ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபிக்கும் (கட்டாயம் ஏற்கப்படும்) ஒரு பிரார்த்தனை உண்டு. அதைக்கொண்டு அவர் தன் சமுதாயத்தாருக்காக (இம்மையிலேயே) பிரார்த்தித்துவிட்டார். ஆனால், நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகச் சேமித்து வைத்துள்ளேன்.