இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6928ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، أَنَّهُ سَمِعَ
أَبَا الصِّدِّيقِ النَّاجِيَّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ ‏ أَنَّ رَجُلاً
قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَجَعَلَ يَسْأَلُ هَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَيْسَتْ
لَكَ تَوْبَةٌ ‏.‏ فَقَتَلَ الرَّاهِبَ ثُمَّ جَعَلَ يَسْأَلُ ثُمَّ خَرَجَ مِنْ قَرْيَةٍ إِلَى قَرْيَةٍ فِيهَا قَوْمٌ صَالِحُونَ
فَلَمَّا كَانَ فِي بَعْضِ الطَّرِيقِ أَدْرَكَهُ الْمَوْتُ فَنَأَى بِصَدْرِهِ ثُمَّ مَاتَ فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ
الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ الْعَذَابِ فَكَانَ إِلَى الْقَرْيَةِ الصَّالِحَةِ أَقْرَبَ مِنْهَا بِشِبْرٍ فَجُعِلَ مِنْ أَهْلِهَا ‏ ‏
‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒரு மனிதன் தொண்ணூற்றொன்பது பேரைக் கொன்றான். பின்னர் அவன் தனக்கு தவ்பா (பாவமன்னிப்பு) உண்டா என்று விசாரிக்கத் தொடங்கினான். அவன் ஒரு துறவியிடம் வந்து, அவரிடம் கேட்டான். அதற்கு அத்துறவி, ‘உனக்கு பாவமன்னிப்பு இல்லை’ என்று கூறினார். ஆகவே அவன் அத்துறவியையும் கொன்றுவிட்டான். பின்னர் அவன் (மீண்டும்) விசாரிக்கத் தொடங்கினான். பிறகு அவன் (தன்) ஊரிலிருந்து வெளியேறி, நல்லடியார்கள் வசிக்கும் (மற்றொரு) ஊருக்குச் சென்றான். வழியில் பாதி தூரத்தில் இருந்தபோது அவனை மரணம் அடைந்தது. அவன் தன் நெஞ்சை (நல்ல ஊரை நோக்கி) சாய்த்தான்; பின்னர் இறந்தான்.

அவன் விஷயத்தில் கருணைக்குரிய வானவர்களுக்கும், வேதனைக்குரிய வானவர்களுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. (அளந்து பார்க்கையில்) அவன் நல்லடியார்கள் வசிக்கும் ஊருக்கே ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே, அவ்வூராரில் ஒருவனாக அவன் ஆக்கப்பட்டான்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح