இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

10722முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا عُثْمَانُ أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ رَجُلًا فَقُلْتُ لَهُ بِأَيِّ سُورَةٍ قَرَأَ رَسُولُ اللهِ ﷺ الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ؟ فَقَالَ لَا أَدْرِي فَقُلْتُ أَلَمْ تَشْهَدْهَا؟ قَالَ بَلَى قُلْتُ وَلَكِنِّي أَدْرِي قَرَأَ بِسُورَةِ كَذَا وَكَذَا
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“அபூஹுரைரா அதிகமாக (ஹதீஸ்களை) அறிவிக்கிறார்” என்று மக்கள் கூறுகின்றனர். (ஒருமுறை) நான் ஒரு மனிதரைச் சந்தித்து அவரிடம், “நேற்றிரவு இஷா (அத்தமா) தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை (ஸூராவை) ஓதினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்குத் தெரியாது” என்றார். நான், “(அத்தொழுகையில்) நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டேன். அவர், “ஆம், (கலந்துகொண்டேன்)” என்றார். (அப்போது) நான் கூறினேன்: “ஆனால், எனக்குத் தெரியும். அவர்கள் இன்னின்ன அத்தியாயத்தை ஓதினார்கள்.”
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح