அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அஸர் தொழுகையைத் தொழுவோம். பின்னர் ஒருவர் பனூ அம்ர் இப்னு அவ்ஃப் (குலத்தாரிடம்) சென்றடைந்தால், (அங்கு சென்றடைந்த பிறகும்) அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதை அவர் காண்பார்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அஸ்ர் தொழுவோம். பின்னர் ஒருவர் பனூ அம்ர் இப்னு அவ்ஃப் (குலத்தாரின் வசிப்பிடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றால், அவர்கள் (அப்போதுதான்) அஸ்ர் தொழுது கொண்டிருப்பதைக் காண்பார்.