உம்மு ஸலமா (ரலி) அவர்களின் மகள் ஸைனப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் தாயார் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவழித்தால் எனக்கு நற்கூலி கிடைக்குமா? (ஏனெனில்) அவர்கள் என்னுடைய பிள்ளைகளும்தாமே!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்குச் செலவிடுங்கள்; நீங்கள் அவர்களுக்குச் செலவிட்டதற்கான நற்கூலி உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்காக நான் செலவு செய்தால் எனக்கு நற்கூலி உண்டா? அவர்களை நான் இப்படியே (கவனிக்காமல், ஆதரவற்ற நிலையில்) விட்டுவிட மாட்டேன்; அவர்கள் என் பிள்ளைகள்தானே!" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களுக்காக நீ செலவு செய்வதற்கு உனக்கு நற்கூலி உண்டு" என்று கூறினார்கள்.
وعن أم سلمة رضي الله عنها قالت: قلت يارسول الله، هل لي أجر في بني أبي سلمة أن أنفق عليهم، ولست بتاركتهم هكذا وهكذا إنما هم بني؟ فقال: نعم لك أجر ما أنفقت عليهم ((متفق عليه)).
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவு செய்தால் எனக்கு நற்கூலி உண்டா? (ஏனெனில்) அவர்களை நான் (அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக, கவனிப்பாரற்று) இங்கேயும் அங்கேயுமாக விட்டுவிட மாட்டேன்; நிச்சயமாக அவர்கள் என் பிள்ளைகள்தாமே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அவர்களுக்காக நீங்கள் செலவு செய்வதற்கு உங்களுக்கு நற்கூலி உண்டு” என்று கூறினார்கள்.