صَحِيحُ ابْنِ حِبَّان

58. كِتَابُ الْكِهَانَةِ وَالسِّحْرِ

ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

58. ஜோசியம் மற்றும் சூனியம்

أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، وَعَبْدَانُ الْحَرَّانِيُّ، قَالَا: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: §سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكُهَّانِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسُوا بِشَيْءٍ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْجِنِّ يَحْفَظُهَا، فَيَقْذِفُهَا فِي أُذُنِ وَلِيِّهِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كِذْبَةٍ»
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிசொல்வோரைப் (ஜோதிடர்களைப்) பற்றிக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருளுமே இல்லை (அவர்களிடம் உண்மை ஏதுமில்லை)" என்று கூறினார்கள்.

அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சில நேரங்களில் அவர்கள் ஒரு விஷயத்தைக் கூறுகின்றனர், அது உண்மையாகி விடுகிறதே?" என்று கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (உண்மையான) அந்த ஒரு வார்த்தையாகும். அதை ஒரு ஜின் (வானவர்களிடமிருந்து) திருடி (மனனம் செய்து), தனது நண்பனின் (குறிசொல்பவனின்) காதில் போட்டுவிடுகிறது. பின்னர் அதனுடன் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பொய்களைக் கலந்து விடுகின்றனர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஆதாரப்பூர்வமானது
صحيح
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي سَمِينَةَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ، عَنْ أَبِي حَرِيزٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا قَاطِعٌ»
அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொடர்ந்து மது அருந்துபவனும் (அதிலேயே நிலைத்திருப்பவனும்), சூனியத்தை (உண்மை என) நம்புபவனும், (இரத்த) உறவை முறிப்பவனும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது
حسن