அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்குக் கொடுத்ததைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அதை நான் (தர்மமாக) கொடுக்கலாமா?'" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “ஆம், (உன் செல்வத்தை) முடிந்து வைத்துக்கொள்ளாதே! (அதாவது, தர்மம் செய்யாமல் சேமித்து வைக்காதே அல்லது கஞ்சத்தனம் செய்யாதே!) (அவ்வாறு செய்தால்) உனக்கு (வழங்கப்படுவதும்) தடுக்கப்பட்டுவிடும். (பொருளைக்) கணக்குப் பார்க்காதே! (அதாவது, தர்மம் செய்வதில் கஞ்சத்தனத்துடன் மிக நுணுக்கமாகக் கணக்கிடாதே!) (அவ்வாறு செய்தால்) உனக்கும் (உன் வாழ்வாதாரத்திலும்) கணக்குப் பார்க்கப்படும்” என்று கூறினார்கள்.