605. وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، وَأَتَى الْقَبْرَ، فَحَثَى عَلَيْهِ ثَلَاثَ حَثَيَاتٍ، وَهُوَ قَائِمٌ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ.
605. இறைத்தூதர்(ஸல்) உஸ்மான் இப்னு மழ்வூனுக்குத் தொழுகை நடத்தினார்கள். இன்னும், (அவரின்) மண்ணறைக்கும் வந்தார்கள். பின்னர், நின்றநிலையில் மூன்று கைப்பிடி மண் எடுத்து அதில் போட்டார்கள் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
குறிப்பு: இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்களில் காசிம் அல் உமரிய்யீ, ஆஸிம் இப்னு உபைதில்லாஹ் இருவரும் பலவீனமானவர்கள்.
606. وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ وَقَالَ: "اِسْتَغْفِرُوا لِأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
606. மய்யித்தை அடக்கம் செய்து முடித்தால், அங்கு நின்று, ``நீங்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்! அவருக்கு உறுதியை அளிக்கும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள்! ஏனெனில், இப்போது அவர் கேள்வி கேட்கப்படுவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
607. وَعَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ أَحَدِ التَّابِعِينَ قَالَ: {كَانُوا يَسْتَحِبُّونَ إِذَا سُوِّيَ عَلَى الْمَيِّتِ قَبْرُهُ، وَانْصَرَفَ النَّاسُ عَنْهُ، أَنْ يُقَالَ عِنْدَ قَبْرِهِ: يَا فُلَانُ! قُلْ: لَا إِلَهَ إِلَّا اللهُ. ثَلَاثُ مَرَّاتٍ، يَا فُلَانُ! قُلْ: رَبِّيَ اللهُ، وَدِينِيَ الْإِسْلَامُ، وَنَبِيِّ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} رَوَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ مَوْقُوفًا.
607. கப்ரில் மய்யித்தை வைத்துவிட்டு அதைச் சமப்படுத்தி செல்வதற்கு முன்பு ``இன்னாரே! `லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று மும்முறை கூறுவீராக! மேலும், என் மார்க்கம் இஸ் லாம்; என் தூதர் முஹம்மத்(ஸல்) என்று கூறுவீராக எனக் கூறுவதை முஸ்தஹப் (விரும்பத் தக்கது) என நாங்கள் கருதிக் கொண்டிருந்ததோம் என ளம்ரா இப்னு ஹபீப்(ரலி) கூறினார் என தாபியீன்களில் ஒருவர் அறிவித்தார்.
இதனை இமாம் சயீத் இப்னு மன்ஸூர் `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பு: இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.
608. وَلِلطَّبَرَانِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ أَبِي أُمَامَةَ مَرْفُوعًا مُطَوَّلًا.
608. மேற்கண்ட ஹதீஸ் போன்று அபூ உமாமா(ரலி) வாயிலாக `மர்ஃபூஃ' எனும் தரத்தில் தாரகுத்னீயில் நீண்டதாகப் பதிவிடப்பட்டுள்ளது.
609. وَعَنْ بُرَيْدَةَ بْنِ الْحَصِيبِ الْأَسْلَمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا} رَوَاهُ مُسْلِمٌ.زَادَ التِّرْمِذِيُّ: {فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ}.
609. ``கப்ரு ஸியாரத்தை (மண்ணறைச் சந்திப்பை) விட்டு உங்களை நான் தடுத்திருந்தேன். இப்போது நீங்கள் ஸியாரத் செய்யுங்கள் (மண்ணறை சென்று வாருங்கள்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா இப்னு அல் ஹுஸைப் அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
``(மேற்கண்ட ஹதீஸுடன்) நிச்சயமாக அது மறுமையை நினைவு கூரக்கூடியதாய் உள்ளது'' என்பதை இமாம் திர்மிதீ(ரஹ்) அதிகப்படியாக பதிவிட்டுள்ளார்.
610. زَادَ ابْنُ مَاجَهْ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ: {وَتُزَهِّدُ فِي الدُّنْيَا}.
610. இப்னு மஸ்வூத்(ரலி) வாயிலாக ``இது உலக வாழ்க்கையின் மோகத்தைப் போக்குகிறது'' என இப்னு மாஜாவில் அதிகப்படியாய் உள்ளது.
611. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَائِرَاتِ الْقُبُورِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
611. கப்ருகளை ஸியாரத் (மண்ணறையைத் தரிசனம்) செய்யும் பெண்களை இறைத்தூதர்(ஸல்) சபித்துள்ளார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
612. وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُولُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّائِحَةَ، وَالْمُسْتَمِعَةَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.
612. ஒப்பாரி வைத்து அழுபவர்களையும், அதைச் செவியுற்று (தடுக்காமல்) இருப்பவர்களையும் இறைத்தூதர்(ஸல்) சபித்துள்ளார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: அபூ தாவூத்
613. وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَخَذَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا نَنُوحَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
613. ஒப்பாரி வைக்கக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள் என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
614. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
614. ``ஒப்பாரி வைப்பதால் கப்ரில் மய்யித் (மண்ணறையில் அடக்கப்பட்டவர்) வேதனை செய்யப்படுகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
615. وَلَهُمَا: نَحْوُهُ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ.
615. முகீரா இப்னு ஷுஅபா(ரலி) வாயிலாக 613 வது ஹதீஸ் போன்றே புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ளது.
616. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {شَهِدْتُ بِنْتًا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُدْفَنُ، وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عِنْدَ الْقَبْرِ، فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
616. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகள் (உம்மு குல்ஸூம்) அடக்கம் செய்யப்பட்டபோது நானும் அங்கு இருந்தேன். இறைத்தூதர்(ஸல்) மண்ணறையின் அருகில் அமர்ந்திருந்தார்கள். அப்போது, அவர்களின் இரண்டு கண்களும் கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
617. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَدْفِنُوا مَوْتَاكُمْ بِاللَّيْلِ إِلَّا أَنْ تُضْطَرُّوا} أَخْرَجَهُ ابْنُ مَاجَه ْ. وَأَصْلُهُ فِي "مُسْلِمٍ"، لَكِنْ قَالَ: زَجَرَ أَنْ يُقْبَرَ الرَّجُلُ بِاللَّيْلِ، حَتَّى يُصَلَّى عَلَيْهِ.
617. ``நீங்கள் நிர்பந்தத்திற்கு உள்ளானால் தவிர மய்யித்துகளை இரவில் அடக்கம் செய்யாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது. ஆனால், அதில், ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாத வரை அடக்கம் செய்வதைக் கண்டித்தார்கள் என உள்ளது.
618. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ -حِينَ قُتِلَ- قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ"} أَخْرَجَهُ الْخَمْسَةُ، إِلَّا النَّسَائِيَّ.
618. ஜஅஃபர்(ரலி) மூத்தா போரில் சொல்லப்பட்டு ஷஹீதான செய்தி வந்தபோது ``அவரின் குடும்பத்தாருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள். ஏனெனில், அவர்கள் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
619. وَعَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى المَقَابِرِ: {اَلسَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ، أَسْأَلُ اللهُ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ} رَوَاهُ مُسْلِمٌ.
619. அவர்கள் மண்ணறைகளின் பக்கம் சென்றால், ``முஃமினான முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்களுக்கு அமைதி நிலவட்டும்! அல்லாஹ் நாடினால், நாங்களும் உங்களிடம் வரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடமும் நாங்கள் சுகத்தை வேண்டுகிறோம்'' என்று கூறுமாறு இறைத்தூதர்(ஸல்) கற்றுக் கொடுத்தார்கள் என சுலைமான் இப்னு புரைதா தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
620. وَعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {مَرَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمَدِينَةِ، فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ: "اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ، يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ، أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ"} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَقَالَ: حَسَنٌ.
620. ``மண்ணறைவாசிகளே! உங்களுக்கு அமைதி நிலவட்டும்! அல்லாஹ் உங்களையும் எங்களையும் மன்னிக்கட்டும்! நீங்கள் சென்றுவிட்டீர்கள். நாங்கள் பின்னர் வருவோம்'' என்று இறைத்தூதர்(ஸல்) மதீனாவின் கப்ருகளைக் கடந்து செல்லும்போது மண்ணறைகளின் பக்கம் முகத்தைத் திருப்பிய நிலையில் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
621. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَسُبُّوا الْأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا} رَوَاهُ الْبُخَارِيُّ.
621. ``இறந்தவர்கள் குறித்த குறைகளைச் சொல்லித் திரியாதீர்கள். ஏனெனில், அவர்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
622. وَرَوَى التِّرْمِذِيُّ عَنِ الْمُغِيرَةِ نَحْوَهُ، لَكِنْ قَالَ: {فَتُؤْذُوا الْأَحْيَاءَ}. كِتَابُ الزَّكَاةُ
622. முகீரா(ரலி) வாயிலாக 620 வது ஹதீஸ் போன்றே திர்மீதியில் உள்ளது. ஆனால் அதில், ``நீங்கள் (இறந்தவர்களை திட்டுவதால்) உயிருள்ளவர்களை நோவினை செய்வீர்கள்'' எனும் வாசகம் உள்ளது.

623. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللهُ عَنْهُ إِلَى الْيَمَنِ...} فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ: {أَنَّ اللهَ قَدِ اِفْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، فَتُرَدُّ فِ يفُقَرَائِهِمْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
623. முஆத்(ரலி) அவர்களை யமன் தேசத்திற்குப் இறைத்தூதர்(ஸல்) அனுப்பினார்கள். (அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் கூறினார்) அதில், அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து (குறிப்பிட்ட அளவு) பெற்று தேவையுள்ள (ஏழை) மக்களிடம் திருப்பிவிடும்! அவர்களின் செல்வத்தில் `ஜகாத்'தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
624. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَبَا بَكْرٍ اَلصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ لَه ُ{هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِينَ، وَالَّتِيْ أَمَرَ اللهُ بِهَا رَسُولَهُ فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فَمَا دُونَهَا الْغَنَم ُفِي كُلِّ خَمْسٍ شَاةٌ، فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ أُنْثَ ىفَإِنْ لَمْ تَكُنْ فَابْنُ لَبُونٍ ذَكَر ٍفَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلَاثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُون ٍأُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْجَمَل ِفَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَفِيهَا جَذَعَة ٌفَإِذَا بَلَغَتْ سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ فَفِيهَا بِنْتَا لَبُونٍ، فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْجَمَلِ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ، وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلَّا أَرْبَعٌ مِنَ اَلْإِبِلِ فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا. وَفِي صَدَقَةِ اَلْغَنَمِ سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةِ شَاة ٍشَاةٌ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ إِلَى مِائَتَيْنِ فَفِيهَا شَاتَانِ، فَإِذَا زَادَتْ عَلَى مِائَتَيْنِ إِلَى ثَلَاثمِائَةٍ فَفِيهَا ثَلَاثُ شِيَاه ٍفَإِذَا زَادَتْ عَلَى ثَلَاثِمِائَةٍ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاة ٍشَاةً وَاحِدَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ، إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا. وَلَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ، وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ، وَلَا يُخْرَجُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ، إِلَّا أَنْ يَشَاءَ الْمُصَّدِّقُ، وَفِي الرِّقَة ِرُبُعُ الْعُشْرِ، فَإِنْ لَمْ تَكُن ْإِلَّا تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الْإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ، وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنِ اِسْتَيْسَرَتَا لَهُ، أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ الْحِقَّةُ، وَعِنْدَهُ الْجَذَعَةُ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْجَذَعَةُ، وَيُعْطِيهِ الْمُصَّدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
624. அனஸ்(ரலி) அவர்களுக்கு `ஜகாத்' கடமை குறித்து அபூ பக்ர்(ரலி) ஒரு செய்தி எழுதினார்கள். இது முஸ்லிம்கள் மீது இறைத்தூதர்(ஸல்) கடமையாக்கிய `ஜகாத்' தர்மம் ஆகும். இது தன் நபிக்கு அல்லாஹ் இட்ட கட்டளையாகும்.
``இருபத்தி நான்கு ஒட்டகங்களுக்குள் ஒவ்வோர் ஐந்து ஒட்டகங்களுக்கும் ஓர் ஆடு (`ஜகாத்' ஆகும்). ஒட்டகங்களின் எண்ணிக்கை 25 லிருந்து 35 வரை ஆகிவிட்டால், அவற்றில் ஓர் ஆண்டு பூர்த்தியான பெண் ஒட்டகத்தை `ஜகாத்' கொடுக்க வேண்டும். பெண் ஒட்டகம் இல்லையெனில், இரண்டு ஆண்டுகள் முழுமையான ஆண் ஒட்டகத்i `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 36 லிருந்து 45 வரை ஆகிவிட்டால், இரண்டு ஆண்டுகள் முழுமையான பெண் ஒட்டகத்தை `ஜகாத்'தாகத் தரவேண்டும். அவற்றின் எண்ணிக்கை 46 லிருந்து 60 வரை ஆகிவிட்டால், மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் பெண் ஒட்டகத்தை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 61 லிருந்து 75 வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு நான்கு ஆண்டுகள் முழுமையான பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 76 லிருந்து 90 வரை ஆகிவிட்டால், இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 91 லிருந்து 120 வரை ஆகிவிட்டால், மூன்று ஆண்டுகள் பருவமடைந்த பெண் ஒட்டகங்கள் இரண்டு `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 120க்கு மேல் ஆகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஓட்டகங்களுக்கும் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் ஒன்றும் அல்லது ஒவ்வோர் ஐம்பதுக்கும் மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். நான்கு ஒட்டகங்கள் உள்ள யாருக்கும் `ஜகாத்' இல்லை. ஆனால், அதன் உரிமையாளர் விருப்பப்பட்டு கொடுக்கலாம்.
காடுகளில் மேயும் ஆடுகள் 40 முதல் 120 வரை இருக்குமாயின், அவற்றிற்கு ஒர் ஆடு `ஜகாத்' ஆகும். அவை 120 லிருந்து 200 வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு இரண்டு ஆடுகள் `ஜகாத்' ஆகும். அவற்றின் எண்ணிக்கை 200 லிருந்து 300 வரையாகிவிட்டால், மூன்று ஆடுகள் `ஜகாத்' ஆகும். அவற்றின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு (என்ற விகிதத்தில்) `ஜகாத்' ஆகும். காடுகளில் மேயக் கூடிய ஆடுகள் நாற்பதுக்கு ஒன்று குறைவாய் இருந்தால், அவற்றிற்கு அதன் உரிமையாளர் விரும்பி கொடுத்தால் தவிர `ஜகாத்' இல்லை.
தனித்தனியாய் இருக்கும் பொருட்களை ஜகாத் கொடுப்பதற்கு அஞ்சி ஒன்றுசேர்க்க வேண்டாம். இன்னும், மொத்தமாக இருக்கும் பொருட்களை `ஜகாத்' கொடுப்பதற்கு அஞ்சி பிரித்துக் கொள்ளுதல் வேண்டாம். எந்தச் சொத்து கூட்டு முறையில் உள்ளதோ, அதனுடைய அளவுப்படி அதற்குரிய `ஜகாத்'தை கொடுக்க வேண்டும்.
`ஜகாத்' பொருட்கள் பல் விழுந்து வயது முதிர்ந்ததாகவோ, குறைபாடு உள்ளதாகவோ, ஆண் பிராணியாகவோ இருக்கக்கூடாது. வாங்குபவர் அதனை விரும்பிக் கேட்டால் தவிர.
வெள்ளியில், 190 திர்ஹமில் அதன் உரிமையாளர் விரும்பினால் தவிர `ஜகாத், கடமை இல்லை.
நான்கு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் `ஜகாத்' கொடுப்பதற்கு இல்லாதவரிடமிருந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகங்களைக் பெற்றுக் கொண்டு, அதனுடன் இரண்டு ஆடுகள் அல்லது இருபது திர்ஹம் சேர்த்து வசூலிக்க வேண்டும்.
அதேபோன்று ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் `ஜகாத்' கடமையாய் இருக்கும் நிலையில், அது அவரிடம் இல்லையெனில், அவரிடம் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் இருப்பின் `ஜகாத்' பெறுபவர் அதன் உரிமையாளரிடம் அதனைப் பெற்றுக் கொண்டு, இரண்டு ஆடுகள் அல்லது இருபது `திர்ஹம்' (ஜகாத் அளித்தவருக்கு) கொடுக்க வேண்டும் என்று அபூ பக்ர்(ரலி) `ஜகாத்' கடமை குறித்து தமக்கு செய்தி எழுதினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.