முஐகீப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் (தரையில் உள்ள) சிறுகற்களைச் சமப்படுத்துவதைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் (அவ்வாறு) செய்ய வேண்டியிருந்தால், ஒரு முறை மட்டும் (சமப்படுத்துங்கள்)."
முஐகீப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (மக்கள்) நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் (தரையை) சமப்படுத்துவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஒரு முறை (மட்டும்)' என்று கூறினார்கள். (ஸஜ்தாச் செய்யுமிடத்தில் மண்ணைச் சமப்படுத்துவது குறித்து, 'நீ (அவசியம்) செய்வதாக இருந்தால், ஒரு முறை செய்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)
முஐகீப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'தொழுகையின்போது கற்களைச் சமப்படுத்துவது (ஸஜ்தா செய்ய வசதியாக) பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'நீர் அவ்வாறு செய்யவேண்டுமென்றால், அது ஒருமுறை மட்டுமே இருக்கட்டும்.'
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَسْحِ الْحَصَى فِي الصَّلاَةِ إِنْ كُنْتَ فَاعِلاً فَمَرَّةً وَاحِدَةً .
முஐகீப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸஜ்தா செய்யும் இடத்திலுள்ள) கற்களைச் சீர்செய்வது குறித்து கூறினார்கள்: 'அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்றால், ஒரு முறை மட்டும் செய்யுங்கள்.''
(தொழுகையில்) ஸஜ்தா செய்யும் இடத்தில் உள்ள மண்ணைச் சமன்படுத்தும் ஒரு மனிதரைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ (அதைச்) செய்தே ஆக வேண்டும் என்றிருந்தால், ஒரேயொரு முறை மட்டும் (சமன்படுத்திக் கொள்)."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
ஸஜ்தா செய்யும் இடத்தில் (கிடக்கும்) மண்ணைச் சமப்படுத்தும் ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீர் (அவ்வாறு) செய்தே ஆக வேண்டும் என்றிருந்தால், ஒரு முறை மட்டும் (செய்து கொள்வீராக!)"
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
முஐகீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருவர் ஸஜ்தா செய்யும் இடத்தில் (தொழுகையின் போது) மண்ணைச் சமப்படுத்துவது குறித்து நபி (ஸல்) அவர்கள், “நீர் (அவ்வாறு) செய்வதாக இருந்தால், ஒரு முறை செய்வீராக” என்று கூறினார்கள்.
முஐகீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(தொழுகையில்) ஸஜ்தா செய்யும் இடத்திலுள்ள மண்ணைச் சமப்படுத்தும் ஒரு மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீர் (அதைச்) செய்வதாக இருந்தால், ஒரு முறை (மட்டும்) செய்வீராக!"