அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது, நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் தண்ணீருள்ள ஒரு தோல் பையையும், கூர்முனை கொண்ட ஒரு தடியையும் எடுத்துச் செல்வோம். அவர்கள் தண்ணீரால் தங்களைச் சுத்தம் செய்துகொள்வார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது, நானும் என்னைப்போன்ற இன்னொரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய ஒரு சிறிய தோல் பாத்திரத்தைக் கொண்டு வருவோம். அவர்கள் தண்ணீரால் சுத்தம் செய்துகொள்வார்கள்."