இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் கையை(த் தாமே) நக்கும் வரை அல்லது (அருவருப்புக் கொள்ளாத தம் மனைவி, குழந்தை போன்ற வேறொருவரை) நக்கச் செய்யும் வரை அதனைத் துடைக்க வேண்டாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் உணவு உண்டால், அவர் தமது கையைத் தாமே நக்கும் வரையில் அல்லது (தம் மனைவி, குழந்தை போன்ற வேறொருவரை) நக்கச் செய்யும் வரையில் அதைத் துடைக்க வேண்டாம்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحَنَّ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் சாப்பிட்டால், அவர் (தம் கையை) நக்கிக்கொள்ளும் வரை அல்லது (மற்றவர் மூலம்) அதை நக்கச் செய்யும் வரை தமது கையை கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்."
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا, فَلَا يَمْسَحْ يَدَهُ, حَتَّى يَلْعَقَهَا, أَوْ يُلْعِقَهَا } مُتَّفَقٌ عَلَيْهِ. [1] .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தமது கையைத் துடைக்க வேண்டாம், அவர் அதை (விரல்களில் ஒட்டியுள்ள உணவை) நக்கும் வரை, அல்லது (மற்றவர்களை, அதாவது குடும்பத்தினர் அல்லது செல்லப்பிராணிகளை) நக்கச் செய்யும் வரை (துடைக்க வேண்டாம்).”