நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் தங்களிடமிருந்து அதிகமாகச் செவியுறுகிறேன்; ஆனால் அவற்றை நான் மறந்துவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், "உமது மேலங்கியை விரியும்" என்றார்கள்.
நான் விரித்தேன். அவர்கள் தமது கையால் அதில் அள்ளிப் போட்டார்கள். பிறகு, "இதை (உடலோடு) சேர்த்து அணைத்துக்கொள்வீராக" என்று கூறினார்கள். அதை நான் (என் உடலோடு) சேர்த்து அணைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு நான் எந்த ஹதீஸையும் மறந்ததில்லை.