இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6712ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، حَدَّثَنِي أَنَسُ بْنُ،
مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ
الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا ‏ ‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் அடையாளங்களில் சில: கல்வி அகற்றப்படும், அறியாமை நிலைபெறும் (மக்களிடையே பரவி ஆதிக்கம் செலுத்தும்), மது அருந்தப்படும், மற்றும் விபச்சாரம் வெளிப்படையாகப் பெருகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح