535. وَذَكَرَ اَلشَّافِعِيُّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ دُونَ آخِرِهِ.
535. நிலநடுக்கத்தின்போது, ஆறு ருகூவுகளுடனும் நான்கு ஸஜ்தாக்களுடனும் இறைத்தூதர்(ஸல்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். இன்னும், அத்தாட்சிகளுக்கான தொழுகை இவ்வாறுதான்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
மேற்கண்டவாறே அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) வாயிலாக ஷாஃபியீயில் உள்ளது. அதில் கடைசி வாசகம் மட்டும் இல்லை.
536. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاضِعًا، مُتَبَذِّلًا، مُتَخَشِّعًا، مُتَرَسِّلًا، مُتَضَرِّعًا، فَصَلَّى رَكْعَتَيْنِ، كَمَا يُصَلِّي فِي الْعِيدِ، لَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَأَبُو عَوَانَةَ، وَابْنُ حِبَّانَ.
536. இறைத்தூதர்(ஸல்) எளிய உடையணிந்து, பணிந்தவர்களாக, நிதானமான நடையுடன், இறைவனிடம் மன்றாடியவர்களாக (மதீனா நகரை விட்டு) வெளியே சென்றார்கள். மேலும், பெருநாள் தொழுகை தொழுவது போன்று (மழை வேண்டி பிரார்த்தித்தவர்களாக) இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். உங்களின் இந்த உரை போன்று உரையாற்றவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ, அபூ அவானா மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
537. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {شَكَا النَّاسُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُحُوطَ الْمَطَرِ، فَأَمَرَ بِمِنْبَرٍ، فَوُضِعَ لَهُ فِي الْمُصَلَّى، وَوَعَدَ النَّاسَ يَوْمًا يَخْرُجُونَ فِيهِ، فَخَرَجَ حِينَ بَدَا حَاجِبُ الشَّمْسِ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَكَبَّرَ وَحَمِدَ اللهَ، ثُمَّ قَالَ: "إِنَّكُمْ شَكَوْتُمْ جَدَبَ دِيَارِكُمْ، وَقَدْ أَمَرَكُمُ اللهُ أَنْ تَدْعُوَهُ، وَوَعَدَكُمْ أَنْ يَسْتَجِيبَ لَكُمْ، ثُمَّ قَالَ: اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَلرَّحْمَنِ الرَّحِيمِ، مَالِكِ يَوْمِ الدِّينِ، لَا إِلَهَ إِلَّا اللهُ يَفْعَلُ مَا يُرِيدُ، اللَّهُمَّ أَنْتَ اللهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ، أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ، وَاجْعَلْ مَا أَنْزَلْتَ قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ" ثُمَّ رَفَعَ يَدَيْهِ، فَلَمْ يَزَلْ حَتَّى رُئِيَ بَيَاضُ إِبِطَيْهِ، ثُمَّ حَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، وَقَلَبَ رِدَاءَهُ، وَهُوَ رَافِعٌ يَدَيْهِ، ثُمَّ أَقْبِلَ عَلَى النَّاسِ وَنَزَلَ، وَصَلَّى رَكْعَتَيْنِ، فَأَنْشَأَ اللهُ سَحَابَةً، فَرَعَدَتْ، وَبَرَقَتْ، ثُمَّ أَمْطَرَتْ} رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: "غَرِيبٌ، وَإِسْنَادُهُ جَيِّدٌ".
537. மழை பொழியாதிருப்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் முறையிட்டனர். எனவே, ஒரு மிம்பரைக் கொண்டு வருமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது கொண்டு வரப்பட்டு, (பெருநாள்) தொழுமிடத்தில் வைப்பட்டது. மக்கள் அனைவரையும் ஒரு நாளில் அங்கு ஒன்று சேர்க்குமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். சூரியன் ஓரத்தில் வெளிப்பட்டதும், இறைத்தூதர்(ஸல்) மிம்பரில் அமர்ந்தார்கள். பின்னர், தக்பீர் கூறினார்கள். இறைவனைப் புகழ்ந்தார்கள். பின்னர்,
``மக்களே! நீங்கள் உங்கள் நகரத்தின் வறட்சி குறித்து முறையிட்டீர்கள். தன்னிடம் துஆ கேட்குமாறு உங்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவன் உங்கள் வேண்டுதலை அங்கீகரிப்பான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``அனைத்துப் புகழும் இறைவனுக்கே! அவன் அகிலங்களின் இரட்சகன். அளவற்ற அருளாளன். நிகரற்ற கருணையாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் நாடியதைச் செய்கிறான். எங்கள் இரட்சகனே! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயோ தேவையற்றவன் (தன்னிறைவு மிக்கவன்). நாங்களோ (உன்னிடம்) தேவையுடையவர்கள் (தன்னிறைவு அற்றவர்கள்). எங்கள் மீது மழையைப் பொழியச் செய்வாயாக! நீ எங்கள் மீது இறக்கக் கூடியதை எங்களுக்கு ஆற்றல் மிக்கதாகவும், முழுமையானதாகவும் ஆக்குவாயாக!'' என்றும் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்களின் அக்குளின் வெண்மை தெரியும் அளவு அது மெதுவாக உயர்ந்து கொண்டே போனது. பின்னர். மக்களின் பால் தம் முதுமைகத் திருப்பித் தம்முடைய மேலாடையைத் திருப்பிப் போட்டார்கள். அப்போதும், அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தியே வைத்திருந்தார்கள். பின்னர், மக்களின் பால் திரும்பி, மிம்பரை விட்டு இறங்கினார்கள். பின்னர், இரண்டு ரக்அத்துக்ள் தொழ வைத்தார்கள். அப்போது, வானத்தில் மேகத்தை அல்லாஹ் உண்டாக்கினான். அதில் இடியுடன் சேர்ந்த மின்னலும் இருந்தது. பின்னர், மழை பொழியத் தொடங்கியது என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
538. وَقِصَّةُ التَّحْوِيلِ فِي "الصَّحِيحِ" مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ، وَفِيهِ: {فَتَوَجَّهَ إِلَى الْقِبْلَةِ، يَدْعُو، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ}.
538. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) வாயிலாக புகாரீயின் ஓர் அறிவிப்பில், மேலாடையை மாற்றிப் போட்ட சம்பவம் உள்ளது, ``இறைத்தூதர்(ஸல்) கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்தார்கள். பின்னர், இரண்டு ரக்அத்துக்கள் சத்தமிட்டு ஓதித் தொழ வைத்தார்கள்'' என உள்ளது.
539. وَلِلدَّارَقُطْنِيِّ مِنْ مُرْسَلِأَبِي جَعْفَرٍ الْبَاقِرِ: وَحَوَّلَ رِدَاءَهُ؛ لِيَتَحَوَّلَ الْقَحْطُ.
539. அபூ ஜஅஃபர் அல் பாகிர்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில், ``அவர்கள் தம்முடைய மேலாடையை பஞ்சம் மாறவேண்டும் என்பதற்காகத் திருப்பிப் போட்டார்கள்'' என `முர்ஸல்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
540. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ. فَقَالَ: يَا رَسُولَ اللهِ، هَلَكَتِ الْأَمْوَالُ، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللهَ عَزَّ وَجَلَّ يُغِيثُنَا، فَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: "اَللَّهُمَّ أَغِثْنَا، اَللَّهُمَّ أَغِثْنَا..."} فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ اَلدُّعَاءُ بِإِمْسَاكِهَا مُتَّفَقٌ عَلَيْهِ.
540. வெள்ளிக்கிழமையன்று (மிம்பரில்) இறைத்தூதர்(ஸல்) நின்று உரையாறிக் கொண்டிருந்தபோது, இறைஇல்லத்திலினுள் ஒருவர் நுழைந்து, ``இறைத்தூதர் அவர்களே! சொத்துக்கள் நாசமடைந்துவிட்டன; வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன. தாங்கள் துஆச் செய்யுங்கள்! அல்லாஹ் எங்கள் மீது மழையை இறக்கட்டும்!'' எனக் கூறினார்.
அப்போது, இறைத்தூதர்(ஸல்) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். பின்னர், ``அல்லாஹ்வே! எங்கள் மீது மழையைப் பொழிவாயாக! இரட்சகனே! எங்கள் மீது மழை பொழிவாயாக!' என்று கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஹதீஸின் சுருக்கம்)
இதில் மழையை நிறுத்தும்படிப் பிரார்த்தித்ததும் உள்ளது என அறிவிப்பாளர் கூறியுள்ளார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: நபிமொழியை முழுமையாக அறிந்திட காண்க: புகாரீ ஹதீஸ் எண் 1014
541. وَعَنْ أَنَسٍ؛ {أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ إِذَا قَحِطُوا يَسْتَسْقِي بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ. وَقَالَ: اَللَّهُمَّ إِنَّا كُنَّا نَسْتَسْقِي إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا، فَيُسْقَوْنَ} رَوَاهُ الْبُخَارِيُّ.
541. உமர்(ரலி) அவர்களின் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டால், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை மழைக்கு துஆச் செய்யுமாறு உமர்(ரலி) வேண்டுவார்கள். இன்னும், ``அல்லாஹ்வே! நபி(ஸல்) (அவர்களின் காலத்தில்) அவர்களின் துஆ மூலம் உன்னிடம் மழையை வேண்டுவோம். நீ எங்களுக்கு மழை பொழிவாய்! இப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் வாயிலாகக் வேண்டுகிறோம் எங்கள் மீது மழையைப் பொழிவாயாக!'' என்றும் கூறுவார்கள். ``அப்போது எங்கள் மீது மழை பொழியப்படும்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
542. وَعَنْ أَنَسٍ قَالَ: {أَصَابَنَا -وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ: فَحَسَرَ ثَوْبَهُ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، وَقَالَ: "إِنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ"} رَوَاهُ مُسْلِمٌ.
542. மழைபொழிந்தபோது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் தம்முடைய (மேல்) ஆடையைக் களைந்தார்கள். அவர்களின் உடலில் நீர் பட்டது. மேலும், ``இது அல்லாஹ்வின் புதிய அன்பாளிப்பாகும்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம்
543. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ: {اَللَّهُمَّ صَيِّبًا نَافِعًا} أَخْرَجَاهُ.
543. இறைத்தூதர்(ஸல்) மழை பொழிவதைக் கண்டால், ``அல்லாஹ்வே! எங்களுக்குப் பலன் தரக்கூடிய மழையைப் பொழிவாயாக!'' என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
544. وَعَنْ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فِي اَلِاسْتِسْقَاءِ: {اَللَّهُمَّ جَلِّلْنَا سَحَابًا، كَثِيفًا، قَصِيفًا، دَلُوقًا، ضَحُوكًا، تُمْطِرُنَا مِنْهُ رَذَاذًا، قِطْقِطًا، سَجْلًا، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ} رَوَاهُ أَبُو عَوَانَةَ فِي "صَحِيحِهِ".
544. இறைத்தூதர்(ஸல்) மழைக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, ``இரட்சகனே! எங்களுக்காக அடர்த்தியான, இடி இடிக்கக் கூடிய, விரைந்து வரக் கூடிய, சிரித்தவாறு (ரஹ்மத்தாக) வரக் கூடியதைக் கொண்டு வருவாயாக! (கல் மழை பொழியாமல்) சின்னஞ்சிறு துளிகளாக, நீர் அதிகம் வரக் கூடிய, பலன் தரக்கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நீயே கண்ணியமிக்கவன், கொடையாளன்'' என்று கூறினார்கள் என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் அபூ அவானா தம்முடைய ஸஹீஹில் பதிவிடப்பட்டுள்ளார்.
545. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {خَرَجَ سُلَيْمَانُ عَلَيْهِ السَّلَامُ يَسْتَسْقِي، فَرَأَى نَمْلَةً مُسْتَلْقِيَةً عَلَى ظَهْرِهَا رَافِعَةً قَوَائِمَهَا إِلَى السَّمَاءِ تَقُولُ: اَللَّهُمَّ إِنَّا خَلْقٌ مِنْ خَلْقِكَ، لَيْسَ بِنَا غِنًى عَنْ سُقْيَاكَ، فَقَالَ: ارْجِعُوا لَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْرِكُمْ} رَوَاهُ أَحْمَدُ وَصَحَّحَهُ الْحَاكِمُ.
545. சுலைமான்(அலை) மழை பொழிய வேண்டுவதற்காக நகரை விட்டு வெளியேறினார்கள். அப்போது, ஓர் எறும்பு மல்லாக்காகப்படுத்து, தன் கால்களை வானத்தின் பால் தூக்கிய நிலையில், ``இரட்சகனே! நாங்கள் உன் படைப்புகளில் ஒரு படைப்பாக உள்ளோம். உன் மழை எங்களுக்கு அவசியம் தேவை'' எனக் கூறிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். பின்னர், ``நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். உங்களை அல்லாத ஓர் உயிரினத்தின் துஆவால் நீர் புகட்டப்பட்டு விட்டீர்கள்'' என சுலைமான்(அலை) கூறினார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: அஹ்மத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
546. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.بَابُ اللِّبَاسِ
546. இறைத்தூதர்(ஸல்) மழைக்காக துஆச் செய்தபோது வானத்தை நோக்கித் தம் புறங்கைகளை உயர்த்தினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
547. عَنْ أَبِي عَامِرٍ اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
547. ``என் சமுதாயத்தில் சில கூட்டத்தார், வெட்கத்தலத்தையும் (விபச்சாரத்தையும்), பட்டாடையையும் (ஆண்கள் அணிவது) ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என எண்ணுவர். (ஆனால், அவையோ விலக்கப்பட்டவை)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஆமிர் அல் அஷ் அரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
548. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
548. நாங்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ணக் கூடாது என்றும், பருகக் கூடாது என்றும், பட்டாடைகள் அணியக் கூடாது என்றும், அதன் மீது நாங்கள் உட்கார வேண்டாம் என்றும் இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குத் தடை விதித்தார்கள் என ஹுதைபா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
549. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ، أَوْ ثَلَاثٍ، أَوْ أَرْبَعٍ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
549. இரண்டு விரற்கடை அல்லது மூன்று அல்லது நான்கு விரற்கடைகள் அளவு பட்டுத்துணி சேர்ந்த மற்ற துணிகளைத் தவிர (முழுக்க முழுக்க) பட்டினால் ஆன ஆடைகள் அணிவதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
550. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ فِي قَمِيصِ الْحَرِيرِ، فِي سَفَرٍ، مِنْ حَكَّةٍ كَانَتْ بِهِمَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
550. ஒரு பயணத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் ஸுபைர்(ரலி) ஆகிய இருவருக்கும் ஒரு வகை அரிப்புநோய் இருந்த காரணத்தால் பட்டுச்சட்டை அணிவதற்கு இறைத்தூதர்(ஸல்) சலுகையளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
551. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَسَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً سِيَرَاءَ، فَخَرَجْتُ فِيهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَقْتُهَا بَيْنَ نِسَائِي} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
551. இறைத்தூதர்(ஸல்) எனக்கு ஒரு பட்டாடை கொடுத்தார்கள். நான் அதனை அணிந்தவாறு வெளியில் வந்தபோது, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்டேன். உடனே, நான் அதைக் கிழித்து என் வீட்டுப் பெண்களுக்குப் பங்கிட்டேன் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
552. وَعَنْ أَبِي مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهِمْ.}. رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
552. ``தங்கமும், பட்டும் என் சமுதாயத்தின் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு விலக்கப்பட்டுள்ளன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
553. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ اللهُ يُحِبُّ إِذَا أَنْعَمَ عَلَى عَبْدٍ أَنْ يَرَىأَثَرَ نِعْمَتِهِ عَلَيْهِ} رَوَاهُ الْبَيْهَقِيُّ.
553. ``அல்லாஹ் தன் அடியான் மீது அருள்செய்தால், அவனிடம் அந்த அருளின் அடையாளத்தைக் காண விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
554. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْقَسِيِّ وَالْمُعَصْفَرِ} رَوَاهُ مُسْلِمٌ.
554. (எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஒருவகை) பட்டு மற்றும் காவி நிற ஆடையை (அணிவதை) இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்