885. وَآخَرُ مَوْقُوفٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ عِنْدَ الْبُخَارِيِّ.بَابُ التَّفْلِيسِ وَالْحَجْرِ
885. புகாரீயில், ``மவ்கூஃப்'' எனும் தரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் வாயிலாக மற்றொரு ஹதீஸும் உள்ளது.
886. عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ قَدْ أَفْلَسَ، فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
886. ``திவால் ஆனவரிடம் ஒருவர் தன்னுடைய சொத்தை அப்படியே கண்டால் (அதை எடுத்துக் கொள்ள) அவரே மற்ற அனைவரையும் விட உரிமை பெற்றவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என அபூ ஹுரைரா(ரலி) கூற அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
887. وَرَوَاهُ أَبُو دَاوُدَ، وَمَالِكٌ: مِنْ رِوَايَةِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مُرْسَلًا بِلَفْظِ: {أَيُّمَا رَجُلٌ بَاعَ مَتَاعًا فَأَفْلَسَ الَّذِيْ اِبْتَاعَهُ، وَلَمْ يَقْبِضِ الَّذِيْ بَاعَهُ مِنْ ثَمَنِهِ شَيْئًا، فَوَجَدَ مَتَاعَهُ بِعَيْنِهِ، فَهُوَ أَحَقُّ بِهِ، وَإِنْ مَاتَ الْمُشْتَرِي فَصَاحِبُ الْمَتَاعِ أُسْوَةُ الْغُرَمَاءِ}.وَوَصَلَهُ الْبَيْهَقِيُّ، وَضَعَّفَهُ تَبَعًا لِأَبِي دَاوُدَ.
887. ஒருவர் ஒரு பொருளை விற்று, அதனை வாங்கியவர் அதன் விலையைச் சிறிதும் கொடுக்காத நிலையில் திவாலாகிவிட்டார் என்றால், விற்றவர் அப்பொருளை அவரிடம் (வாங்கியவரிடம்) அப்படியே காணும்போது, அதனை எடுத்துக் கொள்ள விற்றவரே அதிக உரிமை பெற்றவராவார். வாங்கியவர் இறந்துவிட்டால் பொருளின் உரிமையாளர் ஏனைய கடன்காரர்களைப் போன்றே ஆவார்'' என்று அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் வாயிலாக, அபூ தாவூத் மற்றும் மாலிக்கில் `முர்ஸல்' எனும் பதிவிடப்பட்டுள்ளது.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி, இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `ளயீஃப்' (பலவீனமானது) எனக் குறிப்பிட்டுள்ளார்.
888. وَرَوَى أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ: مِنْ رِوَايَةِ عُمَرَ بْنِ خَلْدَةَ قَالَ: أَتَيْنَا أَبَا هُرَيْرَةَ فِي صَاحِبٍ لَنَا قَدْ أَفْلَسَ، فَقَالَ: لَأَقْضِيَنَّ فِيكُمْ بِقَضَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ أَفْلَسَ أَوْ مَاتَ فَوَجَدَ رَجُلٌ مَتَاعَهُ بِعَيْنِهِ فَهُوَ أَحَقُّ بِهِ} وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَضَعَّفَ أَبُو دَاوُدَ هَذِهِ الزِّيَادَةَ فِي ذِكْرِ الْمَوْتِ.
888. எங்களில் ஒருவர் திவாலாகிவிட்டதால் அவர் விஷயமாக நாங்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (சட்டம் கேட்க) சென்றோம். இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளிப்பளித்தவாறே உங்கள் விஷயத்தில் நான் தீர்ப்பளிப்பேன்'' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்.
``ஒருவரின் பொருளுக்கு விலை கொடுக்காமல் அதனை (கடனாக) வாங்கியவர், திவாலானாலோ அல்லது இறந்துவிட்டாலோ, அப்பொருளை எடுத்துக் கொள்ளும் உரிமை விற்றவருக்கே உண்டு'' என்றும் கூறினார்கள் என அம்ர் இப்னு கலதா வாயிலாக அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜாவில் உள்ளது.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மரணம் குறித்த செய்தி மட்டும் `ளயீஃப்' என இமாம் அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
889. وَعَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَعَلَّقَهُ الْبُخَارِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
889. ``வசதி இருந்தும் (கடனைத் திரும்பத் தராமல்) தள்ளிப்போடுபவரின் மானம் போகும்படி அவரைக் கண்டிப்பதும் அவரைத் தண்டிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷர்யத் தன் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் புகாரீ(ரஹ்) இதனை முஅல்லக் எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
890. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أُصِيبَ رَجُلٌ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثِمَارٍ اِبْتَاعَهَا، فَكَثُرَ دَيْنُهُ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " تَصَدَّقُوا عَلَيْهِ " فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ، وَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِغُرَمَائِهِ: " خُذُوا مَا وَجَدْتُمْ، وَلَيْسَ لَكُمْ إِلَّا ذَلِكَ} رَوَاهُ مُسْلِمٌ.
890. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் வாங்கிய உணவுப் பொருள் (சேதமடைந்து) அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, அவருக்குக் கடன் அதிகமாகி அவர் திவாலாகிவிட்டார். எனவே, ``அவருக்குத் தர்மம் செய்யுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். மக்களும் அவருக்கு தர்மம் செய்தார்கள். இருப்பினும், அத்தொகை அவரின் கடனை அடைப்பதற்குப் போதுமானதாய் இல்லை. அதனால், ``கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதனைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு இல்லை'' என்று கடன்காரர்களிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
891. وَعَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَرَ عَلَى مُعَاذٍ مَالَهُ، وَبَاعَهُ فِي دَيْنٍ كَانَ عَلَيْهِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ مُرْسَلًا، وَرُجِّحَ.
891. இறைத்தூதர்(ஸல்) முஆத்(ரலி) அவர்களின் சொத்தை (விற்கவோ பயன்படுத்தவோ விடாமல்) நிறுத்தி, அவரின் கடனை அடைப்பதற்காக, அதனை விற்று, (அவரின் கடனை அடைத்து) விட்டார்கள் என கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை ``முர்ஸல்'' என்றும், ``முர்ஸல்'' என்பதே சரியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
892. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {عُرِضْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، وَأَنَا اِبْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي، وَعُرِضْتُ عَلَيْهِ يَوْمَ الْخَنْدَقِ، وَأَنَا اِبْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لِلْبَيْهَقِيِّ: " فَلَمْ يُجِزْنِي، وَلَمْ يَرَنِي بَلَغْتُ ". وَصَحَّحَهَا اِبْنُ خُزَيْمَةَ.
892. உஹுத் போரின்போது நான் இறைத்தூதர்(ஸல்) முன் நிறுத்தப்பட்டேன். அப்போது, எனக்குப் பதினான்கு வயதாக இருந்தது. (எனவே போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர், நான் அகழ் போரின்போது அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது. (எனவே போரில் கலந்து கொள்ள) எனக்கு இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``நான் பருவமடையும் வரை எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை'' என பைஹகீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
893. وَعَنْ عَطِيَّةَ الْقُرَظِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {عُرِضْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ قُرَيْظَةَ، فَكَانَ مَنْ أَنْبَتَ قُتِلَ، وَمَنْ لَمْ يُنْبِتْ خُلِّيَ سَبِيلُهُ، فَكُنْتُ فِيمَنْ لَمْ يُنْبِتْ فَخُلِّيَ سَبِيلِي} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
893. பனூகுறைழா போரின்போது (யூதர்களான) நாங்கள் நபி(ஸல்) அவர்களின் முன்பு நிறுத்தப்பட்டோம். (எங்களில்) அடிவயிற்று முடி முளைத்தவர்கள் கொல்லப்பட்டனர். முடி முளைக்காதவர்கள் உயிர் பிழைத்துக் கொள்ள விட்டுவிடப்பட்டனர். நான் (அடிவயிற்றில்) முளைக்காதவனாய் இருந்தேன். எனவே, என்னை உயிரோடு விட்டுவிட்டார்கள் என்று அதிய்யா அல் குரழீ(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இது இமாம் புகாரீ மற்றும் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும் என இமாம் ஹாகிம்(ரஹ்) கூறியுள்ளார்.
894. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَجُوزُ لِاِمْرَأَةٍ عَطِيَّةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا}وَفِي لَفْظٍ: {لَا يَجُوزُ لِلْمَرْأَةِ أَمْرٌ فِي مَالِهَا، إِذَا مَلَكَ زَوْجُهَا عِصْمَتَهَا} رَوَاهُ أَحْمَدُ، وَأَصْحَابُ السُّنَنِ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
894. ``கணவனின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் அன்பளிப்பு எதுவும் செய்யக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனாரிடமிருந்து அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில், ``கணவன் அவளின் பொறுப்பை ஏற்றிருக்கும்போது பெண்ணின் சொத்தில் அவளின் (தன்னிச்சையான) எந்த நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது'' என உள்ளது.
இதனை அபூ தாவூத் இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத்(ரஹ்) அனைவரும் பதிவு செய்துள்ளனர். மேலும், இமாம் ஹாகிம(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
895. وَعَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ اَلْهِلَالِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ: رَجُلٍ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ اِجْتَاحَتْ مَالَهُ، فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ، وَرَجُلٍ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُولَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَى مِنْ قَوْمِهِ: لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ، فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ} رَوَاهُ مُسْلِمٌ.بَابُ الصُّلْحِ
895. மூன்று நபர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பிறரிடம் (தம் தேவைகளைக்) கேட்பது அனுமதிக்கப்பட்டதல்ல. 1. (கடனுக்குப்) பொறுப்பேற்று, (அதைக் கொடுக்க முடியாமல் தவிக்கும்) ஒருவர் அதனை அடையும் வரை (பிறரிடம்) கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். பிறகு கேட்பதை அவர் நிறுத்திக் கொள்வார். 2. ஒருவருக்கு அழிவு ஏதும் ஏற்பட்டு, அதனால் அவர் நாசமடைந்திருந்தால் அவரின் செல்வம் தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் அளவுக்குக் கேட்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. 3. ஒருவருக்குப் பஞ்சம் (பெரும் நஷ்டம்) ஏற்பட்டு, ``உண்மையில் அவருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது'' என அவரின் சமூகத்தாரில் மூன்று போர் சாட்சி அளித்தால் அவரின் பஞ்சம் தீரும் வரை தர்மம் கேட்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என கபீஸா இப்னு முகாரிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
896. عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ، إِلَّا صُلْحاً حَرَّمَ حَلَالاً وَأَحَلَّ حَرَاماً، وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ، إِلَّا شَرْطاً حَرَّمَ حَلَالاً وَأَحَلَّ حَرَاماً} رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.وَأَنْكَرُوا عَلَيْهِ؛. لِأَنَّ رَاوِيَهُ كَثِيرَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوِ بْنِ عَوْفٍ ضَعِيفٌ.وَكَأَنَّهُ اِعْتَبَرَهُ بِكَثْرَةِ طُرُقِهِ.
896. ``அனுமதிக்கப்பட்டதை விலக்கப்பட்டது என்றும், விலக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் ஆக்காதவரை முஸ்லிம்கள் தம்மிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, அனுமதிக்கப்பட்டதை விலக்கப்பட்டதாகவும், விலக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்காத மற்ற நிபந்தனைகளில் முஸ்லிம்கள் நிலைத்திருக்கவும் வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு அவ்ஃப் முஸனீ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அறிவிப்புத் தொடரில் கஸீர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அம்ர் இப்னி அவ்ஃப் எனும் பலவீனமான நபர் இடம் பெறுவதால் (அறிஞர்களில்) பலர் இதனை ஆதாரப்பூர்வமானது என ஏற்கவில்லை. அதிகமான வழிகளில் இது அறிவிக்கப்படுவதால் திர்மிதீயில் ஆதாரப்பூர்வமானது என உள்ளது.
897. وَقَدْ صَحَّحَهُ اِبْنُ حِبَّانَ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ.
897. மேற்கண்ட ஹதீஸே அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக `ஸஹீஹ்' எனும் தரத்தில் இப்னு ஹிப்பானில் பதிவிடப்பட்டுள்ளது.
898. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" قَالَ: {لَا يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ؟ وَاللهِ لَأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ} مُتَّفَقٌ عَلَيْهِ.
898. ``ஓர் அண்டை வீட்டார் மற்றோர் அண்டை வீட்டாரின் சுவரில் உத்திரக் கட்டைப் பதிப்பதை தடுக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்து விட்டு, ``இது என்ன நிலை? இதனால் நீங்கள் முகம் திருப்பிக் கொள்வதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த சுன்னத்தை நான் உங்கள் தோள் புஜங்களின் மீது ஏற்றுவேன் (எடுத்துரைத்துக கொண்டே இருப்பேன்)'' எனக் கூறினார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
899. وَعَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَأْخُذَ عَصَا أَخِيهِ بِغَيْرِ طِيبِ نَفْسٍ مِنْهُ} رَوَاهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ فِي "صَحِيحَيْهِمَا". بَابُ الْحَوَالَةِ وَالضَّمَانِ
899. ``தன் சகோதரரின் மனமார்ந்த ஒப்புதல் இல்லாமல் அவரின் தடியைக் கூட எடுப்பதற்கு எந்த மனிதனுக்கு அனுமதி இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுமைத் அஸ் ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) தங்களின் `ஸஹீஹ்' என்ற நூலில் இதனைப் பதிவிட்டுள்ளனர்.
900. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، وَإِذَا أُتْبِعُ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةِ أَحْمَدَ: {فَلْيَحْتَلْ}.
900. வசதி உள்ளவர் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பது அநீதியாகும். உங்களில் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் (அடைக்க இயலாதவரின்) கடனை ஏற்றுக் அடைக்கும் பொறுப்பை ஒப்படைத்தால், அந்தச் செல்வந்தர் அதை ஏற்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
கடனுக்கு பொறுப்பு சுமத்தப்பட்டவர் அதை நிறைவேற்றட்டும் (அதே பொருளில்) அஹ்மதிலும் உள்ளது.
901. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {تُوُفِّيَ رَجُلٌ مِنَّا، فَغَسَّلْنَاهُ، وَحَنَّطْنَاهُ، وَكَفَّنَّاهُ، ثُمَّ أَتَيْنَا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: تُصَلِّي عَلَيْهِ؟ فَخَطَا خُطًى، ثُمَّ قَالَ: " أَعَلَيْهِ دَيْنٌ؟ " قُلْنَا: دِينَارَانِ، فَانْصَرَفَ، فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ، فَأَتَيْنَاهُ، فَقَالَ أَبُو قَتَادَةَ: اَلدِّينَارَانِ عَلَيَّ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أُحِقَّ الْغَرِيمُ وَبَرِئَ مِنْهُمَا الْمَيِّتُ؟ " قَالَ: نَعَمْ، فَصَلَّى عَلَيْهِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
901. ஒருவர் இறந்து விட்டார். நாங்கள் அவரைக் குளிப்பாட்டி, நறுமணம் பூசி, கஃபன் ஆடையிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துமாறு கோரினோம். அவர்கள் ஓர் அடி (முன்) எடுத்து வைத்துவிட்டு, ``இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?'' எனக் கேட்டார்கள்.
``இரண்டு தீனார் கடன் உள்ளது'' என நாங்கள் கூறினோம்.
(இதனைக் கேட்ட) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டார்கள். அப்போது, அபூ கதாதா அந்தக் கடனை, தான் பொறுப்பேற்று, ``அந்த இரண்டு தீனாருக்கும் நான் பொறுப்பேற்கிறேன்'' எனக் கூறினார்.
பின்னர், ``கடன்காரருக்கு உரிமை கிடைத்து விட்டது! இந்த மைய்யித்தும் அதனை விட்டு விலகிக் கொண்டது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அதற்கவர்,
``ஆமாம்'' எனக் கூறினார்.
உடனே இறைத்தூதர்(ஸல்) அதற்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
902. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: "هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ؟" فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى عَلَيْهِ، وَإِلَّا قَالَ: "صَلُّوا عَلَى صَاحِبِكُمْ" فَلَمَّا فَتَحَ اللهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ: "أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ، وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَيَّ قَضَاؤُهُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {فَمَنْ مَاتَ وَلَمْ يَتْرُكْ وَفَاءً}.
902. கடனாளியாக உள்ள யாருடைய ஜனாஸாவேனும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ``இவர் தன் கடனைப் பூர்த்தி செய்ய ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?'' எனக் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளார் எனக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லை என்றால், ``உங்கள் நண்பருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறிவிடுவார்கள்.
பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளைக் கொடுத்த பின்னர், ``நான் முஸ்லிம்களின் உயிர்கள் மீது அதிக உரிமை பெற்றவன். யாரேனும் இறந்துவிட்டு அவருக்குக் கடன் இருந்தால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பாகும்'' என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீயின் மற்றோர் அறிவிப்பில், ``இறந்தவர் தன் கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்லவில்லையோ (அவருக்கு நான் பொறுப்பேற்கிறேன்)'' என உள்ளது.
903. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا كَفَالَةَ فِي حَدٍّ} رَوَاهُ الْبَيْهَقِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.بَابُ الشَّرِكَةِ وَالْوَكَالَةِ
903. ``தண்டனையில் பொறுப்பேற்க அனுமதியில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
904. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {قَالَ اللهُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
904. ``இரண்டு பங்குதாரர்களில் ஒருவருக்கொருவர் மோசடி செய்யாமல் இருக்கும் காலம் வரை அவர்களுக்கிடையே நான் மூன்றாம் பங்குதாரராய் இருக்கிறேன். அவர்களில் யாரேனும் ஒருவர் மோசடி செய்தால், அவர்களிடமிருந்து நான் விலகிக் கொள்வேன்'' என அல்லாஹ் கூறுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.