الشمائل المحمدية

54. باب ماجاء في سن رسول الله صلى الله عليه وسلم

அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா

54. மாண்புமிகு சய்யிதினா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வயது

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا زَكَرِيَا بْنُ إِسْحَاقَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ‏:‏ مَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ ثَلاثَ عَشْرَةَ سَنَةً يُوحَى إِلَيْهِ، وَ بِالْمَدِينَةِ عَشْرًا، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاثٍ وَسِتِّينَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டுக் கொண்டிருக்க, மக்காவில் பதின்மூன்று வருடங்களும், மதீனாவில் பத்து வருடங்களும் தங்கியிருந்து, தங்களின் அறுபத்து மூன்றாவது வயதில் வஃபாத் ஆனார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ جَرِيرٍ، عَنْ مُعَاوِيَةَ، أَنَّهُ سَمِعَهُ يَخْطُبُ، قَالَ‏:‏ مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَنَا ابْنُ ثَلاثٍ وَسِتِّينَ سنة‏.‏
முஆவியா (ரழி) அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறினார்கள்:

"நபி (ஸல்) அவர்கள் அறுபத்து மூன்று வயதில் காலமானார்கள். அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரும் அவ்வாறே (காலமானார்கள்). நானும் இப்போது அறுபத்து மூன்று வயதில் இருக்கிறேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ الْبَصْرِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، مَاتَ وَهُوَ ابْنُ ثَلاثٍ وَسِتِّينَ سَنَةً‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது, அவர்களுக்கு வயது அறுபத்து மூன்று.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالا‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، قَالَ‏:‏ أَنْبَأَنَا عَمَّارٌ مَوْلَى بَنِي هَاشِمٍ، قَالَ‏:‏ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ‏:‏ تُوُفِّيَ رَسُولُ اللَّه ِصلى الله عليه وسلم، وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறுபத்து ஐந்து வயதாக இருக்கும் போது மரணித்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் இஸ்நாத் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالا‏:‏ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ دَغْفَلِ بْنِ حَنْظَلَةَ‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قُبِضَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ، قَالَ أَبُو عِيسَى‏:‏ وَدَغْفَلُ، لا نَعْرِفُ لَهُ سَمَاعًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَكَانَ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
தஃக்பல் இப்னு ஹன்ழலா (ரழி) கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் இறக்கும் போது அவர்களுக்கு அறுபத்தைந்து வயது."

ஹதீஸ் தரம் : ஹஸன் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَهُ، يَقُولُ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلا بِالْقَصِيرِ، وَلا بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلا بِالآدَمِ، وَلا بِالْجَعْدِ الْقَطَطِ، وَلا بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعَرَةً بَيْضَاءَ‏.‏

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، نَحْوَهُ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக உயரமானவர்களாகவும் இருக்கவில்லை, குட்டையானவர்களாகவும் இருக்கவில்லை. அவர்களுடைய சருமம் வெளிர் வெண்மையாகவும் இருக்கவில்லை, மாநிறமாகவும் இருக்கவில்லை, அவர்களுடைய முடியும் நன்கு சுருண்டதாகவும் இருக்கவில்லை, படிந்து நேராகவும் இருக்கவில்லை. அல்லாஹ் (உயர்ந்தவன்) அவரை தன்னுடைய தூதராக அவருடைய நாற்பதாவது வயதில் அனுப்பினான், எனவே அவர்கள் மக்காவில் பத்து ஆண்டுகளும், மதீனாவில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள், மேலும் அல்லாஹ் அவரை அவருடைய அறுபதாவது வயதில் தன்னளவில் எடுத்துக்கொண்டான், அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபதுக்கும் குறைவான நரை முடிகளே இருந்தன.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)