இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7073ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ أَبِي،
عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ ‏ ‏ الْخَيْمَةُ دُرَّةٌ طُولُهَا فِي السَّمَاءِ سِتُّونَ مِيلاً فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ لِلْمُؤْمِنِ
لاَ يَرَاهُمُ الآخَرُونَ ‏ ‏ ‏.‏
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் (என்பது) ஒரு முத்தாகும். வானத்தில் அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு குடும்பத்தார் இருப்பார்கள். (அந்தக் கூடாரத்தின் பிரமாண்டத்தின் காரணமாக ஒரு மூலையில் இருப்பவர்களை) மற்றவர்கள் பார்க்க முடியாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح