وعن سعد بن أبي وقاص رضي الله عنه في حديثه الطويل الذي قدمناه في أول الكتاب في باب النية أن رسول الله صلى الله عليه وسلم قال له: وإنك لن تنفق تبغي بها وجه الله إلا أجرت بها حتى ما تجعل في في امرأتك ((متفق عليه)).
சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் ‘எண்ணம்’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸில் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்காக உங்களுக்கு நிச்சயமாக கூலி வழங்கப்படும்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவுக்கும் கூட.”