943. عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا-؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ عَمَّرَ أَرْضاً لَيْسَتْ لِأَحَدٍ، فَهُوَ أَحَقُّ بِهَا} قَالَ عُرْوَةُ: وَقَضَى بِهِ عُمَرُ فِي خِلَافَتِهِ. رَوَاهُ الْبُخَارِيُّ.
943. ``யாருக்கும் சொந்தமில்லாத (புறம்போக்கு) நிலத்தை (சீரமைத்து) உயிர்ப்பித்தவருக்கே அது உரியது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா(ரஹ்) அறிவித்தார்.
``தம் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி), இதன் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள் எனவும் உர்வா(ரஹ்) கூறினார்.
நூல்: புகாரீ
944. وَعَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَحْيَا أَرْضاً مَيْتَةً فَهِيَ لَهُ} رَوَاهُ الثَّلَاثَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: رُوِيَ مُرْسَلاً. وَهُوَ كَمَا قَالَ، وَاخْتُلِفَ فِي صَحَابِيِّهِ، فَقِيلَ: جَابِرٌ، وَقِيلَ: عَائِشَةُ، وَقِيلَ: عَبْدُ اللهُ بْنُ عَمْرٍو، وَالرَّاجِحُ الْأَوَّلُ.
944. ``இறந்த (தரிசு) நிலத்தை உயிர்ப்பித்தவருக்கே அது உரியது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் நஸயீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இது `முர்ஸல்' எனும் தரம் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அறிவித்த தோழர் (பெயர்) ஜாபிர்(ரலி) என்றும், ஆயிஷா(ரலி) என்றும், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) என்றும் கருத்து வேறுபாடு உள்ளது. இருப்பினும், ஜாபிர்(ரலி) எனும் முதல் கூற்றே பலமானது.
945. وَعَنِ ابْنِ عَبَّاسٍ؛ أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
945. ``பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்ற செய்தியை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா அல்லைஸி(ரலி) அறிவித்தார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
குறிப்பு: ஜகாத்தாக வசூலிக்கப்பட்ட கால்நடைகள், ஜிஹாதிற்குரிய குதிரைகள், கனீமத்தாகவும், ஃகுமுஸ் (ஐந்தில் ஒரு) பங்காகவும் கிடைத்த கால்நடைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு, நபி(ஸல்) அவர்களும், ஃகலீஃபாக்களும் இத்தகையை மேய்ச்சல் பண்ணைகளை வைத்திருந்தனர். இது இஸ் லாமிய அரசுக்குரியது. இதில் தனியாருக்கு உரிமை இல்லை.
946. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا ضَرَرَ وَلَا ضِرَارَ} رَوَاهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَهْ.
946. ``பிறருக்கு நட்டம் ஏற்படுத்துவதும், நட்டம் ஏற்படுத்தப்படுதலும் அனுமதிக்கப்பட்டது அல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா
947. وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ مِثْلُهُ، وَهُوَ فِي الْمُوَطَّإِ مُرْسَلٌ.
947. அபூ ஸயீத்(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் போன்றே இப்னு மாஜாவிலும் உள்ளது. இன்னும், `முர்ஸல்' எனும் தரத்தில் இது முஅத்தாவிலும் உள்ளது.
948. وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ أَحَاطَ حَائِطًا عَلَى أَرْضٍ فَهِيَ لَهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ الْجَارُودِ.
948. ``(யாருக்கும் சொந்தமில்லாத) நிலத்தில் வேலிகளைப் போட்டுக் கொள்பவருக்கே அந்த இடம் உரியது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னுல் ஜாரூத்(ரஹ்) (ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
949. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ حَفَرَ بِئْرًا فَلَهُ أَرْبَعُونَ ذِرَاعًا عَطَنًا لِمَاشِيَتِهِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
949. ``ஒருவர் (பிறருக்குச் சொந்தமில்லாத) ஓர் இடத்தில் கிணறு தோண்டினால், அவர் தன்னுடைய கால்நடைகள் நீரருந்தச் செய்து ஒய்வெடுக்கும் இடமாக வைத்துக் கொள்ள (அதைச் சுற்றியுள்ள) நாற்பது முழம் இடம் அவருக்கே உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.
இதனை இப்னு மாஜா(ரஹ்) பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
950. وَعَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَهُ أَرْضًا بِحَضْرَمَوْتَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
950. `ஹளராமவ்த்' எனும் இடத்தில் உள்ள நிலத்தை எனக்கு அன்பளிப்பாக இறைத்தூதர்(ஸல்) கொடுத்தார்கள் என அல் கமா இப்னு வாயில் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
951. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ الزُّبَيْرَ حُضْرَ فَرَسِهِ، فَأَجْرَى الْفَرَسَ حَتَّى قَامَ، ثُمَّ رَمَى سَوْطَهُ. فَقَالَ: " أَعْطُوهُ حَيْثُ بَلَغَ السَّوْطُ} رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِيهِ ضَعْفٌ.
951. இறைத்தூதர்(ஸல்) ஸுபைர்(ரலி) அவர்களுக்கு அவரின் குதிரை ஓடிய தூரம் வரை நிலத்தை மானியமாகக் கொடுத்தார்கள். ஸுபைர்(ரலி) தம்முடைய குதிரையை அது நிற்கும் வரை ஓட்டிச் சென்றார்கள். அது ஓடி நின்ற பின் தம்முடைய சாட்டையை வீசினார்கள். அதற்காக அந்த சாட்டை சென்றடைந்த அளவு தூரமுள்ள நிலத்தை அவருக்குக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
952. وَعَنْ رَجُلٍ مِنَ الصَّحَابَةِ  قَالَ: {غَزَوْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُهُ يَقُولُ: النَّاسُشُرَكَاءُ فِي ثَلَاثٍ: فِي الْكَلَأِ، وَالْمَاءِ، وَالنَّارِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَرِجَالُهُ ثِقَاتٌ.بَابُ الْوَقْفِ
952. நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் இருந்தபோது ``புல், தண்ணீர், நெருப்பு ஆகிய மூன்று பொருட்களில் (உலக) மக்கள் அனைவரும் பங்குதாரர்களாவர். (இதனை யாரும் யாருக்கும் தடை செய்யக்கூடாது)'' என்று அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
953. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا مَاتَ الْإِنْسَانُ اِنْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالَحٍ يَدْعُو لَهُ} رَوَاهُ مُسْلِمٌ.
953. ``நிலையான தர்மம், பயன் தரக்கூடிய கல்வி மற்றும் தனக்காகப் பிரார்த்திக்கும் வாரிசு ஆகிய இம்மூன்றைத் தவிர மற்ற அனைத்து செயல்களும் மனிதன் இறந்துவிட்டால் துண்டிக்கப்படுகின்றன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
954. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {أَصَابَ عُمَرُ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ ! إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالًا قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْه ُ. قَالَ: " إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا ". قَالَ: فَتَصَدَّقَ بِهَا عُمَرُ، غَيْرَ أَنَّهُ لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُورَثُ، وَلَا يُوهَبُ، فَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ، وَفِي الْقُرْبَى، وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ صَدِيقاً} غَيْرَ مُتَمَوِّلٍ مَالً ا. مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {تَصَدَّقْ بِأَصْلِهِ، لَا يُبَاعُ وَلَا يُوهَبُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ}.
954. உமர்(ரலி) அவர்களுக்கு கைபரில் சிறிதளவு நிலம் கிடைத்தது. அது குறித்துக் கேட்பதற்கு அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! கைபரில் எனக்குக் கொஞ்சம் நிலம் கிடைத்துள்ளது. இதனைவிடச் சிறந்ததாக ஒரு சொத்தை நான் எப்போதும் பெற்றதில்லை'' எனக் கூறினார்.
``நீ விரும்பினால் அந்த நிலத்தை உன்னிடமே வைத்துக் கொள்! அதில் கிடைப்பவற்றை தர்மம் செய்துவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
எனவே, அந்த நிலத்தை விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ, அதில் வாரிசுரிமைப் பெறவோ முடியாது; அதனை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோருக்கும், வழிப்போக்கர்களுக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும் செலவிட வேண்டும்; அதைத் தன் சொத்தாக ஆக்கிக் கொள்ளாத நிலையில் அதன் பொறுப்பாளர்களும், அவர்களின் நண்பர்களும் அதில் உண்பது பாவமாகாது எனும் நிபந்தனையின் பேரில் அதன் வருமானத்தை உமர்(ரலி) தர்மம் செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
புகாரீயின் மற்றோர் அறிவிப்பில், ``அந்த நிலத்தை வக்ஃப் செய்துவிடுங்கள். அதனை விற்பனை செய்யவோ, அன்பளிப்பாக அளிக்கவோ கூடாது. ஆனால், அதன் விளைச்சலை இறைவழியில் செலவிட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
955. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {بَعَثَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ عَلَى الصَّدَقَةِ..} اَلْحَدِيثَ، وَفِيهِ: {وَأَمَّا خَالِدٌ فَقَدْ اِحْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتَادَهُ فِي سَبِيلِ اللهِ} مُتَّفَقٌ عَلَيْهِ. بَابُ الْهِبَةِ
955. உமர்(ரலி) அவர்களை தர்மப் பொருட்களை வசூலிக்க இறைத்தூதர்(ஸல்) நியமித்தார்கள். (நீண்ட ஹதீஸ்) ஃகாலித் தன்னுடைய உருக்குச் சட்டைகளையும், ஆயுதங்களையும் இறைவழியில் வக்ஃப் செய்தார் என்பதும் அதில் உள்ளது.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
956. عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {إِنِّي نَحَلْتُ اِبْنِي هَذَا غُلَامًا كَانَ لِي، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَكُلُّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا" ؟. فَقَالَ: لَا. فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " فَارْجِعْهُ"}. وَفِي لَفْظٍ: {فَانْطَلَقَ أَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُشْهِدَهُ عَلَى صَدَقَتِي. فَقَالَ: " أَفَعَلْتَ هَذَا بِوَلَدِكَ كُلِّهِمْ"؟. قَالَ: لَا. قَالَ: " اِتَّقُوا اللهَ، وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ " فَرَجَعَ أَبِي، فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: {فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي" ثُمَّ قَالَ: " أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا لَكَ فِي الْبِرِّ سَوَاءً"؟ قَالَ: بَلَى. قَالَ: " فَلَا إِذًا}.
956. என் தந்தை என்னை இறைத்தூதர்(ரலி) அவர்களிடம் அழைத்துச்சென்று, ``என் இந்த அடிமையை என் இந்த மகனுக்குக் கொடுத்துவிட்டேன்'' எனக் கூறினார்.
``உன் மகன்களில் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்துள்ளாயா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``அப்படியானால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில், ``என் தந்தை எனக்கு (அன்பளிப்பாக அடிமையை) அளித்ததற்கு நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்குவதற்காக அவர்களிடம் சென்றார்.
``நீர் உம் பிள்ளைகளி எல்லோருக்கும் இவ்வாறு செய்துள்ளீரா?'' என அவர்கள் கேட்டார்கள்.
``இல்லை'' என என் தந்தை கூறினார்.
``அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உன் பிள்ளைகளுக்கிடையே நியாயமாக நடந்துகொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். பின்னர் என் தந்தை அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என உள்ளது.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ``நீ என்னைத் தவிர்த்து மற்றவரை சாட்சியாக்கிக் கொள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். பின்னர், ``அவர்கள் அனைவருமே உன்னுடன் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ விரும்புகிறாயா?'' என்றும் இறைத்தூதர்(ஸல்) கேட்டடார்கள்.
`ஏனில்லை' என என் தந்தை கூறினார்.
`` அப்படியானால் நீ இவ்வாறு செய்யாதீர்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்றும் உள்ளது.
957. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِيْ يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ}.
957. ``தன்னால் அன்பளிப்புச் செய்யப்பட்டதை (கேட்டு) திரும்பப் பெறுபவர் வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் அதனை தின்னும் நாயைப் போன்றவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
``நாய் வாந்தி எடுத்து, பின்னர் அதைத் தானே திரும்பத் திண்பது போல, தான் அன்பளிப்புச் செய்ததை யார் திரும்பப் பெறுகிறானோ, அதைப் போன்றதொரு தீய செயல் நம்மில் (வேறு எதுவும்) இல்லை'' என புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
958. وَعَنِ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمْ-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ لِرَجُلٍ مُسْلِمٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ، ثُمَّ يَرْجِعَ فِيهَا ؛ إِلَّا الْوَالِدُ فِيمَا يُعْطِي وَلَدَهُ"} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
958. ``தன் மகனுக்குத் தந்தை கொடுத்த அன்பளிப்பைத் தவிர்த்து, பிறருக்கு, தான் அளித்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுதல் முஸ்லிமான எந்த ஓர் ஆணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர் மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா,
இமாம் திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
959. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ، وَيُثِيبُ عَلَيْهَا} رَوَاهُ الْبُخَارِيُّ.
959. இறைத்தூதர்(ஸல்) அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டும், அதற்குக் கைம்மாறு செய்து கொண்டும் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
960. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {وَهَبَ رَجُلٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةً، فَأَثَابَهُ عَلَيْهَا، فَقَالَ: " رَضِيتَ" ؟ قَالَ: لَا. فَزَادَهُ، فَقَالَ: "رَضِيتَ"؟ قَالَ: لَا. فَزَادَهُ. قَالَ: "رَضِيتَ" ؟ قَالَ: نَعَمْ.} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
960. நபி(ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். அதற்காக அவருக்கு இறைத்தூதர்(ஸல்) கைம்மாறு செய்து, ``மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவருக்கு இன்னும் அதிகப்படியாகக் கொடுத்து, அதிகப்படியாகக் கொடுத்து, ``மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுத்து, ``(இப்போது) மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என்று அப்போது கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
961. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَلِمُسْلِمٍ: {أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ وَلَا تُفْسِدُوهَا، فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أُعْمِرَهَا حَياً وَمَيِّتًا، وَلِعَقِبِهِ}. وَفِي لَفْظٍ: {إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُولَ: هِيَ لَكَ وَلِعَقِبِكَ، فَأَمَّا إِذَا قَالَ: هِيَ لَكَ مَا عِشْتَ، فَإِنَّهَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا}. وَلِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ: {لَا تُرْقِبُوا، وَلَا تُعْمِرُوا، فَمَنْ أُرْقِبَ شَيْئًا أَوْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لِوَرَثَتِهِ}.
961. ``ஆயுட்கால அன்பளிப்புச் செய்யப்பட்டவருக்கே அந்த அன்பளிப்பு உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``நீங்கள் உங்களுக்காக உங்கள் சொத்துக்களை இருப்பில் (வைத்து) கொள்ளுங்கள். அதனை வீணடித்து விடாதீர்கள். ஏனெனில், யாருக்கேனும் ஆயுட்கால அன்பளிப்பு (`உம்றா') கொடுக்கப்பட்டால், அவர் உயிர் வாழும் வரை, அது அவருக்கும், அவர் இறந்தப் பின்னர் அவரின் சந்ததிகளுக்கும் உரியதாகும்'' என உள்ளது.
மற்றோர் அறிவிப்பின்படி, ``இது உனக்கும் உன் சந்ததினருக்குமாகும்'' எனக் கூறி, அன்பளிப்புச் செய்யும் உம்றா எனும் ஆயுட்கால அன்பளிப்பையே இறைத்தூதர்(ஸல்) அனுமதித்தார்கள். ``நீ உயிர் வாழும் காலம் வரை இது உனக்குரியது என ஒருவர் (தெளிவாக) கூறி அன்பளிப்புச் செய்திருந்தால், அது உரிமையாளரிடமே திரும்பச் சென்று சேர்ந்துவிடும்.
அபூ தாவூத் மற்றும் நஸயீயின் மற்றோர் அறிவிப்பின்படி ``நீங்கள் ருக்பா, உம்றா, செய்யாதீர்கள். ஏனெனில், ருக்பா, உம்றா' செய்யக்கூடிய பொருள் யாருக்கு (அன்பளிப்பு) செய்யப்படுகிறதோ, அவரின் சந்ததியினருக்கே உரியதாகும்'' என உள்ளது.
962. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَأَضَاعَهُ صَاحِبُهُ، فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ. فَقَالَ: " لَا تَبْتَعْهُ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ …} اَلْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
962. அல்லாஹ்வின் பாதையில் அவர் சவாரி செய்து கொள்வதற்காக ஒருவருக்கு நான் குதிரை ஒன்றைக் கொடுத்தேன். ஆனால், அவர் அதனை வீணடித்து (குறைந்த விலைக்கு விற்க முற்பட்டு) விட்டார். அவர் அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிடுவார் என நான் எண்ணியதால் அதனை நானே வாங்கிக் கொள்வது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.
``அவர் ஒரு திர்ஹத்திற்கேனும் அதனை விற்றாலும் அதனை நீ வாங்காதே!'' என்று கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
குறிப்பு: இந்த ஹதீஸை முழுமையாக அறிந்திட காண்க: புகாரீ ஹதீஸ் எண் 2623