801. وَعَنْ عِكْرِمَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ كُسِرَ، أَوْ عُرِجَ، فَقَدَ حَلَّ وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ قَالَ عِكْرِمَةُ. فَسَأَلْتُ اِبْنَ عَبَّاسٍ وَأَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ؟ فَقَالَا: صَدَقَ} رَوَاهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.كِتَابُ الْبُيُوعِبَابُ شُرُوطِهِ وَمَا نُهِيَ عَنْهُ مِنْهُ
801. ``(இஹ்ராம் கட்டிய நிலையில்) யாருடைய காலேனும் ஒடிக்கப்பட்டால் அல்லது நொண்டியாகிவிட்டால் அவர் இஹ்ராமை விட்டு வெளியாகிவிட்டார். மறு ஆண்டு ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு அம்ரிடமிருந்து இக்ரிமா(ரலி) அறிவித்தார். மேலும் இது குறித்து அபூ ஹுரைரா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தான் கேட்டதற்கு ஹஜ்ஜாஜ் உண்மையே கூறினார் என்று கூறியதாகவும் அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

802. عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ الْكَسْبِ أَطْيَبُ؟ قَالَ: {عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ، وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ} رَوَاهُ الْبَزَّارُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
802. ``எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூயது?'' என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``மனிதன் தன் கையால் உழைத்துச் சம்பாதிக்கும் சம்பாத்தியமும், ஏமாற்றமில்லாமல் (நியாயமாகச்) செய்யும் வியாபார(த்தின் மூலம் கிடைக்கும் லாப)மும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ரிஃபாஆ இப்னுராஃபிஃ(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
803. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ: {إِنَّ اللهُ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ، وَالْمَيْتَةِ، وَالْخِنْزِيرِ، وَالْأَصْنَامِ.فَقِيلَ: يَا رَسُولَ اللهِ ! أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ، فَإِنَّهُ تُطْلَىبِهَا السُّفُنُ، وَتُدْهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: " لَا. هُوَ حَرَامٌ "، ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: " قَاتَلَ اللهُ الْيَهُودَ، إِنَّ اللهُ لَمَّا حَرَّمَ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
803. ``மதுபானம், தானாய் இறந்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை இறைவன் தடுத்துவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் இருந்தபோது கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! தானாய் இறந்தவற்றின் கொழுப்புக் குறித்துக் கூறுங்கள். ஏனெனில், அதைக் கொண்டு படகுகளை வழவழப்பாக்கவும், தோல்களைப் பதப்படுத்தவும் செய்கிறார்கள். இன்னும் மக்கள் அதன் மூலம் விளக்கும் எரிக்கின்றனர்'' என கேட்கப்பட்டது.
``கூடாது. அதுவும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறிவிட்டு, ``யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அல்லாஹ் அவர்களுக்கு (தானாய் இறந்த) அதன் கொழுப்புகளைத் தடை செய்தபோது, அவர்கள் அதனை உருக்கி விற்றார்கள், அதன் கிரயத்தை உண்டார்கள் என்றும் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
804. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِذَا اخْتَلَفَ الْمُتَبَايِعَانِ لَيْسَبَيْنَهُمَا بَيِّنَةٌ، فَالْقَوْلُ مَا يَقُولُ رَبُّ السِّلْعَةِ أَوْ يَتَتَارَكَانِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
804. ``விற்பவர் மற்றும் வாங்குபவருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டு, அதற்கான எவ்வித ஆதாரமும் இருவரில் ஒருவரிடம்கூட இல்லை எனில், பொருளுக்கு உரியவரின் பேச்சே ஏற்கத் தக்கதாகும்; அல்லது அப்பொருளை விட்டுவிட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
805. وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَمَهْرِ الْبَغِيِّ، وَحُلْوَانِ الْكَاهِنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
805. நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரியின் சம்பாத்தியத்தையும், குறிகாரனின் தட்சிணையையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
806. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ {أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ أَعْيَا. فَأَرَادَ أَنْ يُسَيِّبَهُ. قَالَ: فَلَحِقَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا لِي، وَضَرَبَهُ، فَسَارَ سَيْراً لَمْ يَسِرْ مِثْلَهُ، قَالَ: " بِعْنِيهِ بِوُقِيَّةٍ " قُلْتُ: لَا. ثُمَّ قَالَ: " بِعْنِيهِ " فَبِعْتُهُ بِوُقِيَّةٍ، وَاشْتَرَطْتُ حُمْلَانَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا بَلَغْتُ أَتَيْتُهُ بِالْجَمَلِ، فَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ رَجَعْتُ فَأَرْسَلَ فِي أَثَرِي. فَقَالَ: " أَتُرَانِي مَاكَسْتُكَ لِآخُذَ جَمَلَكَ؟ خُذْ جَمَلَكَ وَدَرَاهِمَكَ. فَهُوَ لَكْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا السِّيَاقُ لِمُسْلِمٍ.
806. ``நான் என்னுடைய ஒட்டகத்தில் அமர்ந்திருந்தேன். ஒட்டகம் களைத்துவிட்டது. நான் அதனை விட்டுவிட விரும்பினேன்.'' அதே நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) என்னை வந்தடைந்தார்கள். பின்னர், எனக்காகப் பிரார்த்தித்து, ஒட்டகத்தை அடித்தார்கள். உடனே அது இதற்கு முன்னர் செல்லாத அளவு (வேகமாகச்) செல்ல ஆரம்பித்தது.
அப்போது, ``அதை என்னிடம் ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிடு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இல்லை'' என நான் கூறினேன்.
பின்னரும், ``என்னிடம் விற்றுவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இதில் நான் என் வீடு வரை சவாரி செய்து கொள்வேன்'' என நிபந்தனையிட்டு நான் அதனை ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிட்டேன். நான் வீடு சென்றதும் ஒட்டகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் அதன் கிரயத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் (அதைப் பெற்றுக் கொண்டு) திரும்பியபோது, எனக்குப் பின்னால் ஆள் அனுப்பிய இறைத்தூதர்(ஸல்), ``உன்னுடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்ள நான் உனக்குத் குறைந்த விலை கொடுத்துவிட்டேன் என எண்ணுகிறாயா? உன்னுடைய ஒட்டகத்தையும் திர்ஹம்களையும் வாங்கிக் கொள். அது உனக்கே உரியது'' எனக் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
807. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَعْتَقَ رَجُلٌ مِنَّا عَبْداً لَهُ عَنْ دُبُرٍ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ. فَدَعَا بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
807. எங்களில் ஒருவர் தன் அடிமையிடம், ``என் மரணத்திற்குப் பின்பு விடுதலை பெற்றுக் கொள்'' எனக் கூறியிருந்தார். (ஆனால், அவர் கடன்பட்டிருந்தார். எனவே) இறைத்தூதர்(ஸல்) அந்த அடிமையை அழைத்து வரச் செய்து அவனை விற்பனை செய்தார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
808. وَعَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَضِيَ عَنْهَا-؛ {أَنَّ فَأْرَةً وَقَعَتْ فِي سَمْنٍ، فَمَاتَتْ فِيهِ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا. فَقَالَ: " أَلْقُوهَا وَمَا حَوْلَهَا، وَكُلُوهُ "} رَوَاهُ الْبُخَارِيُّ. وَزَادَ أَحْمَدُ. وَالنَّسَائِيُّ: فِي سَمْنٍ جَامِدٍ.
808. (உறைந்து கெட்டியாக இருந்த) நெய்யில் எலி விழுந்து இறந்துவிட்டது. அது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``அதையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (வெளியில்) எடுத்து எறிந்துவிட்டுச் சாப்பிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நபி(ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
அஹ்மத் மற்றும் நஸயீயில் உறைந்த நெய்யில் எனும் வாசகமும் அதிகப்படியாக உள்ளது.
809. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِي السَّمْنِ، فَإِنْ كَانَ جَامِداً فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا، وَإِنْ كَانَ مَايِعًا فَلَا تَقْرَبُوهُ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَقَدْ حَكَمَ عَلَيْهِ الْبُخَارِيُّ وَأَبُو حَاتِمٍ بِالْوَهْمِ.
809. ``நெய்யில் எலி விழுந்துவிட்டால், அது உறைந்ததாக இருந்தால் அதையும் அதைச் சுற்றி உள்ளதையும் (எடுத்து) எறிந்துவிடுங்கள். (மீதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்) அது உறையாததாக இருப்பின் அதனை நெருங்காதீர்கள்`` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் புகாரீ மற்றும் இமாம் அபூ ஹாதிம்(ரஹ்) இதனை வஹ்ம் எனக் சட்டம் கூறியுள்ளார்கள்.
810. وَعَنْ أَبِي اَلزُّبَيْرِ قَالَ: سَأَلْتُ جَابِرًا عَنْ ثَمَنِ السِّنَّوْرِ وَالْكَلْبِ؟ فَقَالَ: {زَجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ} رَوَاهُ مُسْلِمٌ.وَالنَّسَائِيُّ وَزَادَ: {إِلَّا كَلْبَ صَيْدٍ}.
810. பூனை மற்றும் நாய் விற்ற கிரயம் குறித்து ஜாபிர்(ரலி) அவர்களிடம் நான் வினவியதற்கு, அது குறித்து இறைத்தூதர்(ஸல்) கண்டித்துள்ளார்கள் என்று கூறினார் என அபூ ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், நஸயீ
``வேட்டை நாயைத் தவிர'' என்பது நஸயீயில் அதிகப்படியாய் உள்ளது.
811. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {جَاءَتْنِي بَرِيرَةُ، فَقَالَتْ: كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعٍ أُوَاقٍ، فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقُلْتُ: إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ وَيَكُونَ وَلَاؤُكِ لِي فَعَلْتُ، فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا. فَقَالَتْ لَهُمْ؛ فَأَبَوْا عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ، وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ. فَقَالَتْ: إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا إِلَّا أَنْ يَكُونَ الْوَلَاءُ لَهُمْ، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ، فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ فَفَعَلَتْ عَائِشَةُ، ثُمَّ قَامَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ خَطِيباً، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: " أَمَّا بَعْدُ، مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطاً لَيْسَتْ فِي كِتَابِ اللهِ مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، قَضَاءُ اللهِ أَحَقُّ، وَشَرْطُ اللهِ أَوْثَقُ، وَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ "} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ. وَعِنْدَ مُسْلِمٍ فَقَالَ: {اِشْتَرِيهَا وَأَعْتِقِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ}
811. பரீரா என்னிடம் வந்து, ``நான் என் எஜமானனிடம் ஒன்பது ஊக்கியாவின் பேரில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துதுள்ளேன். ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஊக்கியோ வீதம் நான் செலுத்த வேண்டும். எனவே, எனக்கு உதவுங்கள்'' எனக் கூறினார்.
``உன் எஜமானன் விரும்பினால், ஒன்பது ஊக்கியாவையும் ஒட்டு மொத்தமாக நான் செலுத்துகிறேன். ஆனால், உன் `வலா' (ஏனைய உரிமைகள்) எனக்குரியதாய் இருக்க வேண்டும். (அப்படியானால்) ``நான் (விடுதலை) செய்கிறேன்'' என நான் கூறினேன்.
பரீரா தன் எஜமானர்களிடம் சென்று இதனைக் கூறினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்தார்கள். அவர்களிடமிருந்து (பரீரா) என்னிடம் (மீண்டும்) வந்தார். அப்போது, என்னுடன் நபி(ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
``இதனை நான் அவர்களிடம் கூறியதற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. `வலா' அவர்களுக்கே உரியது என்று கூறுகின்றனர்'' என அவர் (பரீரா) கூறினார்.
அப்போது, இறைத்தூதர்(ஸல்) அதைச் செவியுற்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் செய்தியைக் கூறினார்கள்.
``அவரைப் பெற்றுக் கொண்டு, `வலா' உனக்கே உரியது என நிபந்தனையிடு. ஏனெனில், அடிமையை விடுதலை செய்தவருக்கே `வலா' உரியதாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவ்வாறே செய்தார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) மக்களுக்கு உரை நிகழ்த்த எழுந்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ``மக்களுக்கு என்னவாகிவிட்டதோ? அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாதவற்றை எல்லாம் நிபந்தனைகளாக முன் வைக்கின்றனர். அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் செல்லாதவையே. அவை நூறு நிபந்தனைகளாய் இருப்பினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே ஏற்கத் தகுந்ததாகும். இன்னும், அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி மிக்கதாகும். இன்னும் `வலா' (அடிமைகளை) விடுதலை செய்பவருக்கே உரியது'' என்று கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
``அவரை வாங்கிக் கொள்! விடுதலை செய்துவிடு! இன்னும், `வலா' உனக்கே உரியது என அவர்களிடம் நிபந்தனையிடு!'' என்று (இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என) முஸ்லிமில் உள்ளது.
812. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {نَهَى عُمَرُ عَنْ بَيْعِ أُمَّهَاتِ الْأَوْلَادِ فَقَالَ: لَا تُبَاعُ، وَلَا تُوهَبُ، وَلَا تُورَثُ، لِيَسْتَمْتِعْ بِهَا مَا بَدَا لَهُ، فَإِذَا مَاتَ فَهِيَ حُرَّةٌ} رَوَاهُ مَالِكٌ، وَالْبَيْهَقِيُّ، وَقَالَ: رَفَعَهُ بَعْضُ الرُّوَاةِ، فَوَهِمَ.
812. ``குழந்தை பெற்றெடுத்த அடிமைப் பெண்ணை விற்பதை உமர்(ரலி) தடுத்தார்கள். ``அவள் விற்கப்படவும் மாட்டாள், ஹிபா (அன்பளிப்பாக) வழங்கப்படவும் மாட்டாள், (எஜமானரிடமிருந்து) வாரிசு உரிமையும் பெறமாட்டாள். அவளிடம் முறையான பலன்களை (மட்டுமே) பெற்றுக் கொள்ளவேண்டும். எப்போது, (அவளின் எஜமானர்) இறந்துவிடுகிறபோது அவள் விடுதலையும் பெற்றுவிடுகிறாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: மாலிக், பைஹகீ
அறிவிப்பாளர்களில் சிலர் இதனை மர்ஃபூஃ எனக் கூறுகிறார்கள். இது தவறான எண்ணமாகும்.
813. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نَبِيعُ سَرَارِيَنَا، أُمَّهَاتِ الْأَوْلَادِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ، لَا نَرَىبِذَلِكَ بَأْسًا} رَوَاهُ النَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ وَالدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
813. இறைத்தூதர்(ஸல்) உயிருடன் இருந்தத காலத்தில் எங்கள் அடிமைப் பெண்களை அவர்கள் குழந்தை பெற்றெடுத்திருக்கும் நிலையில் நாங்கள் விற்பனை செய்துள்ளோம். அதனை அவர்கள் குற்றமாகக் கருதவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, இப்னு மாஜா, தாரகுத்னீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
814. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ} رَوَاهُ مُسْلِمٌ.وَزَادَ فِي رِوَايَةٍ: {وَعَنْ بَيْعِ ضِرَابِ الْجَمَلِ}.
814. (தேவைக்குப் போக) மீதமுள்ள தண்ணீரை விற்பதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில், ஒட்டகத்தைச் சினைக்கு விடுவதற்காகக் கிரயம் பெறுவதை இறைத்தூதர்(ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதும் உள்ளது.
815. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
815. (கால் நடைகளைச் சினைக்குவிடும்போது) ஆண்வர்க்கத்திற்குக் கிரயம் பெறுவதை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
816. وَعَنْهُ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ، وَكَانَ بَيْعاً يَتَبَايَعُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ: كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الْجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
816. இன்னும் பிறக்காமல் இருக்கும் உயிரினத்தை விற்பதை இறைத்தூதர்(ஸல்) தடை விதித்துள்ளார்கள். அறியாமைக் காலத்தில் (மக்கள்) இவ்வாறு வியாபாரம் செய்து வந்தனர். இந்த ஒட்டகம் குட்டிபோட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கி (அல்லது விற்று) கொள்கிறேன் என ஒரு மனிதர் கூறி வியாபாரம் செய்வதே இது என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
817. وَعَنْهُ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْوَلَاءِ، وَعَنْ هِبَتِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
817. `வலா' உரிமையை விற்பதையும் அதனை அன்பளிப்புச் செய்வதையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ முஸ்லிம்
818. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْحَصَاةِ، وَعَنْ بَيْعِ الْغَرَرِ} رَوَاهُ مُسْلِمٌ.
818. கல்லெறி வியாபாரத்தையும், மோசடி வியாபாரத்தையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: ஒரு கல்லை பொருள்களின் மீது எறிந்து, குறிப்பிட்ட பொருளின் மீது அக்கல் விழுந்தால், அப்பொருளை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிக் கொள்ளுதல் கல்லெறி வியாபாரமாகும். உன்னுடைய கல் எதன் மீதெல்லாம் விழுகிறதோ அவற்றை எல்லாம் நான் வாங்கிக் கொள்கிறேன் அல்லது நீ வாங்கிக் கொள் என நிபந்தனையிடுவதும் கல்லெறி வியாபாரமாகும். கல் எவ்வளவு தூரம் சென்று விழுகிறதோ, அந்த அளவு பூமியை இன்ன விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் கல்லெறிந்து வாங்குவதும் விற்பதும் கல்லெறி வியாபாரமாகும். தற்காலத்தில் குறிப்பிட்ட தொகையைச் முன்கூட்டியே செலுத்திவிட்டு வளையங்களை பொருட்களின் மீது எறிந்து வாங்குவதும் விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ள வியாபார வகையே ஆகும்.
819. وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنِ اِشْتَرَى طَعَاماً فَلَا يَبِعْهُ حَتَّى يَكْتَالَهُ} رَوَاهُ مُسْلِمٌ.
819. ``உங்களில் உணவுப் பொருளை வாங்குவோர், அதனை அளக்காத வரையில் விற்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
820. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
820. ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரங்கள் செய்வதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: தவனை முறை வியாபாரத்தை இது குறிக்கிறது. இன்னும், ஒரு பொருளை விற்பவர், வாங்குபவரிடமிருந்து இன்னொரு பொருளை எனக்கு இன்ன விலைக்குக் கொடுக்க வேண்டும் என நிபந்தையிட்டுச் செய்யும் வியாபாரமும் ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரம் என்பதைக் குறிக்கும்.