691. وَلِلْحَاكِمِ: {مَنْ أَفْطَرَ فِي رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ} وَهُوَ صَحِيحٌ.
691. ``ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்தவர் மீது களாவும் (திரும்ப நோன்பு நோற்பது) இல்லை; பரிகாரமும் இல்லை'' என ஹாகிமில் உள்ளது. இது `ஸஹீஹ்' எனும் தரத்திலும் உள்ளது.
692. وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ، وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ} رَوَاهُ الْخَمْسَةُ. وَأَعَلَّهُ أَحْمَدُ. وَقَوَّاهُ الدَّارَقُطْنِيُّ.
692. தன்னையும் மீறி (நோன்பு நோற்ற நிலையில்) வாந்தி எடுத்தவர் மீது (நோன்பு) களா இல்லை. இன்னும், (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்தவர் மீது (நோன்பு) களா இருக்கிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் அஹ்மத்(ரஹ்) இதனை `மஃலூல்' எனும் குறைபாடு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `பலமானது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
693. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، فَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ، حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ. قَالَ: "أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ"}.
693. மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டார்கள். அப்போது `குரா உல் கமீம்' எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்செய்து அதனை உயர்த்தினார்கள். மக்கள் அனைவரும் அதனைப் பார்த்தனர். இறைத்தூதர்(ஸல்) அதனைக் குடித்தார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ``அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
694. وَفِي لَفْظٍ: {فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ الصِّيَامُ، وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ، فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ الْعَصْرِ، فَشَرِبَ} رَوَاهُ مُسْلِمٌ.
694. நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாய் இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, இறைத்தூதர்(ஸல்) அஸ் ர் தொழுகைக்குப் பின்பு அதைக் குடித்தார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
695. وَعَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ رِضَى اللهُ عَنْهُ؛ أَنَّهُ قَالَ: {يَا رَسُولَ اللهِ! أَجِدُ بِي قُوَّةً عَلَى الصِّيَامِ فِي اَلسَّفَرِ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "هِيَ رُخْصَةٌ مِنَ اللهِ، فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ، وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ"} رَوَاهُ مُسْلِمٌ.وَأَصْلُهُ فِي "الْمُتَّفَقِ" مِنْ حَدِيثِ عَائِشَةَ؛ {أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ}
695. ``இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்கும் ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?'' என நான் வினவினான்.
``இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள சலுகையாகும். அதனை எடுத்துக் கொண்டவர் சிறப்படைந்தார். இன்னும், நோன்பு நோற்க விரும்பியவர் மீது குற்றமில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) இவ்வாறு) வினவினார் என்றும் ஆயிஷா(ரலி) இவ்வாறு பதிலளித்தார் என்றும் புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ளது.
696. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {رُخِّصَ لِلشَّيْخِ الْكَبِيرِ أَنْ يُفْطِرَ، وَيُطْعِمَ عَنْ كُلِّ يَوْمٍ مِسْكِينًا، وَلَا قَضَاءَ عَلَيْهِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَالْحَاكِمُ، وَصَحَّحَاهُ.
696. ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இஃப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியதில்லை என வயோதிகர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: தாரகுத்னீ, ஹாகிம்
இரண்டிலும் இது ஆதாரப்பூர்வமானதாகப் பதிவிடப்பட்டுள்ளது.
697. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ يَا رَسُولَ اللهِ. قَالَ: "وَمَا أَهْلَكَكَ؟" قَالَ: وَقَعْتُ عَلَى اِمْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ: "هَلْ تَجِدُ مَا تَعْتِقُ رَقَبَةً؟" قَالَ: لَا. قَالَ: "فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟" قَالَ: لَا. قَالَ: " فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟ " قَالَ: لَا، ثُمَّ جَلَسَ، فَأُتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ. فَقَالَ: "تَصَدَّقْ بِهَذَا"، فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا؟ فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: "اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ"} رَوَاهُ السَّبْعَةُ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
697. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்துவிட்டேன்'' எனக் கூறினார்.
``எது உன்னை அழித்தது?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``ரமளானில் (நோன்பு நோற்ற நிலையில்) என் மனைவியுடன் பாலுறவு கொண்டுவிட்டேன்'' என அவர் கூறினார்.
``உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``இயலாது'' என அவர் கூறினார்.
``அப்படியானால், உன்னால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``இயலாதே'' என அவர் கூறினார்.
பின்னர், (அங்கேயே) அவர் அமர்ந்து கொண்டார். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ``இதனை தர்மம் செய்வீராக!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களைவிட ஏழைகள் யாரும் இல்லையே?'' எனக் கூறினார்.
அதனைச் செவியுற்ற இறைத்தூதர்(ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். பின்னர், ``நீர் சென்று உம் குடும்பத்தாருக்கு இதனை வழங்குவீராக!'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், புகாரீ, முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதி மற்றும் இப்னு மாஜா.
இங்கு முஸ்லிமின் வாசம் இடம் பெற்றுள்ளது.
698. وَعَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ} مُتَّفَقٌ عَلَيْهِ.زَادَ مُسْلِمٌ فِي حَدِيثِ أُمِّ سَلَمَةَ: وَلَا يَقْضِي.
698. இறைத்தூதர்(ஸல்) உடலுறவு கொண்டு, குளிப்பு கடமையான நிலையில் அதிகாலைப்பொழுதை அடைந்து, பின்னர் குளிப்பார்கள். மேலும், நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
`அவர்கள் களாச் செய்யமாட்டார்கள்' எனும் வாசகம் உம்மு ஸலமா(ரலி) வாயிலாக முஸ்லிமில் அதிகப்படியாக உள்ளது.
699. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ صَوْمُ التَّطَوُّعِ وَمَا نُهِيَ عَنْ صَوْمِهِ
699. ``தன் மீது நோன்பு கடமையான நிலையில் இறந்தவரின் நோன்பை அவரின் பொறுப்பாளர் நோற்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
700. عَنْ أَبِي قَتَادَةَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ. قَالَ: "يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ"، وَسُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ. قَالَ: "يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ" وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ اَلِاثْنَيْنِ، قَالَ: "ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَبُعِثْتُ فِيهِ، أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ"} رَوَاهُ مُسْلِمٌ.
700. அரஃபா நாள் நோன்பு குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ``அது கடந்த ஆண்டு மற்றும் வரக்கூடிய ஆண்டின் பாவத்தை மன்னித்துவிடும்'' எனக் கூறினார்கள்.
இன்னும், ஆஷூராதின நோன்பு குறித்து கேட்கப்பட்டதற்கு, ``கடந்த ஆண்டின் பாவங்களை மன்னித்துவிடும்'' என்று கூறினார்கள்.
இன்னும் அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு குறித்துக் கேட்கப்பட்டதற்கு, ``அந்நாளில்தான் நான் பிறந்தேன். அதில் நான் (நபியாக) அனுப்பப்பட்டேன். அதில்தான் என் மீது (குர்ஆன்) இறக்கப்பட்டது'' என்று கூறினார்கள் என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: அரஃபா நாள், ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடும் துல் ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாளாகும்.
ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.
701. وَعَنْ أَبِي أَيُّوبَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ صَامَ رَمَضَانَ، ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ} رَوَاهُ مُسْلِمٌ.
701. ``ரமளான் மாதத்தின் நோன்பை நோற்றவர், ``பின்னர், அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்றால், அந்த ஆண்டு முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போல் ஆவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
702. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اللهُ إِلَّا بَاعَدَ اللهُ بِذَلِكَ الْيَوْمِ عَنْ وَجْهِهِ النَّارَ سَبْعِينَ خَرِيفًا} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
702. ``அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
703. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ، وَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
703. இறைத்தூதர்(ஸல்) நோன்பு நோற்காமல் இருக்க மாட்டார்கள் என நாங்கள் கூறும் அளவிற்கு அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்கள் என நாங்கள் கூறும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருப்பார்கள். ரமளான் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் முழுமையாக நோன்பு நோற்றவராக இறைத்தூதர்(ஸல்) அவர்களை நான் பார்க்கவில்லை. இன்னும், அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவு மற்ற மாதத்தில் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
704. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَمَرَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَصُومَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ: ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ} رَوَاهُ النَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
704. மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறு இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
705. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ. وَزَادَ أَبُو دَاوُدَ: {غَيْرَ رَمَضَانَ}.
705. ``கணவன் (உள்ளூரில் அவளுடன்) இருக்கும் நிலையில், அவனுடைய அனுமதி இல்லாமல் ஒரு பெண் (உபரி) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ``ரமளானைத் தவிர'' எனும் வாசகம் அபூ தாவூதில் அதிகப்படியாக உள்ளது.
706. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ: يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ النَّحْرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
706. ``யவ்முல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) இன்னும் யவ்முன் னஹ்ர் (ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்பதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
707. وَعَنْ نُبَيْشَةَ اَلْهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ لِلَّهِ} رَوَاهُ مُسْلِمٌ.
707. ``அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாளுக்குப் பின்புள்ள மூன்று நாள்கள்) உண்பதற்கும், பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உள்ள நாள்களாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நுபைஷா அல் ஹுதலிய்யீ (ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
708. وَعَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَا: {لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ اَلتَّشْرِيقِ أَنْ يُصَمْنَ إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ الْهَدْيَ} رَوَاهُ الْبُخَارِيُّ.
708. பலிப்பிராணி கிடைக்காதவரைத் தவிர்த்து மற்றவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் நோன்பு நோற்க அனுமதி இல்லை என இப்னு உமர்(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: புகாரீ
709. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخْتَصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ} رَوَاهُ مُسْلِمٌ.
709. ``வெள்ளிக்கிழமை இரவன்று நின்று வணங்குவதற்கு ஏனைய இரவுகளைவிட முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். வழக்கமாக (தொடர்ந்து) நோன்பு நோற்பவரைத் தவிர, வேறு யாரும் மற்ற நாள்களைவிட வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
710. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ، إِلَّا أَنْ يَصُومَ يَوْمًا قَبْلَهُ، أَوْ يَوْمًا بَعْدَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
710. ``உங்களில் யாரும் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்குப் பின்பு ஒரு நாள் நோன்பு நோற்றால் தவிர'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்