حَدَّثَنِي مَخْلَدُ بْنُ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) நபி (ஸல்) அவர்கள் (தம் கையால்) எவரைக் கொன்றார்களோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயத்தை ஏற்படுத்திய மக்கள் மீதும் அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது.