அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி, குறைஷியர்களில் ஆறு பேருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அவர்களில் அபூஜஹ்ல், உமய்யா பின் கலஃப், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபூமுஐத் ஆகியோர் அடங்குவர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பத்ர் (களத்தில்) அவர்கள் வீழ்ந்து கிடப்பதை நான் பார்த்தேன். அது ஒரு வெப்பமான நாளாக இருந்ததால், வெயில் அவர்களை (அவர்களின் தோற்றத்தை) மாற்றியிருந்தது.