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ عَلَى الْأَوَّلِ}.
454. பின்னர், ஹிஜ்ரத் செய்த (புலம் பெயர்ந்த) உடன் நான்கு ரக்அத்துக்கள் கடமையாகின. மேலும், பயணிகளுக்கு முதல் அளவு தொழுகையே (கடமையாக) இருந்தது என புகாரீயில் உள்ளது.
455. زَادَ أَحْمَدُ: {إِلَّا الْمَغْرِبَ فَإِنَّهَا وِتْرُ النَّهَارِ، وَإِلَّا الصُّبْحَ، فَإِنَّهَا تَطُولُ فِيهَا الْقِرَاءَةُ}.
455. ``மக்ரிபைத் தவிர, ஏனெனில், அது பகலின் வித்ராகும். இன்னும் சுப்ஹைத் தவிர, ஏனெனில், அதில் கிராஅத் நீண்டதாகும்'' என்பது அஹ்மதில் அதிகப்படியாக உள்ளது.
456. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْصُرُ فِي السَّفَرِ وَيُتِمُّ، وَيَصُومُ وَيُفْطِرُ.} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَرُوَاتُهُ ثِقَاتٌ. إِلَّا أَنَّهُ مَعْلُولٌ.وَالْمَحْفُوظُ عَنْ عَائِشَةَ مِنْ فِعْلِهَا، وَقَالَتْ: {إِنَّهُ لَا يَشُقُّ عَلَيَّ} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ.
456. இறைத்தூதர்(ஸல்) பயணத்தில் (நான்கு ரக்அத் தொழுகைகளை) கஸராகவும், முழுமையாகவும் தொழுவார்கள். நோன்பு நோற்றும், நோற்காமலும் இருப்பார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். ஆயினும், இது மஃலூல் எனும் குறைபாடு உள்ளது.
ஆயிஷா(ரலி) வாயிலாகவே பைஹகீயில், ``எனக்கு அது கஷ்டமானதாய் இல்லை'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: ஆயிஷா(ரலி) சில பயணங்களில் நான்கு ரக்அத்துத் தொழுகைகளைக் குறைத்தும், சில பயணங்களில் குறைக்காமல் முழுமையாகவும் தொழுதுள்ளார்கள். அவ்வாறே சில பயணங்களில் நோன்பு நோற்றும், சில பயணங்களில் நோன்பு நோற்காமலும் இருந்துள்ளார்கள். எனவே, பைஹகீயில் இடம்பெற்றுள்ள வாசகம் நபி(ஸல்) கூறிய வாசகம் அல்ல; ஆயிஷா(ரலி) அவர்களின் வாசகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
457. وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ يُحِبُّ أَنْ تُؤْتَىرُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَىمَعْصِيَتُهُ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.وَفِي رِوَايَةٍ: {كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ}.
457. ``தனக்கு மாறுசெய்வதை அல்லாஹ் வெறுக்கிறான்; அவ்வாறே தான், அளித்துள்ள சலுகையை நிறைவேற்றுவதை அவன் விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இதனை இப்னு குஸைமா(ரஹ்) மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றோர் அறிவிப்பில், ``எவ்வாறு தன்னால் வலியுறுத்தப்பட்டதை விரும்புகிறானோ'' என உள்ளது.
458. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَال ٍأَوْ فَرَاسِخَ، صَلَّى رَكْعَتَيْنِ} رَوَاهُ مُسْلِمٌ.
458. இறைத்தூதர்(ஸல்) மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்குகள் பயணம் மேற்கொண்டால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: ஃபர்ஸக் எனும் வார்த்தை அரபுகள் மற்றும் பாரசீகர்களால் தூர அளவைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்தத் தூர அளவு அரபுகளிடமும் பாரசீகர்களிடமும் வித்தியாசமான அளவைக் கொண்டுள்ளது. அரபுகளிலும் ஹிஜாஸ் மற்றும் எகிப்தில் தூர அளவு வித்தியாசமாகவே உள்ளது. நபி(ஸல்) அவர்களின் கால அரபுகள் ஃபர்ஸக் எனும் தூர அளவை 3 மைல்கள் என்றும் 4.83 கிலோ மீட்டர் தூர அளவு என்றும் கணக்கிட்டு வந்தனர். எகிப்தியர் 2.25 கிலோ மீட்டர் என தற்போது கணக்கிடுகின்றனர். இவ்வாறு எத்தியோபியா, இராக் என பல நாடுகளும் பல்வேறாகக் கணக்கிடுகின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் கால அரபுகள் ஃபர்ஸக் எனும் தூர அளவை 3 மைல்கள் எனக் கணக்கிட்டுள்ளதால் அதன்படி, ஒரு ஃபர்ஸக் என்பது 4.83 கிலோ மீட்டர் தூரம் என்றே கணக்கிட வேண்டும். இதன்படி பயண தூரம் 14.49 கிலோ மீட்டர் (சுமார் 15 கி.மீ) இருந்தால் அதில் கஸர் செய்து கொள்ள வேண்டும் என்பதே சரியாகும். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த அளவுகளில் இன்னும் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், அவற்றை ஷரீஅத்தின் படி அமல்கள் செய்வதற்கு ஏற்கலாகாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.