இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3809ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏"‏‏.‏ قَالَ وَسَمَّانِي قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ فَبَكَى‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ், உனக்கு ‘லம் யகுனில் லதீன கஃபரூ’ (எனும் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை (ரழி) அவர்கள், "அவன் (அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். உடனே உபை (ரழி) (மகிழ்ச்சியால்) அழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4959ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ‏.‏ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏"‏‏.‏ قَالَ وَسَمَّانِي قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ فَبَكَى‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபையி (பின் கஅப்) (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ் எனக்கு, உமக்கு 'லம் யகுனில் லதீன கஃபரூ' (எனும் அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி கட்டளையிட்டான்." உபையி (ரழி) அவர்கள், "(அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். ஆகவே, உபையி (ரழி) அழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5423ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ،
عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ
الذَّهَبِ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் (ஆண்கள்) அணிவதைத் தடை செய்தார்கள் என்று அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5273சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை (ஆண்கள் அணிவதை) தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)