581. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِيْ مَاتَ فِيهِ، وَخَرَجَ بِهِمْ مِنَ الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
581. நஜாஷி மன்னரின் மரணச் செய்தி அவரின் மரண தினத்தன்றே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (அப்போது) இறைத்தூதர்(ஸல்) தங்கள் தோழர்களுடன் ஜனாஸா தொழுதும் இடம் சென்று அணிவகுப்பைச் சரி செய்தார்கள். இன்னும், அவருக்காக நான்கு தக்பீர்கள் கூறினார்கள் (தொழுகை நடத்தினார்கள்) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
582. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ} رَوَاهُ مُسْلِمٌ.
582. இறந்த ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில், அல்லாஹ்விற்கு ஒருபோதும் இணைகற்பிக்காத நாற்பது நபர்கள் சேர்ந்து (தொழ) நின்றால் அவருக்காக அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
583. وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ وَسْطَهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
583. நிஃபாஸ் (குழந்தை பிறந்த உதிரப்போக்குள்ள) நாள்களில் இறந்த ஒரு பெண்ணுக்காக இறைத்தூதர்(ஸல்) தொழுகை நடத்தியபோது, நான் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் அதன் (மையத்தின்) நடுவில் நின்றிருந்தார்கள் என்று ஸமுரா பின் ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
584. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {وَاللهِ لَقَدْ صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى اِبْنَيْ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ} رَوَاهُ مُسْلِمٌ.
584. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைத்தூதர்(ஸல்) `பைதா' எனும் பெண்னின் இரண்டு மகன்களின் (ஜனாஸா) தொழுகையை இறைஇல்லத்தில் தொழவைத்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
585. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: {كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا، وَإِنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا، فَسَأَلْتُهُ فَقَالَ: كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُهَا} رَوَاهُ مُسْلِمٌ وَالْأَرْبَعَةُ.
585. ஸைத் இப்னு அர்கம்(ரலி) ஜனாஸாத் தொழுகை நடத்தியபோது நான்கு தக்பீர்கள் கூறினர்கள். ஒரு ஜனாஸாவில் ஐந்து தக்பீர் கூறிவிட்டார்கள். (இது பற்றி) நான் அவர்களிடம் வினவியபோது இறைத்தூதர்(ஸல்) இவ்வாறு தக்பீர் கூறியுள்ளார்கள் என பதிலளித்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
586. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ كَبَّرَ عَلَى سَهْلِ بْنِ حُنَيْفٍ سِتًّا، وَقَالَ: إِنَّهُ بَدْرِيٌّ} رَوَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ.وَأَصْلُهُ فِي "الْبُخَارِيِّ".
586. ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கு அலீ(ரலி) ஜனாஸா தொழுகை நடத்தியபோது, ஆறு தக்பீர் கூறினார்கள். பின்னர், ``அவர் பத்ருத் தோழர்'' என்பதையும் குறிப்பிட்டார்கள்.
நூல்: ஸயீத் இப்னு மன்ஸூர்
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
587. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَيَقْرَأُ بِفَاتِحَةِ اَلْكِتَابِ فِي التَّكْبِيرَةِ الْأُولَى} رَوَاهُ الشَّافِعِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
587. இறைத்தூதர்(ஸல்) ஜனாஸாக்களுக்கு தொழுகை நடத்தும்போது நான்கு தக்பீர் கூறுவார்கள். மேலும், முதல் தக்பீரில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
இதனை `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்புத் தொடருடன் இமாம் ஷாஃபியீ(ரஹி) பதிவிட்டுள்ளார்.
588. وَعَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَوْفٍ قَالَ: {صَلَّيْتُ خَلَفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ فَاتِحَةَ الكْتِابِ فَقَالَ: "لِتَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
588. நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுகை தொழுதேன். அப்போது, அவர்கள் சூரத்துல் ஃபாத்திஹா (சப்தமாக) ஓதினார்கள். பின்னர், அறிந்து கொள்ளுங்கள்! இது நபிவழியாகும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகத்தான் (சப்தமாக) ஓதினேன்'' என்று கூறினார்கள் என தல்ஹா இப்னு அப்தில்லாஹ் இப்னி அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
589. وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ: "اَللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْحَمْهُ وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَاَلثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ} رَوَاهُ مُسْلِمٌ.
589. ``இரட்சகனே! இவரை மன்னித்தருள்வாயாக! மேலும், இவர் மீது கருணை புரிவாயாக! மேலும், இவரின் பிழையைப் பொறுத்து, சுகம் அளிப்பாயாக! இவர் செல்லும் இடத்தை சங்கைக்குரியதாய் ஆக்குவாயாக! மேலும், இவர் புகும் இடத்தை (கப்ரை) விசாலமாக்குவாயாக! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் (இவரின் பாவங்களைக்) கழுவித் தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடையை சுத்தப்படுத்துவது போன்று பிழைகளிலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! மேலும்! இங்குள்ள வீட்டைவிட சிறந்த வீட்டை இவருக்கு ஏற்படுத்துவாயாக! மேலும், இங்குள்ள குடும்பத்தைவிட (மனைவியைவிட) சிறந்த குடும்பத்தை ஏற்படுத்துவாயாக! மேலும், இவரை சுவர்க்கத்தில் புகுத்துவாயாக! மேலும், இவரை மண்ணறையின் சோதனையிலிருந்தும் மற்றும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தம் காத்தருள்வாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) ஜனாஸாத் தொழுகையின்போது ஓதுவார்கள். நான் அதனை மனனம் செய்து கொண்டேன்'' என அவ்ஃப் இப்ன மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
590. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: "اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ} رَوَاهُ مُسْلِمٌ، وَالْأَرْبَعَةُ.
590. ``இரட்சகனே! எங்களில் உயிரோடு இருப்போரையும், மரணித்தவர்களையும் இங்கு வந்திருப்போரையும், வராதிருப்போரையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் ஆண்களையும், பெண்களையும் மன்னித்தருள்வாயாக! இரட்சகனே! எங்களில் உயிரோடு இருப்போரை இஸ்லாமின் அடிப்படையில் வாழச் செய்வாயாக! இன்னும் எங்களில் இறப்பவர்களை இறைநம்பிக்கை உள்ள நிலையில் இறக்கச் செய்வாயாக! இரட்சகனே! இவருக்குரிய (நற்) கூலியை (நாங்கள் அவருக்காக உன்னிடம் கேட்கும் அதை) எங்களுக்குத் தடுத்துவிடாதே! இன்னும், இவருக்குப் பின் எங்களை வழிதவறச் செய்துவிடாதே!'' என்று இறைத்தூதர்(ஸல்) ஜனாஸாத் தொழுகையின்போது ஓதுபவர்களாக இருந்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத் நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
591. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
591. ``நீங்கள் ஜனாஸாத் தொழுகை தொழுதால் அதற்காகத் தூய எண்ணத்தோடு (இறைவனிடம்) பிராத்தியுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
592. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَسْرِعُوا بِالْجَنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنْ تَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ} مُتَّفَقٌ عَلَيْهِ.
592. ``ஜனாஸாவை விரைவாக எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், அது நல்ல (செயல் செய்த)தாக இருந்தால் நல்லது. அதனை அதன் இடம் எடுத்துச் செல்பவராவீர்கள். அவ்வாறு இல்லையெனில், அது தீயது. அதனை உங்களை தோளை விட்டு வேகமாக இறக்கி விட்டவராவீர்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
593. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ شَهِدَ الْجِنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ". قِيلَ: وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: "مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.وَلِمُسْلِمٍ: {حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ}.
593. ``ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு, அதற்கு தொழுகை நடத்தும் வரை இருப்பவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு; இன்னும் அது அடக்கம் செய்யப்படும் வரை இருப்பவருக்கு இரண்டு கீராத் நன்மை உண்டு என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இரண்டு கீராத்துக்கள்' என்றால் என்ன?'' என வினவப்பட்டது.
``இரண்டு பெரும் மலையை போன்ற அளவு (நன்மைகள்)'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலுரைத்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
அது அடக்கம் செய்யப்படும் வரை என்பதற்கு பதிலாக ``அது கப்ரில் வைக்கப்படும் வரை'' எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.
594. وَلِلْبُخَارِيِّ: {مَنْ تَبِعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ}.
594. இறைத்தூதர்(ஸல்), அபூ பக்ர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் ஜனாஸாவிற்கு முன்பாகச் சென்றதை, தாம் பார்த்துள்ளதாக ஸாலிம் தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் நஸயீ(ரஹ்) இதனை மஃலூல் எனும் குறையுள்ளது என்றும் ஒரு குழுவினர் இதனை `முர்ஸல்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
595. وَعَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ، وَأَعَلَّهُ النَّسَائِيُّ وَطَائِفَةٌ بِالْإِرْسَالِ.
595. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. ஆயினும், எங்களுக்கு அது கடுமையாக தடைசெய்யப்படவில்லை என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
596. وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {نُهِينَا عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
596. ``நீங்கள் ஜனாஸாவை (கொண்டு வருவதை) பார்த்தால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்பவர் அது கீழே வைக்கப்படும் வரை அமர வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
597. وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلَا يَجْلِسْ حَتَّى تُوضَعَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
597. ``நீங்கள் ஜனாஸாவை (கொண்டு வருவதை) பார்த்தால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்பவர் அது கீழே வைக்கப்படும் வரை அமர வேண்டாம்`` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
598. وَعَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّ عَبْدَ اللهُ بْنَ يَزِيدَ رَضِيَ اللهُ عَنْهُ {أَدْخَلَ الْمَيِّتَ مِنْ قِبَلِ رِجْلَيِ الْقَبْرَ، وَقَالَ: هَذَا مِنَ السُّنَّةِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.
598. மண்ணறையில் மய்யித்தை அதன் கால் பக்கமாய் இறக்கிய அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி), ``இது நபிவழியாகும்'' என்று கூறினார்கள் என அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
599. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقُبُورِ، فَقُولُوا: بِسْمِ اللهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.} أَخْرَجَهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ، وَأَعَلَّهُ الدَّارَقُطْنِيُّ بِالْوَقْفِ.
599. ``நீங்கள் உங்களில் இறந்தவர்க மய்யித்துக்களை மண்ணறைகளில் வைக்கும்போது பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரஸுலில்லாஹி (அல்லாஹ்வின் பெயராலும், இறைத்தூதரின் வழிமுறைப்படியும் இந்த மய்யித்தை அடக்கம் செய்கிறேன்) எனக் கூறுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' மற்றும் மஃலூல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
600. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا} رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ عَلَى شَرْطِ مُسْلِمٍ.
600. ``மய்யித்தின் எலும்புகளை உடைப்பது உயிருள்ளவரின் எலும்புகளை உடைப்பது போன்றதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஸ்லிமின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸாகும்.