725. وَعَنْ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي لَيْلَةِ الْقَدْرِ: {لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالرَّاجِحُ وَقْفُهُ. وَقَدْ اِخْتُلِفَ فِي تَعْيِينِهَا عَلَى أَرْبَعِينَ قَوْلًا أَوْرَدْتُهَا فِي "فَتْحِ الْبَارِي".
725. லைலத்துல்கத்ர் பற்றிக் குறிப்பிடுகையில், ``அது 27வது இரவு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆவியா இப்னு அபீ ஸுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஆவியா(ரலி) அவர்களின் கருத்தே சரியானது. இது `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஃபத்ஹுல் பாரீ(புகாரீயின் விரிவிரை)யில் 40 கருத்துகள் உள்ளன.
726. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ يَا رَسُولَ اللهِ: أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيَّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ، مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: " قُولِي: اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"} رَوَاهُ الْخَمْسَةُ، غَيْرَ أَبِي دَاوُدَ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ.
726. ``இறைத்தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர் எதுவென அறிந்து கொண்டால் நான் என்ன கூறுவது?'' என நான் கேட்டேன்.
``யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்க கூடியவன்; மன்னிப்பை விரும்புபவன்; என்னை மன்னிப்பாயாக! எனக் கூறவும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்..
727. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَالْمَسْجِدِ الْأَقْصَى} مُتَّفَقٌ عَلَيْهِ.كِتَابُ الْحَجِّبَابُ فَضْلِهِ وَبَيَانِ مَنْ فُرِضَ عَلَيْهِ
727. ``மஸ்ஜிதுல்ஹராம், என்னுடைய இந்த (மதீனா) மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறு எந்த இறைஇல்லத்திற்கும் செல்ல (விசேஷ நன்மையை நாடி) பயணத் தயாரிப்புகளை மேற்கொள்ளாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்
728. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
728. ``ஓர் உம்ராவிலிருந்து மறு உம்ரா வரையிலான காலங்களின் பாவங்களுக்கு, உம்ரா பரிகாரமாகும். பாவங்கள் கலக்காத ஹஜ்ஜின் கூலி, சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
729. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ! عَلَى النِّسَاءِ جِهَادٌ ؟ قَالَ: " نَعَمْ، عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: اَلْحَجُّ، وَالْعُمْرَةُ "} رَوَاهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَهْ وَاللَّفْظُ لَهُ، وَإِسْنَادُهُ صَحِيحٌ. وَأَصْلُهُ فِي الصَّحِيحِ.
729. ``இறைத்தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் உண்டா?'' என நான் கேட்டேன்.
``ஆம்! பெண்கள் மீது ஜிஹாத் உண்டு; ஆனால், அதில் போர் இல்லை. அது ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இங்கு இப்னு மாஜாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானது. இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
730. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ. فَقَالَ: يَا رَسُولَ اللهِ! أَخْبِرْنِي عَنِ الْعُمْرَةِ، أَوَاجِبَةٌ هِيَ؟ فَقَالَ: "لَا. وَأَنْ تَعْتَمِرَ خَيْرٌ لَكَ"} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ، وَالرَّاجِحُ وَقْفُهُ.وَأَخْرَجَهُ اِبْنُ عَدِيٍّ مِنْ وَجْهٍ آخَرَ ضَعِيفٍ.عَنْ جَابِرٍ مَرْفُوعًا: {اَلْحَجُّ وَالْعُمْرَةُ فَرِيضَتَانِ}.
730. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! எனக்கு உம்ராவைப் பற்றிக் கூறுங்கள். அது கடமையா?'' எனக் கேட்டார்.
``இல்லை! நீ உம்ரா செய்தால் உனக்குச் சிறப்பு என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இது `மவ்கூஃப்' எனும் தரம் என்பதே சரியாகும். இப்னு அதீயின் மற்றோர் அறிவிப்பின் படி `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் பதிவிடப்பட்டுள்ளது.
மற்றோர் அறிவிப்பின்படி ஜாபிர்(ரலி) வாயிலாக, `ஹஜ் மற்றும் உம்ரா கடமை என ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
731. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قِيلَ يَا رَسُولَ اللهِ، مَا السَّبِيلُ؟ قَالَ: " اَلزَّادُ وَالرَّاحِلَةُ "} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَالرَّاجِحُ إِرْسَالُهُ.
731. ``இறைத்தூதர் அவர்களே! ஸபீல் என்றால் என்ன? (எதைக் குறிக்கும்?)'' என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ``(ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான) வழிச் செலவு மற்றும் வாகனத்தைக் குறிக்கும்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இது `முர்ஸல்' எனும் தரம் என்பதே சரியாகும்.
732. وَأَخْرَجَهُ التِّرْمِذِيُّ مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ أَيْضًا، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
732. இப்னு உமர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் பதிவிடப்பட்டுள்ளது.
733. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ رَكْبًا بِالرَّوْحَاءِ فَقَالَ: "مَنِ اَلْقَوْمُ؟" قَالُوا: اَلْمُسْلِمُونَ. فَقَالُوا: مَنْ أَنْتَ؟ قَالَ: "رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" فَرَفَعَتْ إِلَيْهِ اِمْرَأَةٌ صَبِيًّا. فَقَالَتْ: أَلِهَذَا حَجٌّ؟ قَالَ: "نَعَمْ: وَلَكِ أَجْرٌ"} رَوَاهُ مُسْلِمٌ.
733. (மதீனாவிற்கு அருகில் உள்ள) ரவ்ஹா எனும் இடத்தில் இறைத்தூதர்(ஸல்) ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தபோது, ``நீங்கள் யார்?'' எனக் கேட்டார்கள்.
``நாங்கள் முஸ்லிம்கள்'' என அவர்கள் கூறினார்கள்.
``நீங்கள் யார்?'' என அவர்கள் கேட்டனர்.
``நான் இறைத்தூதர்'' என இறைத்தூதர்(ஸல்) பதிலுரைத்தார்கள். அப்போது, (தன்) பிள்ளையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த ஒரு பெண், ``இதற்கு ஹஜ் இருக்கிறதா?'' எனக் கேட்டார்.
``ஆமாம்! அதன் கூலி உனக்குரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
734. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَجَاءَتِ اِمْرَأَةٌ مَنْ خَثْعَمَ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ. فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ فَرِيضَةَ اللهُ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: "نَعَمْ" وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَفْظُ لِلْبُخَارِيِّ.
734. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் அமர்ந்திருந்தார். அப்போது, கஸ்அம் கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். உடனே ஃபழ்ல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் இறைத்தூதர்(ஸல்) திருப்பிவிட்டார்கள்.
அப்போது, ``இறைத்தூதர் அவர்களே! அடியார்கள் மீது ஹஜ் அல்லாஹ்வின் கடமையாக உள்ளது. என் தந்தை மிகவும் வயோதிகராகிவிட்டார். அவரால் வாகனத்தில் அமர இயலாது. எனவே, அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என (அப்பெண்) கேட்டார்.
``ஆம்! (செய்யலாம்) என்று கூறினார்கள். இது ஹஜ்ஜத்துல்வதாவில் நிகழ்ந்தது'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
735. وَعَنْهُ: {أَنَّ اِمْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: "نَعَمْ"، حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْكَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ، أَكُنْتِ قَاضِيَتَهُ؟ اِقْضُوا اللهَ، فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
735. ஜுஹைனா கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``(இறைத்தூதர் அவர்களே!) என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ் செய்யாமலேயே இறந்துவிட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?'' எனக் கேட்டார்.
``ஆமாம் நீ அவருக்காக ஹஜ் செய்! உன் தாய் மீது கடனிருந்தால், அதனை நீ நிறைவேற்றுவாயல்லவா? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வே மிகவும் உரிமை கொண்டவன் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
736. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا صَبِيٍّ حَجَّ، ثُمَّ بَلَغَ الْحِنْثَ، فَعَلَيْهِ أَنْ يَحُجَّ حَجَّةً أُخْرَى، وَأَيُّمَا عَبْدٍ حَجَّ، ثُمَّ أُعْتِقَ، فَعَلَيْهِ أَنْ يَحُجَّ حَجَّةً أُخْرَى} رَوَاهُ اِبْنُ أَبِي شَيْبَةَ، وَالْبَيْهَقِيُّ وَرِجَالُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّهُ اِخْتُلِفَ فِي رَفْعِهِ، وَالْمَحْفُوظُ أَنَّهُ مَوْقُوفٌ.
736. ``சிறுவராக இருக்கும்போது ஹஜ் செய்தவர், இளமையை அடைந்தால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும். அடிமையாய் இருக்கும்போது ஹஜ் செய்தவர் விடுதலையடைந்தால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு அபீ ஷைபா, பைஹக்கீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இது ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் உள்ளதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது `மவ்கூஃப்' என்பதே சரியாகும்..
737. وَعَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَقُولُ: {" لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ، وَلَا تُسَافِرُ اَلْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ " فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ اِمْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً، وَإِنِّي اِكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، قَالَ: "اِنْطَلِقْ، فَحُجَّ مَعَ اِمْرَأَتِكَ"} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
737. ``எந்த ஒரு பெண்ணுடனும் அவளை மணக்கத் தடைசெய்யப்பட்டவர் இல்லாமல் அவளுடன் வேறு யாரும் தனித்திருக்க வேண்டாம். இன்னும், எந்த பெண்ணும் திருமண பந்தம் தடை செய்யப்படாத ஓர் ஆணுடன் தனித்துப் பயணம் செய்ய வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்த நான் செவியுற்றுள்ளேன்.
அப்போது ஒருவர் எழுந்து, ``இறைத்தூதர் அவர்களே! என் மனைவி தனியாக ஹஜ் செய்யச் சென்றுள்ளார். நானோ இன்ன இன்ன போர்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்'' எனக் கூறினார்.
``நீ சென்று உன் மனைவியுடன் ஹஜ்ஜை மேற்கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
738. وَعَنْهُ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ، قَالَ: "مَنْ شُبْرُمَةُ؟" قَالَ: أَخٌ لِي، أَوْ قَرِيبٌ لِي، قَالَ: "حَجَجْتَ عَنْ نَفْسِكَ؟" قَالَ: لَا. قَالَ: "حُجَّ عَنْ نَفْسِكَ، ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالرَّاجِحُ عِنْدَ أَحْمَدَ وَقْفُهُ.
738. ஒருவர் (ஹஜ்ஜின்போதும்), ``ஷுப்ருமாவின் சார்பாக நான் ஆஜராகியுள்ளேன் எனக் கூறியதைச் செவியுற்ற இறைத்தூதர்(ஸல்), ``ஷுப்ருமா யார்?'' எனக் கேட்டார்கள்.
``என் சகோதரன்'' என்றோ, ``எனக்கு நெருக்கமானவர்'' என்றோ அவர் கூறினார்.
``முதலில் உனக்காக ஹஜ் செய்துகொள்! பின்னர் ஷுப்ராமாவிற்காக ஹஜ் செய்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பா!(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது `மவ்கூஃப்' என்பதே சரியாகும் என இமாம் அஹ்மத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
739. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {"إِنَّ اللهُ كَتَبَ عَلَيْكُمُ اَلْحَجَّ" فَقَامَ اَلْأَقْرَعُ بْنُ حَابِسٍ فَقَالَ: أَفِي كَلِّ عَامٍ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: " لَوْ قُلْتُهَا لَوَجَبَتْ، اَلْحَجُّ مَرَّةٌ، فَمَا زَادَ فَهُوَ تَطَوُّعٌ"} رَوَاهُ الْخَمْسَةُ، غَيْرَ التِّرْمِذِيِّ.
739. இறைத்தூதர்(ஸல்) ஒருமுறை) எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ``அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கியுள்ளான்'' எனக் கூறினார்கள்.
அப்போது, அக்ரவு இப்னு ஹாபிஸ்(ரலி) எழுந்து, ``இறைத்தூதர் அவர்களே! இது ஒவ்வோர் ஆண்டுமா?'' என வினவினார்.
``நான் அப்படிச் சொன்னால் அது கடமையாகிவிடும். ஹஜ் என்பது ஒருமுறைதான். அதற்கு மேல் செய்வது உபரியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
740. وَأَصْلُهُ فِي مُسْلِمٍ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ.بَابُ الْمَوَاقِيتِ
740. இதன் (739வது ஹதீஸின்) மூலம் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.
741. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ: اَلْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ الْمَنَازِلِ، وَلِأَهْلِ الْيَمَنِ: يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
741. மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா எனும் இடத்தையும், சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா எனும் இடத்தையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு யலம்லம் எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடமாக இறைத்தூதர்(ஸல்) ஆக்கினார்கள். இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக ஹஜ் மற்றும் உம்ராவிற்கு வருபவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்கள் ஆகும். இந்த எல்லைகளுக்குள் இருப்போர் தாம் வசிக்கும் இடங்களில் எங்கேனும் இஹ்ராம் அணியலாம். மக்காவாசிகள் இஹ்ராம் கட்டுமிடம் மக்காவே ஆகும் என இஹ்ராம் கட்டும் இடத்தை இறைத்தூதர்(ஸல்) நிர்ணயித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
742. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ اَلْعِرَاقِ ذَاتَ عِرْقٍ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
742. இராக் வாசிகளின் இஹ்ராம் கட்டுமிடம் `தாத்து இர்க்' எனும் மலைக்குன்று அருகே என இறைத்தூதர்(ஸல்) நிர்ணயித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
743. وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ مِنْ حَدِيثِ جَابِرٍ إِلَّا أَنَّ رَاوِيَهُ شَكَّ فِي رَفْعِهِ.
743. ஹதீஸ் 742 வது ஹதீஸின் மூலம் ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது. அதன் அறிவிப்பாளர் இது ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் உள்ளதா என சந்தேகிக்கிறார்.
744. وَفِي اَلْبُخَارِيِّ: {أَنَّ عُمَرَ هُوَ الَّذِيْ وَقَّتَ ذَاتَ عِرْقٍ}.
744. `தாத்து இர்க்' என்னும் இடத்தை இஹ்ராம் கட்டும் இடமாக உமர்(ரலி) அவர்களே ஆக்கினார்கள் என புகாரீயில் உள்ளது.