838. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ، فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا، فَقَالَ: " مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ " قَالَ: أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ. فَقَالَ: أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ؛ كَيْ يَرَاهُ النَّاسُ؟ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي} رَوَاهُ مُسْلِمٌ.
838. இறைத்தூதர்(ஸல்) ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது, அதனுள் தம் கையை நுழைத்தார்கள். அவர்களின் கையில் ஈரம் தட்டுப்பட்டதால், ``உணவுக்காரரே! இது என்ன?'' எனக் கேட்டார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! மழை பொழிந்துவிட்டது'' என அவர் கூறினார்.
``மக்கள் பார்க்கும் விதமாக அதனை நீ மேலே போட்டிருக்க வேண்டமா? (எனக் கூறி) ``ஏமாற்றுபவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
839. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ حَبَسَ الْعِنَبَ أَيَّامَ الْقِطَافِ، حَتَّى يَبِيعَهُ مِمَّنْ يَتَّخِذُهُ خَمْراً، فَقَدَ تَقَحَّمَ النَّارَ عَلَى بَصِيرَةٍ}. رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي " الْأَوْسَطِ " بِإِسْنَادٍ حَسَنٍ.
839. ``நன்கு தெரிந்து கொண்டே, அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பதுக்கி வைத்துப் பின்னர், மது தயாரிக்கும் நபருக்கு அதனை விற்பனை செய்பவர் நரகத்தில் புகுகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு புரைதா(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் தப்ரானீ(ரஹ்) தம்முடைய அல் அவ்ஸத் எனும் நூலில், ``ஹஸன்'' எனும் அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
840. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْخَرَاجُ بِالضَّمَانِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَضَعَّفَهُ الْبُخَارِيُّ، وَأَبُو دَاوُدَ وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ، وَابْنُ الْقَطَّانِ.
840. ``வாங்கிய பொருளைப் பயன்படுத்தி, அதன் மூலம் பெற்ற பலன் பொறுப்பாளரையே (பொருளை வாங்கியவரையே) சாரும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் புகாரீ மற்றும் இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் திர்மிதீ, இமாம் இப்னு குஸைமா, இமாம் இப்னுல் ஜாரூத், இமாம் இப்னு ஹிப்பான், இமாம் ஹாகிம் மற்றும் இமாம் இப்னுல் கத்தா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: விற்பனையாளரால் உத்திரவாதம் அளிக்கப்பட்டு விற்கப்பட்ட பொருள், உத்திரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்குள் கெட்டுவிடுமாயின், அந்த இடைப்பட்ட காலங்களில் பயன்படுத்தி பெறப்பட்ட பலன் பொருளை வாங்கியவருக்கே உரியது. இந்தப் பலனில் விற்றவருக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உத்திரவாதம் என்பது ழுரயசயவேநந மற்றும் றுயசசயவேல ஆகியவற்றைக் குறிக்கிறது.
841. وَعَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ دِيْنَارًا يَشْتَرِي بِهِ أُضْحِيَّةً، أَوْ شَاةً، فَاشْتَرَى شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ، فَأَتَاهُ بِشَاةٍ وَدِينَارٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، فَكَانَ لَوْ اِشْتَرَى تُرَابًا لَرَبِحَ فِيهِ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ. وَقَدْ أَخْرَجَهُ الْبُخَارِيُّ ضِمْنَ حَدِيثٍ، وَلَمْ يَسُقْ لَفْظَهُ.
841. ``குர்பானிக்காக கால்நடை அல்லது ஆடு வாங்குவதற்கு இறைத்தூதர்(ஸல்) என்னிடம் ஒரு தீனார் கொடுத்தார்கள். நான் அதில் இரண்டு ஆடுகள் வாங்கிவிட்டேன். பின்னர், அவற்றில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்பனை செய்தேன். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (மீதமுள்ள) ஓர் ஆட்டையும், தீனாரையும் கொண்டு வந்தேன். அப்போது, என் வியாபாரத்தில் அருள்வளம் கிடைத்திட இறைத்தூதர்(ஸல்) பிரார்த்தித்தார்கள். நான் அதில் மண்ணை வாங்கி இருந்தாலும் இலாபம் கிடைத்திருக்கும்'' என உர்வா அல் பாரிக்கீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் புகாரீ(ரஹ்) பல இடங்களில் இந்த ஹதீஸை குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதில் முழுமையான வாசகம் இல்லை.
842. وَأَوْرَدَ التِّرْمِذِيُّ لَهُ شَاهِداً: مِنْ حَدِيثِ حَكِيمِ بْنِ حِزَامٍ.
842. மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களின் ஒரு ஹதீஸ் திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
843. وَعَنِ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ شِرَاءِ مَا فِي بُطُونِ الْأَنْعَامِ حَتَّى تَضَعَ، وَعَنْ بَيْعِ مَا فِي ضُرُوعِهَا، وَعَنْ شِرَاءِ الْعَبْدِ وَهُوَ آبِقٌ، وَعَنْ شِرَاءِ الْمَغَانِمِ حَتَّى تُقْسَمَ، وَعَنْ شِرَاءِ الصَّدَقَاتِ حَتَّى تُقْبَضَ، وَعَنْ ضَرْبَةِ الْغَائِصِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ، وَالْبَزَّارُ، وَالدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
843. கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டியை அது ஈன்றெடுக்காதவரை விலை பேசுவதையும், மடுவிலிருக்கும் பாலை விலை பேசுவதையும், ஓடிவிட்ட அடிமையை விலை பேசுவதையும், பிரித்தளிக்கப்படாத கனீமத் பொருட்களை (போரில் ஈட்டிய பொருட்களை) விலை பேசுவதையும், கைக்குவராத தர்மப் பொருட்களையும், (தண்ணீரில்) மூழ்கி (பொருட்களை) எடுப்பவர் (எடுக்காத பொருளுக்கு) விலை பேசுவதையும் இறைத்தூதர்(ஸல்) தடைசெய்துள்ளார்கள் என ஆபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு மாஜா, இமாம் பஸ்ஸார் மற்றும் இமாம் தராகுத்னீ(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்கள்.
844. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَشْتَرُوا السَّمَكَ فِي الْمَاءِ؛ فَإِنَّهُ غَرَرٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَشَارَ إِلَى أَنَّ الصَّوَابَ وَقْفُهُ.
844. ``தண்ணீரில் இருக்கும் மீனை விலை பேசாதீர்கள்'' ஏனெனில், அது ஏமாற்றுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இதனை, ``மவ்கூஃப்'' எனும் தரம் என்றும் இமாம் அஹ்மத்(ரஹ்) சுட்டியுள்ளார்.
845. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ ثَمَرَةٌ حَتَّى تُطْعَمَ، وَلَا يُبَاعَ صُوفٌ عَلَى ظَهْرٍ، وَلَا لَبَنٌ فِي ضَرْعٍ} رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي " اَلْأَوْسَطِ " وَالدَّارَقُطْنِيُّ. وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَفِي " اَلْمَرَاسِيلِ " لِعِكْرِمَةَ، وَهُوَ الرَّاجِحُ. وَأَخْرَجَهُ أَيْضاً مَوْقُوفاً عَلَى اِبْنِ عَبَّاسٍ بِإِسْنَادٍ قَوِيٍّ، وَرَجَّحَهُ الْبَيْهَقِيُّ.
845. (சாப்பிடும் அளவுக்கு) நன்றாகப் பழுக்காதவரை பழத்தை விற்பதையும், ரோமத்தை அது (கால்நடையின்) முதுகில் இருக்கும்போது விற்பதையும், மடுவில் இருக்கும் பாலை விற்பதையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் தப்ரானீ(ரஹ்) தம்முடைய அல் அவ்ஸத் எனும் நூலிலும், இமாம் தாரகுத்னீ(ரஹ்) அவர்களும் பதிவிட்டுள்ளனர்.
இக்ரிமா(ரலி) வாயிலாக இமாம் அபூ தாவூத்(ரஹ்) தம்முடைய மராஸில் எனும் நூலில் இதனை பதிவிட்டுள்ளார்.
இன்னும் இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக மவ்சுஃப் எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது.
இமாம் பைஹகீ(ரஹ்) இதுவே சரியானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
846. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْمَضَامِينِ، وَالْمَلَاقِيحِ} رَوَاهُ الْبَزَّارُ، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
846. ``ஒரு முஸ்லிமுடன், தான் செய்துகொண்ட வியாபாரத்தை `இகாலா' செய்பவர் (செய்து முடிக்கப்பட்ட வியாபார ஒப்பந்தத்திற்குப் பின்பு விற்பவரோ அல்லது வாங்குபவரோ ஏதேனும் சிக்கலின் காரணமாக அவ்வொப்பந்தத்தைத் திரும்பப் பெறும்படி கோருதலாகும்) இவ்வாறு கோரியதால், அதனைத் திரும்பப் பெறுகிறவரின் சிக்கலை அல்லாஹ் (மறுமையில்) நீக்குகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
847. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ أَقَالَ مُسْلِماً بَيْعَتَهُ، أَقَالَهُ اللهُ عَثْرَتَهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ. بَابُ الْخِيَارِ
847. ஒட்டகத்தில் வயிற்றில் இருப்பவற்றையும், ஒட்டகத்தின் முதுகில் இருப்பவற்றையும் விற்பதை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ் ஸார்
ளயீஃப் எனும் பலவீமான அறிவிப்புத் தொடருடன் உள்ளது.
குறிப்பு: ஒட்டகத்தின் வயிற்றில் இருக்கும் குட்டியை விற்பதை மலாகிஹ் என்பர். ஒட்டகத்தை இனப்பெருக்கம் செய்வதற்காக விலைபேசுவதை மளாமீன் என்பர்.
848. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا تَبَايَعَ الرَّجُلَانِ، فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا وَكَانَا جَمِيعاً، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا اَلْآخَرَ، فَإِنْ خَيَّرَ أَحَدُهُمَا اَلْآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ فَقَدَ وَجَبَ الْبَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ تَبَايَعَا، وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ فَقَدْ وَجَبَ الْبَيْعُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
848. இரண்டு பேர் வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டால், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்லாமல், ஒன்றாய் இருக்கும் வரை அவர்களில் ஒவ்வொருவருக்கும் வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவரில் ஒருவர் மற்றவருக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கி, அதைப் பயன்படுத்தாமல் இருவரும் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டால், வியாபாரம் உறுதியாகிவிடும்; இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டு, இருவரில் யாருமே ஒப்பந்தத்தை முறிக்காமல் பிரிந்து சென்றுவிட்டால், அப்போதும் வியாபாரம் உறுதியாகிவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
849. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْبَائِعُ وَالْمُبْتَاعُ بِالْخِيَارِ حَتَّى يَتَفَرَّقَا، إِلَّا أَنْ تَكُونَ صَفْقَةَخِيَارٍ، وَلَا يَحِلُّ لَهُ أَنْ يُفَارِقَهُ خَشْيَةَ أَنْ يَسْتَقِيلَهُ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا اِبْنَ مَاجَهْ، وَالدَّارَقُطْنِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ. وَفِي رِوَايَةٍ: {حَتَّى يَتَفَرَّقَا مِنْ مَكَانِهِمَا}.
849. ``விற்பவரும் வாங்குபவரும் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து செல்லாதவரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையை இருவரும் பெற்றுள்ளனர், முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்ட ஒப்பந்தமாய் இருந்தாலே தவிர! எங்கே ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரோ என்று (அவசர அவசரமாகப்) பிரிந்து செல்வது அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ரு பின் ஷுஐப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ, தாரகுத்னீ, இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூத்
மற்றோர் அறிவிப்பில், அவ்விருவரும் தங்களின் இடத்திலிருந்து பிரிந்து செல்லாத வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையை இருவரும் பெற்றுள்ளனர் என உள்ளது.
850. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: ذَكَرَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ: {إِذَا بَايَعْتَ فَقُلْ: لَا خَلَابَةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الرِّبَا
850. தம் வியாபாரத்தில் ஏமாற்றம் ஏற்படுகிறது என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கூறியபோது, ``நீ (என்னுடன்) வியாபாரம் செய்தால் நான் ஏமாற்ற மாட்டேன். (எனவே, நீயும் என்னை ஏமாற்றாதே!) எனக் கூறிவிடு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
851. عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: " هُمْ سَوَاءٌ "} رَوَاهُ مُسْلِمٌ.
851. வட்டியை உண்பவரையும், அதனை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் இறைத்தூதர்(ஸல்) சபித்து, ``அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
852. وَلِلْبُخَارِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ أَبِي جُحَيْفَةَ.
852. ஹதீஸ் எண் 850 போன்றே புகாரீயில் அபூ ஜுஹைஃபா(ரலி) வாயிலாக பதிவிடப்பட்டுள்ளது.
853. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الرِّبَا ثَلَاثَةٌ وَسَبْعُونَ بَابًا أَيْسَرُهَا مِثْلُ أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ، وَإِنَّ أَرْبَى الرِّبَا عِرْضُ الرَّجُلِ الْمُسْلِمِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ مُخْتَصَراً، وَالْحَاكِمُ بِتَمَامِهِ وَصَحَّحَهُ.
853. வட்டிக்கு 73 வாசல்கள் உள்ளன. அதில் இலேசானது (கடைசித் தரம்) தன் தாயையே திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். ஒரு முஸ்லிமின் மானம் மரியாதையில் (அவனைப் பற்றிப் புறம்பேசி, கோள்சொல் , அவதூறு கூறி) தலையிடுவதே வட்டியில் பெரும் வட்டியாகும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இது ஹாகிமில் முழுவதுமாக அறிவிக்கப்பட்டு, ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
854. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَلَا تُشِفُّوابَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلَا تَبِيعُوا مِنْهَا غَائِباً بِنَاجِزٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
854. ``தங்கத்திற்கு பதிலாகத் தங்கத்தை சமமான அளவில் அல்லாமல், விற்கவேண்டாம். அவற்றில் ஒன்றின் மீது மற்றொன்றை அதிகப்படுத்த வேண்டாம். இன்னும், வெள்ளிக்குப் பதில், வெள்ளியை ஒன்றுக்கொன்று சமமான அளவில் அல்லாமல் விற்கவேண்டாம். அவற்றில் ஒன்றை மற்றொன்றைவிட அதிகப்படுத்த வேண்டாம். மேலும், அவற்றில் இருப்பதை (தற்போது கைவசம்) இல்லாததைக் கொண்டு விற்காதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
855. وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الذَّهَبُ بِالذَّهَبِ، وَالْفِضَّةُ بِالْفِضَّةِ، وَالْبُرُّ بِالْبُرِّ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ، وَالتَّمْرُ بِالتَّمْرِ، وَالْمِلْحُ بِالْمِلْحِ، مِثْلًا بِمِثْلٍ، سَوَاءً بِسَوَاءٍ، يَدًا بِيَدٍ، فَإِذَا اِخْتَلَفَتْ هَذِهِ الْأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ} رَوَاهُ مُسْلِمٌ.
855. ``தங்கத்திற்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, மணிக் கோதுமைக்கு மணிக் கோதுமை, வாற்கோதுமைக்கு வாற்கோதுமை, பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழம், உப்புக்கு உப்பு ஒரே தரத்தில், சம அளவில் (உடனுக்குடன் விற்பது குற்றமில்லை. இந்த இனங்கள் மாறுபடும்போது உடனுக்குடன் என்றால்) நீங்கள் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
856. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الذَّهَبُ بِالذَّهَبِ وَزْناً بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ، وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَزْناً بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ، فَمَنْ زَادَ أَوْ اِسْتَزَادَ فَهُوَ رِبًا} رَوَاهُ مُسْلِمٌ.
856. ``தங்கத்திற்குப் பதிலாகத் தங்கத்தை, எடைக்கு எடை ஒரே தரத்தில், இன்னும், வெள்ளிக்குப் பதிலாக வெள்ளியை, எடைக்கு எடையாக ஒரே தரத்தில் (விற்றுக் கொள்ளுங்கள்). இதில் அதிகமாக வாங்குவது, அல்லது கொடுப்பதே வட்டியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
857. وَعَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- {؛أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرٍ، فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا؟ " فَقَالَ: لَا، وَاللهِ يَا رَسُولَ اللهِ، إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالثَّلَاثَةِفَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " لَا تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ اِبْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا} وَقَالَ فِي الْمِيزَانِ مِثْلَ ذَلِكَ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَلِمُسْلِمٍ: "وَكَذَلِكَ الْمِيزَانُ".
857. இறைத்தூதர்(ஸல்) ஒரு நபரைப் பணியளராக நியமித்து கைபருக்கு அனுப்பினார்கள். அவர் (கைபரின்) உயர்தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார்.
``கைபரின் எல்லாப் பேரீச்சம் பழங்களும் இவ்வாறுதான் உள்ளனவா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை! இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் இரண்டு ஸாவுக்கு பதிலாக இந்த ஒரு ஸாவுவை வாங்குகிறோம். இன்னும், (சில நேரங்களில்) மூன்று ஸாவுக்குப் பதிலாக இரண்டு ஸாவு வாங்குகிறோம்'' எனக் கூறினார்.
``இவ்வாறு செய்யாதீர்கள். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களையும் சில திர்ஹம்களுக்குப் பதிலாக விற்பனை செய்யுங்கள்; பின்னர், சில திர்ஹம்களுக்குப் பதிலாக உயர்தரமான பேரீச்சம் பழங்களை விலைக்கு வாங்குங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். இன்னும், (தராசு) நிறுவையிலும் இது போன்றே என்றும் அறிவிப்பாளர் கூறினார்
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``நிறுத்தல் அளவையிலும் இவ்வாறே'' எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.