708. وَعَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَا: {لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ اَلتَّشْرِيقِ أَنْ يُصَمْنَ إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ الْهَدْيَ} رَوَاهُ الْبُخَارِيُّ.
708. பலிப்பிராணி கிடைக்காதவரைத் தவிர்த்து மற்றவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் நோன்பு நோற்க அனுமதி இல்லை என இப்னு உமர்(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: புகாரீ
709. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخْتَصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ} رَوَاهُ مُسْلِمٌ.
709. ``வெள்ளிக்கிழமை இரவன்று நின்று வணங்குவதற்கு ஏனைய இரவுகளைவிட முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். வழக்கமாக (தொடர்ந்து) நோன்பு நோற்பவரைத் தவிர, வேறு யாரும் மற்ற நாள்களைவிட வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
710. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ، إِلَّا أَنْ يَصُومَ يَوْمًا قَبْلَهُ، أَوْ يَوْمًا بَعْدَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
710. ``உங்களில் யாரும் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்குப் பின்பு ஒரு நாள் நோன்பு நோற்றால் தவிர'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
711. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا اِنْتَصَفَ شَعْبَانَ فَلَا تَصُومُوا} رَوَاهُ الْخَمْسَةُ، وَاسْتَنْكَرَهُ أَحْمَدُ.
711. ``ஷஅபான் மாதத்தின் பாதிப்பகுதியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் அஹ்மத்(ரஹ்) இதனை `முன்கர்' மறுக்கத் தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
712. وَعَنِ الصَّمَّاءِ بِنْتِ بُسْرٍ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ، إِلَّا فِيمَا اِفْتُرِضَ عَلَيْكُمْ، فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبٍ، أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهَا} رَوَاهُ الْخَمْسَةُ، وَرِجَالُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّهُ مُضْطَرِبٌ. وَقَدْ أَنْكَرَهُ مَالِكٌ. وَقَالَ أَبُو دَاوُدَ: هُوَ مَنْسُوخٌ.
712. கடமையாக்கப்பட்ட நோன்பைத் தவிர்த்து உங்களில் யாரும் சனிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள்! உங்களில் ஒருவருக்கு (அன்று எதுவும் கிடைக்கப் பெறாமல்) திராட்சைத் தோலையோ அல்லது ஏதேனும் மரக்குச்சியையோ பெற்றுக் கொண்டால், அதை(யாவது) மென்று கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸம்மா பின்த்து புஸ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் மாலிக்(ரஹ்) இதனை `முன்கர்' மறுக்கத் தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை மன்ஸூஃக் (இச்சட்டம் மாற்றப்பட்டுவிட்டது) எனக் குறிப்பிட்டுள்ளார்.
713. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَكْثَرَ مَا يَصُومُ مِنَ الْأَيَّامِ يَوْمُ السَّبْتِ، وَيَوْمُ الْأَحَدِ، وَكَانَ يَقُولُ: "إِنَّهُمَا يَوْمَا عِيدٍ لِلْمُشْرِكِينَ، وَأَنَا أُرِيدُ أَنْ أُخَالِفَهُمْ"} أَخْرَجَهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَهَذَا لَفْظُهُ.
713. இறைத்தூதர்(ஸல்) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக நோன்பு நோற்பவராய் இருந்தார்கள். ``இவை இரண்டும் இணைவைப்பாளர்களின் பெருநாள்கள். நான் அவர்களுக்கு மாறுசெய்ய விரும்புகிறேன்'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு இப்னு குஸைமாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
714. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ} رَوَاهُ الْخَمْسَةُ غَيْرَ اَلتِّرْمِذِيِّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَالْحَاكِمُ، وَاسْتَنْكَرَهُ الْعُقَيْلِيُّ.
714. அரஃபா நாளன்று அரஃபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோன்பு நோற்பதை இறைத்தூதர்(ஸல்) தடுத்துள்ளார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உகைலீ இதனை முன்கர் எனக் கூறியுள்ளார்.
715. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا صَامَ مَنْ صَامَ اَلْأَبَدَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
715. ``காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்கவே இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
716. وَلِمُسْلِمٍ عَنْ أَبِي قَتَادَةَ بِلَفْظِ: {لَا صَامَ وَلَا أَفْطَرَ}.بَابُ الِاعْتِكَافِ وَقِيَامِ رَمَضَانَ
716. அபூ கதாதா(ரலி) வாயிலாக, ``அவர் நோன்பு நோற்கவுமில்லை. நோன்பு நோற்காமல் இருக்கவுமில்லை'' எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.
717. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
717. ``இறைநம்பிக்கையோடும், நன்மையை நாடியும் ரமளானில் (இரவுகளில்) நின்று வணங்குபவரின் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
718. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ -أَيْ: اَلْعَشْرُ الْأَخِيرُ مِنْ رَمَضَانَ- شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
718. இறைத்தூதர்(ஸல்) ரமளானுடைய இறுதிப் பத்து நாள்களை) அடைந்தால், வரிந்து கட்டிக்கொண்டு இரவு முழுவதும் விழித்திருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். தம் குடும்பத்தாரையும் எழுப்பிவிடுவார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
719. وَعَنْهَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
719. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மரணத்தை அளிக்கும் வரை ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்கள் மரணமடைந்த பின்பு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாள்களில் இரவும் பகலும் வெளியில் செல்லாமல், தம் அனைத்துப் பணிகளையும் விட்டுவிட்டு இறைஇல்லத்தில் தங்கி இறைவணக்கத்தில் ஈடுபடுதல் இஃதிகாஃப் எனப்படும்.
720. وَعَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ، ثُمَّ دَخَلَ مُعْتَكَفَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
720. இறைத்தூதர்(ஸல்) இஃதிகாஃப் இருக்க விரும்பினால், ஃபஜ்ர் தொழுவார்கள். பின்னர், இஃதிகாஃபில் நுழைந்துவிடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
721. وَعَنْهَا قَالَتْ: {إِنْ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ - وَهُوَ فِي الْمَسْجِدِ - فَأُرَجِّلُهُ، وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ، إِذَا كَانَ مُعْتَكِفًا} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
721. இறைத்தூதர்(ஸல்) இறைஇல்லத்தில் இருக்கும் நிலையில் என் பக்கம் தம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை சீவிவிடுவேன். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது தம் சுய தேவைக்காகவே தவிர வீட்டினுள் நுழைய மாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
722. وَعَنْهَا قَالَتْ: {اَلسُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا، وَلَا يَشْهَدَ جِنَازَةً، وَلَا يَمَسَّ امْرَأَةً، وَلَا يُبَاشِرَهَا، وَلَا يَخْرُجَ لِحَاجَةٍ، إِلَّا لِمَا لَا بُدَّ لَهُ مِنْهُ، وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَلَا بَأْسَ بِرِجَالِهِ، إِلَّا أَنَّ الرَّاجِحَ وَقْفُ آخِرِهِ.
722. ``நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லாமலும், ஜனாஸாவில் கலந்துகொள்ளாமலும், பெண்ணைத் தொடாமலும், அவளைக் கட்டியணைக்காமலும், தன் முக்கியத் தேவைக்க்காகவே தவிர, வேறு எதற்காகவும் இறைஇல்லத்தை விட்டு வெளியில் வராமலும் இருப்பது இஃதிகாஃப் இருப்பவர் மீது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). இன்னும், நோன்பில்லாமல் இஃதிகாப் இல்லை. மேலும், தொழுகைக்காக மக்கள் கூடுகிற இறைஇல்லத்தில் தவிர வேறு எங்கும் இல்லை'' என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் இறுதிப் பகுதி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று என்பதே சரியாகும்.
723. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَيْسَ عَلَى الْمُعْتَكِفِ صِيَامٌ إِلَّا أَنْ يَجْعَلَهُ عَلَى نَفْسِهِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَالْحَاكِمُ، وَالرَّاجِحُ وَقْفُهُ أَيْضًا.
723. ``தனக்குத் தானே விதித்துக் கொண்டதைத் தவிர இஃதிகாஃப் இருப்பவர் மீது வேறு எந்த நோன்பும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: தாரகுத்னீ, ஹாகிம்
இதில் `மவ்கூஃப்' என்பதே சரியானதாகும்.
724. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ رِجَالاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ، فِي السَّبْعِ الْأَوَاخِرِ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَرَىرُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الْأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
724. நபித்தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ரு பிந்தைய ஏழு நாள்களில் (இருப்பதாக) கனவில் காண்பிக்கப்பட்டது. இது குறித்து, ``உங்கள் கனவுகள் எல்லாம் (ரமளானில்) கடைசி ஏழு நாள்களிலேயே சேர்ந்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன். யாரேனும் அதைத் தேடுபவராய் இருப்பின் கடைசி ஏழு நாள்களில் தேடிக் கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
725. وَعَنْ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي لَيْلَةِ الْقَدْرِ: {لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالرَّاجِحُ وَقْفُهُ. وَقَدْ اِخْتُلِفَ فِي تَعْيِينِهَا عَلَى أَرْبَعِينَ قَوْلًا أَوْرَدْتُهَا فِي "فَتْحِ الْبَارِي".
725. லைலத்துல்கத்ர் பற்றிக் குறிப்பிடுகையில், ``அது 27வது இரவு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா இப்னு அபீ ஸுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஆவியா(ரலி) அவர்களின் கருத்தே சரியானது. இது `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஃபத்ஹுல் பாரீ(புகாரீயின் விரிவிரை)யில் 40 கருத்துகள் உள்ளன.
726. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ يَا رَسُولَ اللهِ: أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيَّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ، مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: " قُولِي: اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"} رَوَاهُ الْخَمْسَةُ، غَيْرَ أَبِي دَاوُدَ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ.
726. ``இறைத்தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர் எதுவென அறிந்து கொண்டால் நான் என்ன கூறுவது?'' என நான் கேட்டேன்.
``யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்க கூடியவன்; மன்னிப்பை விரும்புபவன்; என்னை மன்னிப்பாயாக! எனக் கூறவும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்..
727. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَالْمَسْجِدِ الْأَقْصَى} مُتَّفَقٌ عَلَيْهِ.كِتَابُ الْحَجِّبَابُ فَضْلِهِ وَبَيَانِ مَنْ فُرِضَ عَلَيْهِ
727. ``மஸ்ஜிதுல்ஹராம், என்னுடைய இந்த (மதீனா) மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறு எந்த இறைஇல்லத்திற்கும் செல்ல (விசேஷ நன்மையை நாடி) பயணத் தயாரிப்புகளை மேற்கொள்ளாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்